இவரோட ரோல்ஸ் ராய்ஸ் கார மட்டும் ரோட்டுல பார்க்கவே முடியாது! நக்கலடிக்க மாட்டீங்கனா இதுக்கான காரணத்த சொல்றோம்!

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வரும் நபர்களில் இந்திய பாடகர் பாட்ஷா-வும் ஒருவர் ஆவார். பிரபல ராப் பாடகரான இவரிடத்தில் பயன்பாட்டில் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் விரைத் லக்சூரி கார் மாடலே ஆகும். இது ஓர் அரிய வகை 2 கதவுகள் மட்டுமே கொண்ட கூபே ரக சொகுசு கார் ஆகும்.

இந்த சொகுசு காரை அவர் 2019 ஆம் ஆண்டிலேயே வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தோராயமாக இந்த காரை அவர் வாங்கி 4 ஆண்டுகள் வரை ஆகின்றன. இருப்பினும், இப்போதும் அந்த வாகனம் புத்தம் புதிதுபோல் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், நேற்றுதான் ஷோரூமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதைபோல் அது காட்சியளிக்கின்றது.

Badshahs rolls royce wraith

"இதில் என்ன ஆச்சரியம், பொதுவா பணக்காரர்களின் வீட்டில் இருக்கும் வாகனம் என்றாலே அப்படிதானே இருக்கும். மேலும், பணம் படைத்தவர் பாட்ஷா, அவரிடத்தில் இருக்கும் பணத்தை காரை புதுசு போல் பரமாரிக்க கொட்டி இருப்பார்" எனவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.

ஓட்டப்படாமல் சும்மாவே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதன் காரணத்தினாலேயே அந்த கார் புத்தம் புதிதுபோல் காட்சியளிக்கின்றதாம். இதை ராப் பாடகர் பாட்ஷாவும் உறுதி செய்திருக்கின்றார். வெளியில் எடுத்தால் கார் பழசாகிவிடுமோ என்கிற அச்சத்தில் தன்னுடைய தந்தை ரோல்ஸ் ராய்ஸ் விரைத் காரை வெளியிலேயே எடுப்பதில்லை என்று பாடகர் கூறி இருக்கின்றார்.

"இதுக்கு பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாம்" என்கிற நடிகர் விமல் பேசும் புகழ்பெற்ற திரைப்பட வசனமே நம் நினைவிற்கு வருகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் காரின் மீது ஸ்கிராட்ச் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதைச் சுத்தம் செய்வதைக் கூட எனது தந்தை தவிர்த்துவிடுவதாகப் பாடகர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் அரிதினும் அரிதாகவே அவர் அந்த காரைப் பயன்படுத்துகின்றார் என்றும் பாடகர் கூறி இருக்கின்றார். குறிப்பாக, டிரைவர் காரை வெளியில் எடுக்கும்போது அதிக கவனத்துடன் அவர் இருப்பார். இந்த காரை வெளியில் எடுக்க வேண்டுமே என்கிற காரணத்திற்காகவே அவர் வெளியில் போவதை பெருமளவில் தவிர்த்துவிட்டதாக பாடகர் நகைச்சுவையாக தெரிவித்து இருக்கின்றார்.

இதன் காரணத்தினாலேயே அந்த கார் சாலையில் அரிதினும் அரிதாக தென்படுகின்றதாம். பாடகரின் தந்தை அந்த காரை இவ்வாறு பொக்கிஷம்போல் பார்த்துக் கொள்ள அதன் அதிகபட்ச தொகையை மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் விரைத்தின் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 6.4 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பாட்ஷாவின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரை வெளியில் எடுப்பதையே தவிர்த்து வருகின்றார். ஆனால், இந்த காரை பாட்ஷா புத்தம் புதியதாக வாங்கினாரா அல்லது யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருந்து வாங்கினாரா என்பது துள்ளியமாக தெரியவில்லை.

அதேவேளையில் பாடகர் பாட்ஷா ஓர் மிகப் பெரிய கார் காதலர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எக்கசக்கமான சொகுசு கார்கள் அவரிடத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. ஜாகுவார், பிஎம்டபிள்யூ 640டி, ஆடி க்யூ8 எஸ்யூவி மற்றும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி ஆகிய சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றார்.

இதில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவியே அவர் சமீபத்தில் வாங்கிய சொகுசு காராகும். இதனை அவர் செகண்ட் கார் மார்க்கெட்டில் இருந்தே வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. உலகின் அதிக வேகத்தில் இயங்கும் எஸ்யூவி ரக காராக உருஸ் இருக்கின்றது. இதனாலேயே இந்திய பிரபலங்கள் பலரின் பிரியமான காராகவும் அது காட்சியளிக்கின்றது.

இத்தகைய காரையே பாடகர் பயன்படுத்தி வருகின்றார். 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜினே லம்போர்கினி உருஸில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், 666 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 3.5 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

இதைப்போலவே மிக சூப்பரான திறனை வெளியேற்றக் கூடியதாக ரோல்ஸ் ராய்ஸ் விரைத் இருக்கின்றது. இந்த காரில் 6.6 லிட்டர் வி12 ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 625 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் விரைத் மிக அரிய வகை சொகுசு காராகவும். இதுவும் அவரின் தந்தை அதனை பொக்கிஷம்போல் காரணமாக இருக்கலாம். இருப்பினும், வாங்கிட்டு யூஸ் பண்ணாமலே வைத்திருப்பது எல்லாம் நல்லாவா இருக்கு. இதுக்கு அந்த பணத்தை பேங்க்ல போட்டு வச்சிருந்த வட்டியாச்சும் கிடைத்திருக்கும் என்றே நினைக்கத் தொன்றுகின்றது.

Article Published On: Friday, July 7, 2023, 15:30 [IST]
English summary
Badshah explained why his rolls royce wraith not seen on the road
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+