வயதானாலே பிரச்சனை தான்!! கார்களையும் பார்த்து வாங்குங்க... இந்த இரு கார்களில் ஒன்று நல்ல சாய்ஸாக இருக்கும்!
வயதானவர்களுக்காக கார் வாங்கும்போது நாம் காரை பற்றிய அனைத்து விபரங்களையும் ஆராய வேண்டியது அவசியமாகும். அதாவது, காரில் கிடைக்கும் சவுகரியம், பாதுகாப்பு மற்றும் ஹேண்ட்லிங் கண்ட்ரோல் என ஏகப்பட்டவையை கவனிக்க வேண்டும். இயக்குவதற்கு எளிமையான பவர் ஸ்டேரிங் மற்றும் தெளிவான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்ட கார்களையே வயதானவர்கள் விரும்புவர்.
வயதானவர்களுள் சிலர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களையும் இயக்க ஆசைப்படுவது உண்டு. ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்தியவர்களுக்கே மீண்டும் ஆட்டோமேட்டிக் காரை வாங்க ஆசை வரும். வயதானவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், சந்தையில் ஒரு சில ஆட்டோமேட்டிக் கார்கள் வயதானவர்களாலும் விரைவில் பழகிக் கொள்ள முடியும். அத்தகைய ஆட்டோமேட்டிக் கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

செடான் மற்றும் எஸ்யூவி கார்களை காட்டிலும் ஹேட்ச்பேக் கார்களை இயக்குவது எளியது. அத்தகைய ஹேட்ச்பேக் கார்களுள் சந்தையில் பிரபலமானவைகளாக உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அல்லது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வயதானவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். ஏனெனில் இவை இரண்டும் காம்பெக்ட்டான தோற்றம் கொண்டவை, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களை கொண்டவை மற்றும் பழுதாகினாலும் எளிதில் பாகங்கள் கிடைக்கக்கூடியவை.
அதுமட்டுமின்றி, விலையையும் குறைவானதாக கொண்ட இந்த ஹேட்ச்பேக் கார்களில் பவர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் புஷ்-ஸ்டார்ட் பொத்தான் உள்ளிட்டவை டிரைவிங் சவுகரியத்திற்காக வழங்கப்படுகின்றன. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன் உருவாக்கப்படுவதால், இந்த கார்களை எந்தவொரு சாலைக்கும் பயமின்றி எடுத்து செல்லலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, சிறந்த எரிபொருள் திறனை வழங்கக்கூடிய கார்களாக இவை உள்ளன. இவற்றில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திரைகளை பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் டச் ஸ்க்ரீன் நாவிகேஷனை கொண்டவைகளாக இவற்றின் இன்ஃபோடெயின்மெண்ட் திரைகள் விளங்குகின்றன.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அதன் வி.எக்ஸ்.ஐ ஏ.ஜி.எஸ் வேரியண்ட்டில் பெறலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.7.45 லட்சமாக உள்ளது. அதுவே, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில் மேக்னா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.28 லட்சம் மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.79 லட்சம் ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வி.எக்ஸ்.ஐ ஏ.ஜி.எஸ் வேரியண்ட்டில் ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா வழங்கப்படுவது இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த காரில் 22.56kmpl வரையிலான மைலேஜ் கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மேக்னா ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார் மேற்கண்ட ஸ்விஃப்ட் வேரியண்ட்டை விட விலை குறைவானதாக இருப்பினும், மோதல் எச்சரிக்கை அமைப்புகளையும், ப்ளூடூத் இணைப்பு வசதியையும் பெறுகிறது.
ஆனால் இந்த வேரியண்ட்டிலும் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள்/ கேமராக்கள் கிடைப்பதில்லை. கிராண்ட் ஐ10 நியோஸின் ஸ்போர்ட்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சற்று கூடுதல் விலையினால் மேற்கண்ட வேரியண்ட்களில் வழங்கப்படும் அம்சங்களுடன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் & கேமராவையும் பெறுகிறது. கிராண்ட் ஐ10 நியோஸின் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் ஒரே மாதிரியான மைலேஜ் தான் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வயதானவர்களுக்கான கார்களில் அவர்களை குழப்பும் அளவிற்கு அதிக தொழிற்நுட்ப அம்சங்களும் இருக்க கூடாது. அதேநேரம் மிகவும் அத்தியாவசியமான வசதிகள் இல்லாமலும் இருக்க கூடாது. குறிப்பாக, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை. ஆனால் மேற்கூறப்பட்ட கார்களில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் மட்டுமே இந்த அம்சத்தை பெற முடிகிறது.


Click it and Unblock the Notifications









