சென்னை வெள்ளத்தில் அடித்து சென்ற கார் ஓனர்களுக்கு ஆறுதல் செய்தி! காரை ரிப்பேர் பண்ண உதவ முன் வந்த நிறுவனம்!

சென்னை வெள்ளத்தில் மூழ்கிய ஆடி கார்களுக்காக இலவச ரோடு சைடு அசிஸ்டன்ட் புரோக்ராமை ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆடி கார் வாடிக்கையாளர்கள் அவர்களது கார் நீரில் மூழ்கினால் இதன் மூலம் சர்வீஸ் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டு தற்போது சென்னை மாநகரே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வெளியேற முடியாமல் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். முக்கியமாக சாலைகளிலும் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தண்ணீர் நிரம்பியதால் வாகனங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளன.

audi complimentary rsa

இதனால் சென்னையில் கார் வைத்திருக்கும் பலர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மக்களுக்கு உதவும் வகையில் ஆடி நிறுவனம் புதிதாக ரோடு சைடு அசிஸ்டன்ஸ் ப்ரோக்ராம் ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை பகுதியில் உள்ள ஆடி காரை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவர்களது காருக்கு ஏதாவது ரோடு சைடு அசிஸ்டன்ட் தேவை என்றால் அவர்கள் தொடர்பு கொள்வதற்காக டோல் ஃப்ரீ எண்னை (1800-103-6800 or 1800-209-6800) வழங்கி உள்ளது. வாகனத்தின் உரிமையாளர்கள் இந்த நம்பரை தொடர்பு கொண்டு ஆடி நிறுவனத்திடம் அவர்கள் காருக்கு உதவி வேண்டும் என்ற தகவலை சொல்ல முடியும்.

audi complimentary rsa

இந்த சேவை மூலம் ஆடி நிறுவனம் வாகனம் நிற்கும் இடத்திற்கே வந்து அந்த வாகனத்தை இருக்கும் இடத்திலிருந்து ரிப்பேர் செய்ய முடியுமா என பார்ப்பார்கள். ரிப்பேர் செய்ய முடிந்தால் அதை வாகனம் நிற்கும் இடத்தில் இருந்தே சரி செய்து உரிமையாளர்களிடம் வழங்கி விடுவார்கள். இது மட்டுமல்ல ஆடி நிறுவனத்தின் கார்கள் எதாவது பெட்ரோல் இல்லாமல் நின்றாலும் இந்த உதவி மூலம் பெட்ரோலை கார் இருக்கும் இடத்திற்கே பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் கார் நிறுத்தி இருக்கும் இடம் தண்ணீர் புகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என நீங்கள் கருதினால் வாகனத்தை எப்படி பாதுகாப்பாக நிறுத்துவது என நீங்கள் இந்த நம்பரில் உதவி கேட்கலாம். இதன் மூலமும் உங்களுக்கு உதவி செய்வார்கள். சிலர் இந்த மழை வெள்ளத்தில் கார் சாவியை தொலைத்து இருப்பார்கள் அவர்களுக்கு வேறு ஒரு சாவியை வழங்கவும் இந்த சேவை உதவுகிறது.

audi complimentary rsa

இதுபோக வெளியூரிலிருந்து சென்னை வந்த பல சென்னையில் இப்படியாக வெள்ள நீரில் கார் சிக்கிவிட்டால் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஆடி நிறுவனமே செய்து தருகிறது. மேலும் தண்ணீரில் மூழ்கி ரிப்பேரான கார்களை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணியையும் இந்த சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஆடி நிறுவனத்தின் இந்திய தலைவர் பல்பீர் சிங் பிளான் என்பவர் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: "எதிர்பாராத விதமாக சென்னை மாநகரம் தற்போது தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். இதனால் ஆர்எஸ்ஏ சர்வீஸ் புரோகிராமை வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்" என தெரிவித்தார்.

தற்போது சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஆடி நிறுவன கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த ரோடு அசிஸ்டென்ட்ஸ் புரோக்ராம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இது போன்ற புரோக்ராமை வழங்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வாகனங்கள் தான். பலர் தங்கள் வாகனத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தான சிலருக்கு வேறு வழியில்லாமல் வாகனத்தை தண்ணீரில் மூழ்க விட்டுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் உதவி செய்யும் வகையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 6, 2023, 16:29 [IST]
English summary
Audi complimentary rsa in chennai after cyclone michaung attack
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X