மிடில் கிளாஸ் குடும்பமா இருந்தாலே இனி கார் வச்சிருக்கனும்னு ரூல்ஸ் வரும் போல! சேல்ஸ் தாறுமாறு!
ஆட்டோமொபைல் அசோசியேஷன் சார்பில் இந்த நிதியாண்டில் இதுவரை விற்பனையான கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. இதில் இதுவரை சுமார் 1.10 கோடி எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் விடும்போது அதைவிட தற்போது9 லட்சம் கார்கள் அதிகமாக விற்பனையாக உள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் டீலர்களின் அசோசியனாக இருப்பது FADA எனும் அமைப்பு. Hந்த அமைப்புதான் இந்தியாவில் விற்பனையாகவும் வாகனங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடும். அதன்படி இந்நிறுவனம் தற்போது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டின் அரையாண்டுக்கான விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிதியாண்டில் 1.10 கோடி அதாவது 1,10,79,116 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டால் கடந்த ஆண்டு 1.01 கோடி அதாவது 1,01,79,072 எண்ணிக்கையில் உள்ள வாகனங்கள் விற்பனையாக இருந்தது. இது சுமார் 9 சதவீத வளர்ச்சியாகும். இது ஒரு சிறப்பான வளர்ச்சி என ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன் இன் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு காலாண்டுக்கும் அனைத்து விதமான வாகனங்களிலும் இப்படியான கணக்கெடுப்பு நடத்தப்படும் அதில் தற்போது அனைத்து விதமான வாகனங்களிலும் வளர்ச்சியை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 5,33,353 எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வெறும் 3,21,964 என்ற எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

இந்த நிதியாண்டில் பயணிகள் காரின் விற்பனையும் இதுவரை 18,08,311 என்ற எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17,02,905 இன்றைய எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாக இருந்தது. இது 6சதவீத வளர்ச்சியாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு சில்லறை விற்பனையில் கார்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கடந்தாண்டு தான் அதிகமான அளவில் கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது அதையும் பின்னுக்கு தள்ளி சில்லறை விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மெல்ல மெல்ல கார்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. இந்திய மக்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்திய மக்கள் படிப்படியாக கார்களை பயன்படுத்து துவங்கி விட்டனர். பலர் குடும்பத்தின் முதல் முறையாக கார்களை வாங்கி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது மார்க்கெட்டில் ஒரு பாசிட்டிவான மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. என்பதை காட்டுகிறது மேலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பல்வேறு விதமான கார்களை தேர்வு செய்யும் பழக்கத்தை நம்மால் காண முடிகிறது.
கார்கள் விற்பனை ஒரு புறம் இருந்தாலும் டூவீலர் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. இந்த நிதியாண்டில் இதுவரை 78,28,015 என்ற எண்ணிக்கையிலான டூவீலர்கள் விற்பனையாகி உள்ளது. இது சிறப்பான விற்பனைதான். அதைப் போல கமர்சியல் வாகனங்களை எண்ணிக்கையும் இன்னொரு பக்கம் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிதியாண்டில் இதுவரை 4,65,097 என்ற எண்ணிக்கையிலான கமர்சியல் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் மொத்தமே 4,50,458 எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. டிராக்டர் செக்மெண்ட் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 14% அதிகம் ஆகி தற்போது 4,44,340எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இந்தியா பல்வேறு துறைகளில் தொடர்ந்து வளர்ச்சி பதவி சென்று கொண்டிருக்கிறது என்பதை குறிக்கும் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால்தான் அவர்கள் வாகனங்கள் வாங்குவதை கொடுத்து யோசிப்பார்கள். தற்போது உள்ள நிலவரம் இந்தியா வளர்ச்சிக்கு ஒரு நல்ல சிக்னலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








