இதோட அழகுக்கு முன்னால ஜீப் காம்பஸே தோத்திரும் போலிருக்கே.. துபாயில் களமிறங்கும் சீன பிராண்டின் கார்! வேற லெவல்
சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிஏஐசி (BAIC)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக பிஜே 60 (BJ60) காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையே பிரத்யேகமாக துயாபில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை அறிமுகம் செய்ய இருக்கும் நாளைகூட அது நிர்ணயம்செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஜே60 ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதனையே வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி நிறுவனம் துபாயில் நடைபெற இருக்கும் நிகழ்வின் வாயிலாக பிஏஐசி அறிமுகம் செய்ய இருக்கின்றது.

கெம்பின்ஸ்கி உணவகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியிலேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மிகவும் அழகிய காராக பிஜே60-ஐ பிஏஐசி தயார் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக ஜீப் காம்பஸ் (Jeep Compass) கார் மாடலையே தோற்கடிக்கும் வகையில் இதன் அழகிய தோற்றம் இருக்கின்றது.
இதுதவிர, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி (Toyota Land Cruiser 300 SUV)-யைவிட பெரிய உருவத்தில் இந்த கார் மாடல் தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரமாண்ட உருவத்தினால் இந்த காருக்கு எத்தகைய ரோடையும் சமாளிக்கும் திறன் கிடைத்திருக்கின்றது.

மேலும், இந்த திறனுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பெரிய வீல் மற்றும் கரடு-முரடான பாதையைச் சமாளிக்கும் டயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக எஞ்சின் விஷயத்தில் இந்த கார் வேற லெவலில் உள்ளது. இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.
2.0 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜட், 4 சிலிண்டர் யூனிட் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதில் பெட்ரோல் மோட்டார் தேர்வுடன் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அம்சம் மற்றும் ஃபுல் டேங்க் பெட்ரோல் இணைந்து இந்த காரை 1000 கிமீ வரை பயணிக்கச் செய்யும். இத்தகைய தரமான மைலேஜ் திறன் கொண்ட காராகவே பிஏஐசி-யின் பிஜே 60 எஸ்யூவி காட்சியளிக்கின்றது. தோற்றத்தில் இந்த கார் லேசாக ஜீப் காம்பஸைபோல் காட்சியளிக்கின்றது.
இதற்கேற்பவே காரின் முன் பக்க க்ரில் அமைப்பு இருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க, காருக்கு வழங்கப்பட்டு இருக்கும் சதுரமான வடிவமும் காம்பஸை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கின்றது. இருப்பினும், இதன் கவர்ச்சியான தோற்றம் கார் பிரியர்களின் மனதைக் கவர தவறவில்லை. இதற்காக ஸ்போர்ட்டியான பாடி பேனல்கள் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பிஜே 60 ஓர் ஆல் வீல் டிரைவ் வசதிக் கொண்ட கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரத்யேகமாக சீன சந்தைக்காக தாயர் செய்யப்பட்ட இந்த கார் மாடல் தற்போது துபாயிலும் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.
2022 ஆம் ஆண்டிலேயே இந்த காரின் உற்பத்தி பணிகளை பிஏஐசி சீனாவில் தொடங்கியது. நல்ல வரவேற்பு இந்த காருக்கு சீனர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் பிரமாண்ட தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்காகவே சீனர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
மூன்று பெரிய திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர பின்னிருக்கையாளர்களுக்கு என தனி ஏசி வெண்ட் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம், அதிக மிருதுவான இருக்கைகள், பிரீமியமான கேபின் செட்-அப் ஆகியவை இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய அம்சங்கள் காரணத்தினாலேயே இந்த கார் சீனர்களின் மனதைக் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மாடல் சீனர்களின் மனதைக் கவர்ந்ததைப் போலவே வரும் நாட்களில் அரேபியர்களின் மனதையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களின் மனதைக் கவரும் விதமாகவே ஸ்டைல்,சிறப்பம்சங்கள் ஆகியவை இருக்கின்றன. இத்துடன், விலையும் அரேபியர்களுக்கு ஏற்றதாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









