சோர்வா அப்படினா என்னானு கேப்பீங்க! டூர், லாங் டிராவல்னு எல்லாத்துக்கும் இந்த கார்களை போட்டு வெளுத்து வாங்கலாம்

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். ஒட்டுமொத்த ஐந்து நீண்ட தூர டிராவல்களுக்கு ஏற்ற கார்களின் லிஸ்டை வழங்கி உள்ளோம். விலை மற்றும் சிறப்பு வசதிகள் என அந்த கார்களின் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் மத்தியில் டிராவல் செய்யும் கலாச்சாரம் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. பொது போக்குவரத்து வாகனங்களைக் காட்டிலும் இருசக்கர வாகனம் அல்லது கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணத்தை மேற்கொள்ளும்பட்சத்தில் சுவாரஷ்யமான டிராவல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் பார்க்க இருக்கின்ற இந்த ஐந்து கார்களும் லாங் டிரைவிற்கு என்றே பிரத்யேக அம்சங்களைத் தாங்கியவையாக இருக்கின்றன.

Cars with ultimate comfort for long distance

அவை என்ன?, லாங் டிராவலுக்கு ஏற்ப என்ன மாதிரியான அம்சங்களை அந்த கார்கள் தாங்கி இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். டொயோட்டா, கியா, மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களின் கார்களே இந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

Toyota innova crysta

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta): இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கும் எம்பிவி ரக கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவும் ஒன்று. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராகவும் இது இருக்கின்றது. இதன் அதிக இட வசதி, மிகுந்த கம்ஃபோர்ட்டான இருக்கை உள்ளிட்டவை லாங் டிரைவிற்கு ஏற்றவையாக இருக்கின்றன.

மிகுந்த கரடு-முரடான சாலையில் பயணிக்க நேரிட்டாலும் சிறிதும் அலுப்பு தெரியாது. அந்த அளவிற்கு மிக சிறந்த காரே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஆகும். இதனால்தான் அரசியல்வாதிகள் தொடங்கி பல முக்கிய பிரமுகர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரில் லாங் டிரைவின்போது பொழுதைபோக்கும் விதமான அம்சங்கள் சிலவும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கேபினை அதிக வேகத்தில் குளர்ச்சியாக்கும் வசதிக் கொண்ட ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், பவர் விண்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய இன்னவோ க்ரிஸ்டா டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2.4 சிலிண்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் பிஎஸ் 6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ ஆகிய விதிகளுக்கு உட்பட்டதாகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டாரும் லாங் டிரைவிற்கு ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சம் ஆகும்.

Mahindra xuv700

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700): இந்தியாவில் மிக அமோகமான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்யூவி காராக இது இருக்கின்றது. இந்த காரை புக் செய்துவிட்டு லட்சக் கணக்கானோர் டெலிவரிக்காக மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கே இந்தியர்களிடத்தில் மிக சிறப்பான வரவேற்பை அது பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த காரில் நீண்ட தூர டிராவலை என்ஜாய் செய்து பயணிக்கும் விதமாக அதிக இட வசதி, கம்ஃபோர்டான இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சம் என எக்கசக்க சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. இதன் ஆரம்ப விலை ரூ. 17,42 லட்சம் ஆகும்.

லாங் டிரைவிற்கு ஏற்ற இரு விதமான மோட்டார் தேர்வுகள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டர்போசார்ஜட், 4 சிலிண்டர் மோட்டார் மற்றும் 2.2 லிட்டர் ட்போசார்ஜட் மோட்டார், இவையே அந்த எஞ்ஜின் தேர்வுகள் ஆகும். இரண்டும் சூப்பரான மற்றும் நல்ல உழைக்கும் திறன் கொண்ட மோட்டார்கள் ஆகும்.

Tata harrier

டாடா ஹாரியர் (Tata Harrier): இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. அதேவேளையில் நீண்ட தூர டிராவலிற்கு ஏற்ற காராகவும் அது காட்சியளிக்கிறது. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிக சிறந்த தயாரிப்பாக ஹாரியர் காட்சியளிக்கின்றது. டாடாவின் இந்த தயாரிப்பில் கூடுதல் சிறப்பு வசதிகளாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் ஆகும்.

Kia carnival-

கியா கார்னிவல் (Kia Carnival): அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எம்பிவி ரக கார் இதுவாகும். இதனை கார் என்று கூறுவதற்கு பதிலாக உல்லாச கப்பல் என கூறலாம். அந்த அளவிற்கு அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த வாகனமே கியா கார்னிவல் ஆகும்.

மிகமிக தாராளமான இட வசதி, மிகுந்த கம்ஃபோர்டான உணர்வை வழங்கும் இருக்கைகள், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி என ஏகப்பட்டது இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், லாங் டிரைவை மேற்கொள்ள ஏதுவாக ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட ஆர்ம் ரெஸ்ட் , சன்கிளாஸ் தாங்கிகள், ஓட்டுநர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, புஷ் பட்டன்/ஸ்டார்ட், எலெ்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் கண்ணாடிகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ டிபாஃக்கர் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

எஞ்ஜினை பொருத்தவரை கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 200 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் இயங்குகிறது. இந்த கார் ரூ. 31 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Toyota vellfire

டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire): இதுவும் கியா கார்னிவலை போல அதிக ஆடம்பர வசதிகள் நிறைந்த எம்பிவி ரக காராகும். இந்த காரில் பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் என அனைத்தும் ஏராளமாக கொடுக்கப்பட்டு இருக்கும். இதனை வாகன ஆர்வலர்கள் அல்டிமேட் கம்ஃபோர்டான கார் என அழைக்கின்றனர்.

இந்த காருக்கு இந்தியாவின் செலிபிரிட்டிக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மோகன்லால் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். லாங் டிரைவ் செல்லும்போது சின்ன அலுங்கள்கூட இந்த காரில் நமக்கு ஏற்படாது. குறிப்பாக, இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போல அனுபவம் கிடைக்கும்.

அதிக இட வசதி, ப்ளஷ் டைப் இருக்கைகள், அட்வான்ஸ்டு சிறப்பம்சங்கள், மிக சிறந்த ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், பவர் விண்டோ மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டொயோட்டா வெல்ஃபையர் காரின் இந்திய விலை ரூ. 96.55 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லிஸ்டில் உள்ள அனைத்து கார்களும் லாங் டிரைவிற்கு மட்டுமல்ல நீடித்து உழைக்கும் திறன் கொண்டவையும்கூட. இதனால்தான், லிஸ்டில் பார்த்த பெரும்பாலான கார்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இவை குடும்பத்துடன் பயணிக்கவும் ஏற்ற கார்களாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 20:09 [IST]
English summary
Best cars for long journeys
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X