5 நபர்களுடன் தனி குடும்பமாக பயணிக்க விரும்புறவங்களுக்கு இந்த கார்கள் பெர்ஃபக்ட்!! காசை மிச்சப்படுத்துங்க...

இன்றைய காலக்கட்டத்தில் உயரம் குறைவான செடான் கார்களை அவ்வளவாக பார்க்கவே முடிவதில்லை. ஆனால் கடந்த 10, 15 வருடங்களுக்கு முன்பு எல்லாம் செடான் கார்களே சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருந்தன. அந்த சமயங்களில் நமது இந்திய சாலைகளை மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான நாடுகளின் சாலைகள் செடான் கார்களிலேயே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் இப்போது விற்பனை செய்யப்படும் செடான் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், அன்றாட நடைமுறை தன்மை செடான் கார்களை காட்டிலும், உயரமான கம்பீர தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களில் அதிகம் கிடைப்பதாலேயே ஆகும். இன்னும் சொல்ல போனால், காரின் உயரம் அதிகமாக இருந்தால், அதனால் காரின் காற்றியக்கவியல் பண்பு குறைந்து அத்தகைய கார்களில் ஆற்றல்மிக்க என்ஜினை பொருத்த வேண்டியிருக்கும், இதன் காரணமாக காரின் விலையையும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என சில குறைப்பாடுகள் எஸ்யூவி & எம்பிவி ரக க்ராஸ்ஓவர் கார்களில் இருக்க தான் செய்கின்றன.

இருப்பினும் சவுகரியம் என்ற ஒரு விஷயத்தில் செடான் கார்களை எஸ்யூவி ரக கார்கள் தோற்கடித்து வருகின்றன. உயரம் அதிகமாக வழங்கப்படுவதால் எஸ்யூவி கார்களில் பயணத்தின்போது பயணிகளுக்கான கேபின் சவுகரியத்தில் எந்தவொரு குறையும் இருப்பதில்லை. மேலும், சிறிய அளவிலான எஸ்யூவி & ஹேட்ச்பேக் கார்களும் சிறிய குடும்பமாக பயணிப்பதற்கு ஏற்றவைகளாக விளங்குகின்றன. அந்த வகையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் 5 சிறிய அளவிலான எஸ்யூவி & ஹேட்ச்பேக் கார்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் தனி குடும்பத்தார்களுக்கு ஏற்ற 5 கார் மாடல்கள்!!

1. டாடா அல்ட்ராஸ்

மாருதி சுஸுகி பலேனோவிற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கிய கார் தான் அல்ட்ராஸ் ஆகும். பருமனான உடலமைப்புடன் கூடுதல் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டாலும் அல்ட்ராஸில் வழங்கப்படும் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பானது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, அல்ட்ராஸின் உட்பக்கத்தில் கிடைக்கும் விசாலமான இடவசதி மறுப்பக்கம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

2. ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூவிற்கு கடந்த 2022 ஜூன் மாதத்தில் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டது. இதனால் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கும் வென்யூவில் 3வது இருக்கை வரிசை எதுவும் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் 4 நபர்களை கொண்ட குடும்பத்திற்கு வென்யூ ஏற்ற கார் ஆகும். அதேபோல் இந்த எஸ்யூவி காரின் சஸ்பென்ஷனிலும் பெரியதாக எந்த குறையும் இல்லை.

3. சிட்ரோன் சி3

பிரபலமான பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோன் இந்தியாவில் அறிமுகப்படுத்திய இரண்டாவது கார் தான் சி3 ஆகும். எஸ்யூவி போன்றதான உடலமைப்பை கொண்டிருந்தாலும், சி3 காரை ஹேட்ச்பேக் கார் என்றே சிட்ரோன் நிறுவனம் களமிறக்கியது. தரையில் இருந்து காரின் அடிப்பகுதி நன்கு மேலாகவே இருக்க, அதனை காட்டிலும் சி3 காரின் சஸ்பென்ஷன் அமைப்பானது சூப்பராக உள்ளதாக அதனை இயக்கி பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

4. டாடா டியாகோ என்.ஆர்.ஜி

தரமான டாடா கார்களுள் ஒன்றாக விளங்கும் டியாகோவின் சற்று கூடுதல் உயரமான க்ராஸ்ஓவர் வெர்சன் தான் டியாகோ என்.ஆர்.ஜி ஆகும். கூடுதல் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் (தரையில் இருந்து காரின் அடித்தள பகுதி) மூலம் உயரமாக்கப்பட்டு வழங்கப்படுகின்ற இந்த காரின் பம்பர்கள் அதற்கு ஏற்ப முரட்டுத்தனமான தோற்றத்தில் பொருத்தப்படுகின்றன. மற்ற டாடா கார்களை போன்று டியாகோ என்.ஆர்.ஜி காரின் சஸ்பென்ஷனும் சிறப்பான முறையில் ட்யூன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

5. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா

இந்த வரிசையிலேயே சற்று அளவில் பெரியதான புத்தம் புதிய கார் கிராண்ட் விட்டாரா ஆகும். ஏனெனில் இந்த மிட்சைஸ் எஸ்யூவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட கிராண்ட் விட்டாரா புத்தம் புதிய மாடல் என்பதால் கேபின் இடவசதியிலும், சவுகரியத்திலும் எந்தவொரு குறைப்பாடும் இருக்காது என்பதை உறுதியாக கூற முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 2, 2023, 19:12 [IST]
English summary
Best 5 cars for small families in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+