இந்திய தயாரிப்பு காரை டெலிவரி பெற்றிருக்கும் இந்த வெளிநாட்டு பெண் யாருனு தெரியுதா? ஆச்சரியப்பட வச்சுட்டாங்க!
மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரையே வெளிநாட்டு பெண் ஒருவர் டெலிவரி பெறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த பெண் யார்? இவருடைய வீடியோ ஏன் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சமீப காலமாக இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு சான்றாக ஏற்றுமதி புள்ளி விபரம் இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் பல, குறிப்பாக, வாகனங்கள் அதிகளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்திய தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வெளிநாட்டு பெண் ஒருவர் ஆவலுடன் வந்து டெலிவரி பெற்றுச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் வேறு யாரும் இல்லைங்க, பிரபல முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் டீமைச் சேர்ந்த மேத்யூ ஹேடன்-னின் மகள்தான் அவர்.
இந்திய பிராண்டின் ஆஸ்திரேலியா அம்பாசிடராக மேத்யூ ஹேடன் இருக்கின்றார். இதன் அடிப்படையில் சமீபத்தில் அவருக்கு பிராண்ட் நியூ எக்ஸ்யூவி700 கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையிலேயே அவருடைய மகளும் எக்ஸ்யூவி 700 காரை ஆஸ்திரேலியாவில் டெலிவரிப் பெற்றிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

மஹிந்திராவின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்யூவி700 காட்சியளிக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் செம்ம டிமாண்ட் இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இந்த காரை கைகளில் பெற பலர் மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தரமான காரையே ஆஸ்திரேலியாவில் வைத்து மேத்யூவின் மகள் டெலிவரிப் பெற்றிருக்கின்றார்.
இந்த காரை அவர் டெலிவரி பெறும் போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததை நம்மால் வீடியோவில் பார்க்க முடிகின்றது. பிரிஸ்பேன் நகரில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப் வாயிலாகவே அவர் டெலிவரி பெற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகளான கிரேஸ் ஹேடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார்.

மேலும், சமூக ஊடகத்திலும் மிகப் பெரிய ஆளுமையாக அவர் இருக்கின்றார். இவர் ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை இந்தியாவில் வைத்து ஓட்டி பார்த்திருக்கின்றார். தமிழகத்தில் வைத்தே இந்த சம்பவத்தை அவர் நிகழ்த்தி இருக்கின்றார். இந்த நிலையிலேயே அக்காரையே தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் வைத்து அவர் டெலிவரியும் பெற்றிருக்கின்றார்.
மிகவும் பிரீமியமான அம்சங்கள் கொண்ட கார் மாடலே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி ஆகும். இந்த காரில் தொழில்நுட்ப அம்சங்களுக்கும் குறைச்சலின்றி காணப்படுகின்றது. குறிப்பாக, இதன் உயர்நிலை தேர்வில் ஆடம்பர பங்களாக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசதிகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை, ஆம்பியன்ட் லைட்டுகள், சோனி ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க அடாஸ் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றது.
2.0 லிட்டர் எம்ஸ்டால்லியன் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டார் தேர்வுகளே எக்ஸ்யூவி700-இல் வழங்கப்படுகின்றது. கியர்பாக்ஸைப் பொருத்த வரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, உயர்நிலை தேர்வில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில்தான் இந்த காரை மேத்யூ ஹூடன் டெலிவரி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவருடைய மகளும் அதே எக்ஸ்யூவி 700 காரை ஆஸ்திரேலியாவில் வைத்து வாங்கி இருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 14 லட்சம் தொடங்கி ரூ. 26 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









