உலக புகழ்பெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ முதல் நாளின் முக்கிய நிகழ்வுகள்!

2023 ஆட்டோ எக்ஸ்போவின் முதல் நாளான நேற்று அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

உலக புகழ்பெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ நேற்றைய (ஜனவரி 11) தினம் திருவிழாபோல் கோலாகளமாக இந்தியாவில் தொடங்கியது. முதல் நாளான நேற்று பல முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் சூப்பரான கார் மாடல்களை அறிமுகப்படுத்தின. எதிர்காலத்தில் விற்பனைக்கு வர இருக்கும் மாடல்கள் தொடங்கி விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடல்கள் வரை என பலவற்றை வாகன உற்பத்தியாளர்கள் இந்த வாகன திருவிழாவில் காட்சிப்படுத்தினர். இதில் குறிப்பிட்ட சில ஹைலைட்டான கார் மாடல்களை பற்றியே தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆட்டோ எக்ஸ்போ

மாருதி சுஸுகி:

மாருதி சுஸுகி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் மற்றும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது. இது மிக முக்கியமான நிகழ்வாகும். டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில், மாருதி ஓர் மாடலைகூட விற்பனைக்கு வழங்காத நிலை தென்படுகின்றது. இந்த நிலையை மாற்றி விரைவில் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை இந்த நிகழ்வின் வாயிலாக மாருதி உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இவிஎக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 550 கிமீ வரை ரேஞ்ஜை வெளியேற்றும். இந்த சூப்பரான ரேஞ்ஜிற்காக மாருதி சுஸுகி 60 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவர்ச்சியான தோற்றத்திலும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காரை சாலையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ

இந்த கார் மாடலை மட்டுமின்றி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார் மாடல்களின் பிளாக் எடிசனையும் காட்சிப்படுத்தியது. இதுதவிர, பிரெஸ்ஸா சிஎன்ஜி, ஃப்ளக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வேகன் ஆர், சிறப்பு பதிப்பு சியாஸ் மற்றும் பலேனோ ஆகிய கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது. சியாஸ் மற்றும் பலேனோ சிறப்பு பதிப்பு கார் மாடல்கள் ஆகும். இவை தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி

எம்ஜி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கை பார்த்துவிட்டது என்றே கூறலாம். நிறுவனம் அதன் அட்டகாசமான கார் மாடல்கள் பலவற்றை இந்த தளத்தில் வைத்தே அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஃபேஸ்லிஃப்ட் ஹெக்டர் காரை இங்கு வைத்தே அது அறிமுகம் செய்தது. இதன் விலையை அறிவித்து நேற்றைய தினமே விற்பனைக்கும் கொண்டு வந்துவிட்டது.

ஆட்டோ எக்ஸ்போ

இத்துடன், யாருமே எதிர்பார்த்திராத கார் மாடல்கள் சிலவற்றையும் நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இஆர்எக்ஸ் 5 (eRX5), எம்ஜி 6 (MG6), மைஃபா 9 (MIFA 9), மார்வல் ஆர் (Marvel R), எம்ஜி 5 (MG5), எம்ஜி4 (MG4) மற்றும் எம்ஜி இஎச்எஸ் (MG eHS) பிளக்-இன் ஹபிரிட் கார் என பல கார் மாடல்களைக் காட்சிப்படுத்தியது. இந்த கான்செப்ட் கார் மாடல்கள் அனைத்தும் ஆட்டோ எக்ஸ்போவின் மிகப் பெரிய ஹைலைட்டு ஆகும்.

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனமும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்டு தனது முக்கியமான கார் மாடல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இங்கு வைத்தே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக நிறுவனம் ரூ. 44.95 லட்சம் விலையை அது நிர்ணயித்தது. இதுதவிர ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார், நெக்ஸோ ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் கார் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஆட்டோ எக்ஸ்போவிற்கு புகழ் சேர்த்தது.

கியா

ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக கருதப்படும் கியாவும் நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சில கார் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில், நிறுவனம் களமிறக்கியதில் ஹைலைட்டான கார் மாடல்கள் எது என்றால், அவை, அடுத்த தலைமுறை கார்னிவல் மற்றும் இவி9 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இவி 9 ஓர் கான்செப்ட் மாடல் ஆகும். கியா கேஏ4 எனும் பெயரிலேயே கார்னிவல் காரை எம்ஜி அறிமுகப்படுத்தியது. இந்த காரை விரைவில் இந்திய சந்தையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஒய்டி

சீன மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் தான் மேற்கொண்டு வரும் வர்த்தக பணிகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சமீபத்தில் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இந்த நிலையிலேயே நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக தன்னுடைய இந்தியாவிற்கான அடுத்த கார் மாடலை அறிமுகப்படுத்தியது. சீல் எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை அது அறிமுகம் செய்தது. இது ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக கார் ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும். இத்துடன், 700 கிமீ ரேஞ்ஜ் தேர்விலும் இந்த கார் மாடல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, நிறுவனம் அதன் ஸ்பெஷல் எடிசன் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி-யையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

லெக்சஸ்

லெக்சஸ் நிறுவனம் அதன் சார்பில் ஆர்எக்ஸ், எல்எக்ஸ் 500, எல்எம் 350, எல்எஃப்-இசட் மற்றும் எல்எஃப்-30 ஆகிய கார் மாடல்களையே 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இதில் ஆர்எக்ஸ் என்கிற கார் மாடலை நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற மாடல்கள் கான்செப்ட் வெர்ஷன்களாகும். குறிப்பாக, கடைசி இரு மாடல்கள் மின்சார கார் மாடல்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.

டாடா

டாடா மோட்டார்ஸ் தான் ஒரு ஜாம்பவான் நிறுவனம் என்பதை ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. அது, கனரக வாகனம் தொடங்கி பயணிகள் வாகனம் வரை என எக்கசக்க கார் மாடல்களை காட்சிப்படுத்தியது. குறிப்பாக, யாருமே எதிர்பார்த்திராத ட்விஸ்டாக ஹாரியர் இவி கான்செப்ட் மாடலை அது நேற்று நடைபெற்ற வாகன கண்காட்சியின்போது அறிமுகம் செய்தது. இத்துடன், சைரா இவி கான்செப்ட், பஞ்ச் சிஎன்ஜி, அல்ட்ராஸ் சிஎன்ஜி, கர்வ் கான்செப்ட், அவின்யா கான்செப்ட் ஆகிய கார் மாடல்களையும் நிறுவனம் உலக அரங்கில் காட்சிப்படுத்தியது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 10:06 [IST]
English summary
Auto expo day 1 highlight
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+