வெறும் ரூ.399 மட்டுமே... எலக்ட்ரிக் பஸ்ஸில் இந்த ஊரில் இருந்து பெங்களூருக்கு செல்லலாம் - புதிய சேவை அறிமுகம்!!

பெங்களூர்- திருப்பதி இடையேயான பேருந்து சேவையில் புதிய எலக்ட்ரிக் பேருந்து (Electric Bus) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பேருந்தை சேவைக்கு கொண்டுவந்துள்ள பேருந்து நிறுவனம் எது? என்பது உள்பட இந்த புதிய எலக்ட்ரிக் பேருந்து சேவையை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

ஃப்ரஷ் பஸ் (Fresh Bus), இந்தியாவில் இரு நகரங்களுக்கு இடையே பேருந்து சேவையை வழங்கிவரும் இந்த நிறுவனம் தான் தனது சேவையில் முதல்முறையாக எலக்ட்ரிக் பேருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மாநகரங்களுக்குள் எலக்ட்ரிக் பேருந்துகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்துவரும் தற்போதைய சூழலில் இண்டர்சிட்டி எனப்படும் இரு நகரங்களுக்கு இடையேயும் எலக்ட்ரிக் பேருந்து சேவைகள் விரிவாக்கம் அடைய துவங்கியுள்ளன.

fresh bus launches new-age ev fleet

இதில் ஒரு பகுதியாக ஃப்ரஷ் பஸ் நிறுவனம் தனது சேவையில் பெங்களூர் - திருப்பதி இடையேயான வழித்தடத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆரம்பித்துள்ளது. மத்திய அரசை போல், கர்நாடகா மாநில அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் முனைப்புடன் உள்ளது. அதில் தங்களது பங்களிப்பாக எலக்ட்ரிக் பேருந்து சேவையை துவங்கியுள்ள ஃப்ரஷ் பஸ் நிறுவனம் இத்தகைய பேருந்துகள் தான் எதிர்காலம் எனவும், சுற்றுச்சூழலுக்கு நட்பானதாக இது இருக்கும் எனவும் கூறுகிறது.

12 மீட்டர்கள் நீளத்தில், பிரீமியம் தரத்தில் கேபினை கொண்ட இந்த புதிய ஃப்ரஷ் எலக்ட்ரிக் பேருந்தில் 45க்கும் அதிகமான இருக்கைகள் உள்ளன. பெங்களூர்- திருப்பதி இடையே மட்டுமே ஃபர்ஷ் பஸ் நிறுவனம் தற்போதைக்கு தனது பேருந்து சேவையை வழங்கி வருகிறது. சேவை வழங்கப்படும் ஒரேயொரு வழித்தடமாக இருப்பினும், இந்த வழித்தடத்தில் எலக்ட்ரிக் பேருந்தை ஃபர்ஷ் பஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

fresh bus launches new-age ev fleet

ஃப்ரஷ் பஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் பேருந்தில் பயணிக்க, கட்டணம் வெறும் ரூ.399 மட்டுமே ஆகும். இவ்வாறான எலக்ட்ரிக் பேருந்து சேவையை ஹைதராபாத் மற்றும் விஜயவாடா நகரங்களுக்கு இடையேயும் இந்த ஏப்ரல் மாதம் முடிவதற்கு உள்ளாக கொண்டுவர ஃபர்ஷ் பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தட சேவைகளுக்கு ஃப்ரஷ் பஸ் நிறுவனம் பயன்படுத்த உள்ள எலக்ட்ரிக் பேருந்தின் பேட்டரியை வெறும் 2 மணிநேரங்களில் 0-வில் இருந்து 100% சார்ஜ் நிரப்பிவிட முடியும்.

இந்த 2 மணிநேர சார்ஜின் உதவியுடன் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு பேருந்தை இயக்க முடியும். பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைகள் 75 மற்றும் 69 வழியாக திருப்பதி 250கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஆதலால் பேருந்தின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், தாராளமாக பெங்களூருவில் இருந்து திருப்பதியை இடையில் எங்கும் சார்ஜ்-காக நிறுத்தாமல் சென்றுவிடலாம்.

fresh bus launches new-age ev fleet

ஆனால் இந்த எலக்ட்ரிக் பேருந்தின் டாப் ஸ்பீடு சற்று குறைவே. வெறும் 90kmph மட்டுமே. வெளிப்புற சத்தத்தை கொஞ்சம் கூட உள்ளே அனுமதிக்காத இந்த எலக்ட்ரிக் பேருந்தின் உட்பக்க கேபின் முழுவதுமாக ஏசி-ஆல் நிரப்பப்பட்டுள்ளது. மிகவும் சவுகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ள இருக்கைகளை 45 டிகிரிக்கு சாய்த்து கொள்ளலாம் எனவும், கேபினுக்குள் காற்றின் தரம் வெப்பநிலையை ரியல்-டைமில் சரிப்பார்த்து கொள்ள முடியும் எனவும் ஃப்ரஷ் பஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃப்ரஷ் பஸ் நிறுவனம் போன்று ஒரேயொரு வழித்தடத்தில் மட்டுமே பேருந்து சேவையை வழங்கிவந்தால் வழித்தடங்களை விரிவுப்படுத்தவே எந்தவொரு நிறுவனமும் முயற்சிக்கும். அதன் பின்பே இவ்வாறான எலக்ட்ரிக் பேருந்து முயற்சிகளை கையில் எடுக்கும். ஆனால் ஃப்ரஷ் பஸ் நிறுவனம் வணிகத்தை பெருக்கும் அதேநேரம், பசுமையான & எதிர்கால போக்குவரத்தை கொண்டுவர நினைத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 16:00 [IST]
English summary
Bengaluru tirupati route gets new electric bus service
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X