முதல்ல சீனா அடுத்து நம்ம இந்தியா.. இந்த கார் மட்டும் விற்பனைக்கு வந்துச்சு ஜிம்னியை வாங்க ஆளே இருக்காது!
இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் கார் மாடல் ஒன்று சீனாவில் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் சிறப்புகள், இது எப்போது இந்தியா வரும் என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பதாகக் கூறப்படும் கார் மாடல் ஒன்று சீனாவில் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பவுஜன் யெப் (Baojun Yep) இந்த காரே சீனாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக எலெக்ட்ரிக் காராகும்.

பார்ப்பதற்கு இதன் தோற்றம் மாருதி சுஸுகி ஜிம்னியை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இந்த காரே எம்ஜி பிராண்டின்கீழ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. பவுஜன் யெப், மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் காராகும். எஸ்ஏஐசி (SAIC), ஜிஎம் (GM) மற்றும் உல்லிங் (Wuling) இந்த நிறுவனங்களே பவுஜன் யெப் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி நிறுவனங்கள்.
இதில், எஸ்ஏஐசி என்பது எம்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும். இந்த நிறுவனமே எம்ஜி பிராண்டின்கீழே பவுஜன் யெப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரை எம்ஜி கோமெட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்இவி (Global Small Electric Vehicle) பிளாட்பாரமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

யெப் ஓர் 3.3 மீட்டர் நீளம் கொண்ட 4 சீட்டர் காராகும். இந்த கார் பின் வீல் இயக்கம் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார்கள் காரின் பின் ஆக்ஸில்களிலேயே இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மின்சார மோட்டார் 66 எச்பி மற்றும் 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இதனால் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும், பவுஜன் யெப் எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 303 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 28.1 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் 8.5 மணி நேரங்களுக்கும் அதிகமான நேரத்தை முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும்.

அதேவேளையில், டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 30 நிமிடங்களிலேயே 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை எட்டிவிடும். இதன் ஸ்டைலை பொருத்த வரை ஏற்கனவே நாங்கள் கூறியதைப் போல மாருதி சுஸுகி ஜிம்னியைப் போலவே இருக்கின்றது.
பெட்டி போன்ற வடிவம், கொழுத்த உருவ அமைப்பைக் கொண்ட டயர்கள் உள்ளிட்டவை ஜிம்னியையே பிரதிபலிக்கின்றன. அதேநேரத்தில் மாருத சுஸுகி ஜிம்னியையே தூக்கி சாப்பிடும் வகையில் இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளை சீன நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட 3-ஸ்போக் ஸ்டியரிங் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளிட்டவை பவுஜன் யெப் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, கூடுதலாக பேட்டரியின் டெம்ப்ரேச்சரைக் கண்டறியும் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வழக்கத்திற்கு மாறாக பேட்டரி வெப்பமடையும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும். இதன் வாயிலாக விபத்து ஏதேனும் அரங்கேறுவதற்கு முன்னரே நம்மால் அதை சுதாரித்துக் கொள்ள முடியும்.
இவற்றுடன், ரியர் வியூ கேமிரா, முன் பக்கத்தில் ஹீட்டாகும் வசதிக் கொண்ட இருக்கை, டிரைவருக்கான எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் இருக்கை ஆகியவையும் பவுஜன் யெப் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மிக முக்கியமான அம்சமாக அடாஸ் தொழில்நுட்பமும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது.
இந்த அம்சத்தின் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானாக பிரேக் பிடித்தல், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட், தடம் மாறுவது குறித்த எச்சரிக்கை மற்றும் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சங்களும், அதன் எலெக்ட்ரிக் அவதாரமுமே மாருதி சுஸுகி ஜிம்னிக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.
நீளத்திலும், அகலத்திலும் 300 மிமீ மற்றும் 40 மிமீ வரை குறைவாக பவுஜன் யெப் இருந்தாலும் இந்த கார் மிகக் கடுமையான போட்டியாளனாக ஜிம்னிக்கு இருக்கும் என்பதை உணர முடிகின்றது. இதன் அதிகாரப்பூர்வ வருகை நாள் பற்றிய விபரம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஆண்டிற்குள் இக்காரை எம்ஜி நிறுவனம் தன்னுடைய பிராண்டின்கீழ் நம் நாட்டில் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனம் மிக சமீபத்திலேயே கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் களமிறக்கியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக பவுஜனின் யெப் எலெக்ட்ரிக் காரை அது விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவும் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகவே விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









