நாளை துவங்குகிறது ஆட்டோ எக்ஸ்போ! என்ன பண்டிகையைக் கொண்டாடத் தயாரா?
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சி நாளை கிரேட்டர் நொய்டா பகுதியில் துவங்கவுள்ளது. இதில் ஏராளமான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் களம் இறக்கவுள்ளனர். இந்த கண்காட்சி குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் பிரியர்களுக்கும், ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கும் பண்டிகை என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள். இந்த நாளுக்காக ஆட்டோமொபைல் பிரியர்கள் தவம் கிடப்பார்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கொரோனா பரவல் காரணமாக இந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடக்கவில்லை. இந்த கண்காட்சி தற்போது 2023ம் ஆண்டு நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி ஜனவரி 11ம் தேதி அதாவது நாளை துவங்கவுள்ளது. டில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் இந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி இந்தாண்டு நடக்கிறது.
நாளை துவங்கும் இந்த கண்காட்சி வரும் 18ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் முதல் இரண்டு நாட்கள் அதாவது ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி முற்றிலும் ஊடகங்களுக்காக மட்டும் இந்த கண்காட்சி நடக்கவுள்ளது. இதில் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் ஊடகங்கள் முன்னிலையில் தங்கள் வாகனங்களைக் காட்சிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை பார்வையாளர்கள் இந்த கண்காட்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கான டிக்கெட்கள் பரபரப்பாக ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. வார நாட்களில் ரூ 350க்கும், வாரயிறுதி நாட்களில் ரூ475க்கும் ஒரு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 13ம் தேதி பிஸ்னஸ் டிக்கெட் எடுத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் காலை 11 மணிக்கு இந்த கண்காட்சி துவங்கப்பட்டு இரவு 8 மணி வரையிலும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் காலை 11மணிக்கு துவங்கப்பட்டு இரவு 7 மணி வரையிலும் பார்வையாளர்களுக்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இறுதி நாளான 18ம் தேதி மாலை 6 மணியுடன் கண்காட்சி முடிவடைகிறது.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களான மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா, கியா, எம்ஜி, டொயோட்டா மற்றும் லெக்சஸ் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களும், பெனலி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோர்னி, மேட்டர், டார்க், அல்ட்ரா வைலட் ஆகிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.
இந்த கண்காட்சியில் போது பல முக்கிய கார் மற்றும் பைக்குகள் வெளியாகிறது. குறிப்பாக மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கான்செப்ட் கார், ஜிம்னி என்ற ஆஃப்ரோடு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி கார், ஹூண்டாய் பிரிமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், கியாவின் எலெக்ட்ரிக் கார், எம்ஜியின் சிறிய ரக எலெக்ட்ரிக் கார், டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள், டொயோட்டா மற்றும் பிஒய்டி நிறுவனங்களின் கார்கள் எல்லாம் காட்சிப்படுத்தவுள்ளனர்.
இது மட்டுமல்ல இந்த கண்காட்சியில் முக்கிய அம்சமாக லெக்சஸ் நிறுவனம் தான் சொகுசு காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிறுவனம் ஆர் எக்ஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் முதல் இரண்டு நாட்களிலேயே பெரும்பாலான வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றனர். இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நிறுவனத்திற்குள் தனித்தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தான் இந்நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.
பார்வையாளர்கள் வரும் போது அவர்களை என்கேஜிகாக வைக்க சுமிலேட்டர் உள்ளிட்ட பல என்கேஜிங்கான விஷயங்களைச் செய்யவுள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவை முற்றிலுமாக கவர் செய்ய எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு நேரடியாகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்றுள்ளது. எங்கள் குழு அங்கிருந்தபடியே நேரடியாக நமது வாசகர்களுக்காக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் வாகனங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாகனங்கள் குறித்த தகவல்களை வெளியிடவுள்ளனர். இந்த தகவல்களை உடனுக்குடன் எங்கள் இணையதளத்தில் பெற
https://tamil.drivespark.com/auto-expo-2023/
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் இங்கு அனைத்து விதமான தகவல்களும் உடனடியாக அப்டேட் செய்யப்படும். இது மட்டுமல்ல எங்கள் சமூகவலைத்தள பக்கங்களிலும் உடனுக்குடனான அப்டேட்கள் வழங்கப்படவுள்ளன. அதையும் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அதன் லிங்கங்களைக் கீழே காணுங்கள்
Facebook: https://www.facebook.com/DriveSparkTamil
Twitter: https://twitter.com/drivesparktamil
Instagram: https://www.instagram.com/drivesparktamil/
என்ன வாசகர்களே ஆட்டோ எக்ஸ்போ 2023க்கு ரெடியாகிட்டீகளா! வாங்க இந்த பொங்கலை ஆட்டோ எக்ஸ்போவோடு சேர்த்து கொண்டாடுவோம்!


Click it and Unblock the Notifications








