ஊட்டி டூ சென்னை சிங்கிள் சார்ஜ்ல அசால்டா போகலாம்! ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
ஆடி நிறுவனம் தனது க்யூ8 இ-டிரான் காரை ஒரு வழியாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது ரூபாய் 1.14 கோடி என்ற விலையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்கள் மற்றும் இந்த காரில் உள்ள வசதிகள் குறித்த தகவல்களை காணலாம் வாருங்கள்.
ஆடி நிறுவனம் இந்தியாவில் க்யூ8 இ-டிரான் என்ற எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த கார் ரூபாய் 1.14 கோடி இன்றைய எக்ஸ்ஷோரூம் விலையில் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலர் ஆப்ஷன்கள்: ஆடி க்யூ8 இ-டிரான் காரை பொறுத்தவரை மொத்தம் ஒன்பது வெளிப்புற பெயிண்ட் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. கிளேசியர் ஒய்ட், மேக்னெட் கிரே, கொரோனோஸ் கிரே, சொனேரியா ரேட், சியாம் பேஜ், மைத்தியோ பிளாக், பிளாஸ்மா ப்ளூ, மேன்ஹத்தான் கிரே, மெடிடியா பிரெளன், ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
வெளிப்புற டிசைன்: இந்தக் காரின் முன் பக்கம் கருப்பு நிறத்தில் மாற்றியமைக்கப்பட்ட கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது எல்இடி லேம்ப்களை இணைக்கும் வகையில் இருக்கிறது. ஆடியின் மோனோகிராம் லோகோ மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது. கிரில்லுக்கு மேலே கீழ்நோக்கி இருக்கும் வகையில் லைட் பார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் பக்கவாட்டை பொருத்தவரை 20 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பி பில்லர் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது "Q8 e-tron Quattro'என்ற எழுத்து ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கம் அச்சு வடிவ எல்இடி டெய்ல் லைட் வழங்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் ஸ்டிராப்பர் மற்றும் எல்இடி பார் ஆகியவை காரின் அகலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. க்யூ 8 பேட்ஜிங் டெயில் கேட்டிலும் பம்பரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 226மமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது.
உட்புற கட்டமைப்பு: இந்த ஆடி க்யூ8 இ-டிரான் காரை பொறுத்தவரை முற்பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ஹீட்டர் மற்றும் வென்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் மசாஜ் அம்சமும் இருக்கிறது. இது போக 360 டிகிரி கேமரா, 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பேனராமிக் சன் ரூப் ஆயில் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆடி க்யூ8 இ-டிரான் 50 காரை பொருத்தவரை 95 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 340 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்து விடும்.
ஆடி க்யூ8 இ-டிரான் 55 காரை பொருத்தவரை 114 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் மோட்டார் செட்அப் உள்ளது. இந்த மோட்டார் 408 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 664 என்எம் டார்க் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடும்.
இந்த காரில் ஆடி ஆட்டோ டிரைவ் சிஸ்டம் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ஆல்வில் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இதில் உள்ள 114 கிலோ வாட் ஹவர் பேட்டரி டபிள்யூஎல்டிபி சான்று பெற்றது. இது முழு சார்ஜில் 600 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டிசி பாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 10-80 சதவீத பேட்டரியை வெறும் 31 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும். இந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்ய 11 கிலோ வாட் சார்ஜருடன் 8.5 மணி நேரத்திலும், 22 கிலோவாட் ஏசி சார்ஜருடன் 4.5மணி நேரத்திலும் சார்ஜ் ஆகிறது.
இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. ரூபாய் 5 லட்சம் முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ளலாம். ஆடி நிறுவனம் இந்த காருக்கு ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் 10 ஆண்டுகள் வரை ரோடு அசிஸ்டன்ட் மற்றும் எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோ மீட்டர் வரை பேட்டரி வாரண்டியும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடி க்யூ8 இ-டிரான் காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த காரை வாங்க பலர் காத்திருக்கிறார்கள். இந்த காரின் விலை சற்று அதிகம் தான் என்றாலும் இந்த காரில் உள்ள அம்சங்களை பார்க்கும் போது பலர் இதை வாங்க வாய்ப்புள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









