இது காரா இல்ல கேமிராவா.. 360 டிகிரி சுழலுமா! வாகன உலகின் அதிசயத்தை உருவாக்கிய பென்ஸ்!
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல ஐசிஇ (எரிபொருளில் இயங்கும்) வாகனங்களை போலவே எலெக்ட்ரிக் வாகனங்களையும் மிக தாராளமாக உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டன. இதில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனமும் ஒன்றாகும். நிறுவனத்தின்கீழ் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், அதன் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஒன்றான ஜ-கிளாஸ்-யும் அது எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் ஓர் முன் மாதிரி ஜி-கிளாஸ் (G Class) எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றது.

இதுவரை எந்த எலெக்ட்ரிக் காரிலும் இல்லாத தனித்துவமான அம்சங்களை இந்த காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காரில் 360 டிகிரி சுழலும் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக, ஓர் கேமிராவை போல இந்த கார் சுழலும் திறன் கொண்டதாக மாறி இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. தோற்றத்தை பொருத்தவரை வழக்கமான ஜி-கிளாஸை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது இந்த எலெக்ட்ரிக் ஜி கிளாஸ். அந்தவகையில், பெட்டி போன்ற வடிவமைப்பு இந்த காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, வட்ட வடிவ ஹெட்லைட், ஜி-கிளாஸ் கிரில், பெரிய பென்ஸ் சின்னம், ஃப்ளார்டு வீல் ஆர்ச்சுகள், பக்கவாட்டு பகுதியில் திறக்கும் வசதிக் கொண்ட டெயில் கேட், அப்-ரைட் விண்ட்ஸ்கிரீன், ஸ்பேர் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், சில தனித்துவமான அம்சங்களை அது தாங்கி இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கு சான்றாகவே 360 டிகிரி சுழலும் திறன் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் காரின் நான்கு வீல்களிலும் தனி தனியாக எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றது. அதாவது, நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் இந்த காரால் 360 டிகிரி சுழல முடிகின்றது.

இதுதவிர, இந்த காரால் எந்த மாதிரியான மோசமான சாலையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். இந்த திறனை சோதித்து பார்க்கும் நோக்கிலேயே பென்ஸ் சமீபத்தில் அந்த காரை ஓர் அடர்ந்த காட்டுக்குள் சோதனையோட்டம் செய்தது. ஆஸ்திரியாவில் அமைந்துள்ள கிராஸ் எனும் மலை பகுதியில் வைத்தே இந்த சோதனையோட்டம் செய்யப்பட்டது.
அப்போது, காரின் 360 டிகிரி சுழலும் திறன் தொடங்கி அனைத்து திறன்களும் சோதித்து பார்க்கப்பட்டன. இந்த சோதனையில் கார் மிக சிறப்பாக செயலாற்றியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த காரின் 360 திரும்பும் திறனுக்கு ஜி டர்ன் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த திறன் இப்போதைய நிலவரப்படி பிஒய்டி யாங்குவாங் யு8 மட்டுமே கொண்டிருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 450 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் எலெக்ட்ரிக் மோட்டாரின் திறன் 600 பிளஸ் பிஎச்பி என்றும், டார்க் 1000 என்எம் என்றும் கூறப்படுகின்றது.
வெகு விரைவில் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது சோதனையோட்டம் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. உலக நாடுகளில் இதன் வெளியீடு அரங்கேறிய பின்னர் இந்தியாவிலும் அக்காரை விற்பனைக்குக் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பென்ஸின் எலெக்ட்ரிக் கார்கள் சில ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பென்ஸ் ஜி-கிளாஸ் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் மத்தியிலேயே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், பாலிவுட் நடிகர்கள் பலர் இந்த காருக்கு மிகப் பெரிய ஃபேன்களாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications









