இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழா! ஆட்டோ எக்ஸ்போ 2023 கோலாகலமாக தொடங்கியது!

ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்குத் தீபாவளியான ஆட்டோ எக்ஸ்போ 2023 இன்று டில்லியில் துவங்குகிறது. இந்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளம் உங்களுக்கு உடனுக்குடன் வழங்கவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்தியாவில் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு எல்லாம் இன்று துவங்கி அடுத்த ஒருவாரத்திற்குத் தீபாவளி தான். என்னதான் தமிழ் நாட்டில் பொங்கல் கொண்டாடினாலும் இன்று கிரேட்டர் நொய்டா பகுதியில் துவங்கும். ஆட்டோ எக்ஸ்போவால் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மனங்கள் எல்லாம் இன்று குதுகலமாக மாறியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழா! ஆட்டோ எக்ஸ்போ 2023 கோலாகலமாக தொடங்கியது!

ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை இந்தியாவில் ஆட்டோஎக்ஸ்போ கண்காட்சி நடக்கும். அதன்படி இந்த 2023ம் ஆண்டு ஆட்டோஎக்ஸ்போ இன்று ஜனவரி 11ம் தேதி துவங்குகிறது. இந்த கண்காட்சியில் இந்தியாவில் ஆட்டோமொபைல் தயாரிக்கும் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடவுள்ளனர். குறிப்பாக மாருதி, கியா, ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை களம் இறங்குகிறது.

இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் களம் இறங்கவுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில நிகழும் சம்பவங்கள்,அறிமுகப்படுத்தப்படும் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட தயாரிப்புகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை உங்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்காக எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு நேரடியாக ஆட்டோ எக்ஸ்போ நடக்கவுள்ள இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து நேரடியாக உங்களுக்காகத் தகவல்களைத் தரவுள்ளனர்.

அதன்படி இன்று (ஜன.,11ம் தேதி) மாருதி, எம்ஜி, கிரீவிஸ் காட்டன், ஜேபிஎம், அசோக் லேலேண்ட், விஇசிவி, ஹூண்டாய், கியா, பிஒய்டி, கம்மின்ஸ், டொயோட்டா-லெக்சஸ், அதுல் ஆட்டோ,மேட்டர் மோட்டார் ஒர்க்ஸ், டார்க் மோட்டார்ஸ், பென்னலி-கீவே, மெட்டா, டாடா மோட்டார்ஸ், ஹெக்ஸால்லி மோட்டார்ஸ், ஆகிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுகின்றனர்.

இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023ல் முதல் இரண்டு நாட்கள் ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அப்பொழுதுதான் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுகின்றனர். ஜனவரி 13ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இந்த டிக்கெட்கள் எல்லாம் பரபரப்பாக ஆன்லைன் மூலம் விற்பனையாகி வருகிறது. வார நாட்களில் ரூ350 என்ற விலையிலும், வாரயிறுதி நாட்களில் ரூ475 என்ற விலையிலும் டிக்கெட் விற்பனையாகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அறிமுகமாகும் கார், பைக், உள்ளிட்டவற்றின் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆகியவற்றை நீங்கள் உடனுக்குடன் டிரைவ்ஸ்பார்க் இணையதளம், மற்றும் சமூகவலைத்தள பக்கங்களில் இந்த தகவல்களை காணலாம். இதற்காக கீழே உள்ள லிங்க்களில் எங்களைத் தொடர்ந்து பின் தொடருங்கள் அடுத்த 3 நாளுக்கு உங்கள் கார்/பைக் பசிக்கு தீனி போட நாங்கள் ரெடி, நீங்க ரெடியா?

இணையதளம்: https://tamil.drivespark.com/auto-expo-2023/

பேஸ்புக்: https://www.facebook.com/DriveSparkTamil

ட்விட்டர்: https://twitter.com/drivesparktamil

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/drivesparktamil/

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 8:16 [IST]
English summary
Auto expo 2023 starts today in the greater Noida region know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+