இவ்வளவு விலை வச்சா இந்த காரை யாரு வாங்குவா? ஆடி க்யூ 8 லிமிடெட் எடிசன் காரை வாங்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?
ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது க்யூ8 காரின் லிமிடெட் எடிசன் வெற்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 1.18 கோடி என்ற விலையில் இந்த கார் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
ஆடி நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது கார்களை விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது க்யூ 8 என்ற காரை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் க்யூ 8 என்ற காரின் லிமிடெட் எடிசன் ஒன்றை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த கார் மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மைதோஸ் பிளாக், கிளேஸியர் ஒயிட் மற்றும் டேட்டோனா கிரே ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஆடி க்யூ 8 லிமிடெட் எடிஷன் காரில் முன்பக்கம் சிங்கிள் பிரேம் கிரில் ஆக்டகோனல் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹச்டி மெட்ரிக் எல்இடி லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் டைனமிக் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் காரின் டிசைனை பொருத்தவரை பக்கவாட்டில் கதவின் மத்திய பகுதியிலிருந்து பின்பக்க கதவு வரை பிளார் போன்ற டிசைன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆடி க்யூ 8 லிமிடெட் எடிசன் காரின் பி பில்லரில் உள்ள டிசைன் குவாட்டரின் காரின் டிசைனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த லிமிடெட் எடிசன் காரில் எக்ஸ்-லைன் வெளிப்புற கட்டமைப்பு மற்றும் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜில் வழங்கப்பட்டுள்ளன.
இது போக இந்த ஆடி க்யூ 8 லிமிடெட் எடிசன் காரில் முக்கிய ஹைலைட்களாக பிரேம் இல்லாத டோர்கள், ப்ரோநௌன்ஸ்டு ஏர் இன்டேக்குகள், கருப்பு நிற ரூஃப் ரயில்கள் 5 ஸ்போக் கொண்ட 21 இன்ச் கிராபைட் ஃபினீஷ் டைமண்ட் கட் அலாய் வீல்கள், காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இது போக இந்த காரில் இரண்டு ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏசி கண்ட்ரோல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் பானரோமிக் சன்ரூஃப், ஹெப்டிக் மற்றும் அக்யூஸ்ட் ஃபீட்பேக், எம்எம்ஐ செர்ச், ஃப்ரீ டெக்ஸ்ட் செர்ச், வேகமான டயலாக் சிஸ்டத்துடன் கூடிய லாங்குவேஜ் இன்ட்ராக்சன், மேம்படுத்தப்பட்ட கையெழுத்து ரெககனேஷன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், 3டி சவுண்ட் சிஸ்டம், இரண்டாவது ஸ்கிரீனிற்கான ஷார்ட் கட் ஆகிய அம்சங்களும் உள்ளது.
மேலும் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 8 ஏர் பேக்குகள் ஆடி பார்க்க அசிஸ்ட் சிஸ்டம் இத்துடன் பார்க்கிங் எய்ட் பிளஸ், ஆடி ப்ரீசென்ஸ் பேசிக் ரியல் நியூ கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேசன் புரோக்ராம் ஆகிய இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜின் இதை பொருத்தவரை ஆடி நிறுவனம் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ 48 வி மைல்டு ஹைபிரிட் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இந்த இன்ஜின் 340 எச்பி பவரையும் 500 என்எம் டார்க்வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு டிப்ட்ரானிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது நான்கு வீல்களுக்கும் பவரை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடி கிரியேட் கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் எட்டிபிடித்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட காராக இருக்கிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூபாய் 1,18, 46,000 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இது லிமிடெட் எடிஷன் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் தயாரிக்கப்படும். அதன் பின்பு இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்படும் என ஆடி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இந்த க்யூ8 காரின் லிமிடெட் எடிசன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதன் விலை அதிகமாக இருப்பதால் விற்பனை குறைவாக தான் இருக்கும் இருந்தாலும் இந்த கார் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








