ஓலாவை ஒத்தை ஆளா துவம்சம் செய்யப்போகும் ஏத்தர்! மக்கள் வாங்கி குவிக்கிறாங்க!

இந்தியாவில் சமீபகாலமாக ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அபரமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ஏத்தர் நிறுவனங்களின் வருகை மார்கெட்டையே புரட்டிப் போட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் கடந்தாண்டு இறுதியிலிருந்து ஓலா மற்றும் ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை விண்ணை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏத்தர் நிறுவனம் கடந்த பிப்., மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 12,147 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் போது 495 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும்.

ஓலாவை ஒத்தை ஆளா துவம்சம் செய்யப்போகும் ஏத்தர்! மக்கள் வாங்கி குவிக்கிறாங்க!

ஏத்தர் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு பயங்கரமான டிமாண்ட் இருந்த நிலையில் இந்த ஸ்கூட்டருக்கான தயாரிப்பு குறைவாக இருந்தது தற்போது தமிழகத்தில் ஆலை அமைத்துத் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டதால் விற்பனையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மார்கெட்டில் ஓலா மற்றும் ஏத்தர் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே விற்பனையில் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஏத்தர் நிறுவனம் கடந்த பிப்., மாதம் மட்டும் 6 ஷோரூம்களை திறந்துள்ளது. இதன் மூலம் 100வது ஷோரூம் எண்ணிக்கையை ஏத்தர் நிறுவனம் கடந்துள்ளது. இது போக ஓலா நிறுவனம் 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பைனான்ஸ் பலன்களை வழங்குகிறது. கடந்த பிப்ரவரி மாத சாதனை பட்டியல் இத்துடன் மட்டும் முடியவில்லை. இன்னொரு விஷயமும் இருக்கிறது.

ஏத்தர் நிறுவனம் தனது 1 லட்சமாவது வாகனத்தையும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு டெலிவரி செய்தது. இதுபோக ஏத்தர் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது சார்ஜிங் கிரிட்களை திறந்து வருகிறது. அதன்படி தனது 1000மாவது சார்ஜிங் கிரிட் பகுதியையும் கடந்த மாதம் திறந்து வைத்தது. இப்படியாக ஏத்தர் நிறுவனத்திற் கடந்த பிப்ரவரி ஒரு மைல்கல் மாதம் என்றே சொல்ல வேண்டும்.

ஏத்தர் நிறுவனத்தின் 450 சிரீஸ் ஸ்கூட்டரின் விற்பனை கணிசமாக அதிகமாகியுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுவதும் ஒட்டு மொத்த மார்கெட்டில் 15.5 சதவீத பங்கை வைத்திருக்கிறது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் தனது ஷோரூம்களை திறந்துள்ள இடங்களில் மார்கெட்பங்கு 21 சதவீதமாக இருக்கிறது.

தற்போது ஏத்தர் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள 81 நகரங்களில் 108 அனுபவ மையங்களைத் திறந்துள்ளது. இதன் மூலம் பரபரப்பாக இந்திய முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா மக்களிடம் நல்ல பெயரை எடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2023, 18:30 [IST]
English summary
Ather records 495 percent growth in feb sales report
மேலும்... #ஏத்தர் #ather
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+