டிஸ்பிளேவில் வைக்கப்பட்ட இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வந்தா தங்கம் போல கொத்திட்டு வந்திருங்க.. ஒர்த்தானவை!
டிவி, செல்போன், வாஸிங் மெஸின்களைப் போலவே புதிதாக விற்பனைக்கு வரும் கார்களும் ஷோரூம்களில் டெமோவிற்காக வைத்துக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த மாதிரியான டெமோ கார்கள் நாளடைவில் விற்பனைக்கு வருவதும் உண்டு. அப்படி அவை விற்பனைக்கு வரும்போது கணிசமான அளவு விலை குறைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனால்தான் ஒரு சிலர் டெமோ கார்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஓட்டி பார்க்கும் அனுபவத்தை வழங்கும் வேண்டும் என்பதற்காக டெமோ கார்களை ஷோரூம் நிர்வாகம் டெஸ்ட் டிரைவ் செய்ய அனுமதிப்பதுண்டு. இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே அவை புதிய ஒன்றைக் காட்டிலும் சற்று மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதுபோன்று விற்பனைக்கு வரும் டெமோ கார்களில் பெஸ்டான டெமோ கார் எது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எந்த டெமோ கார் வாங்கிப் பயன்படுத்த மிகவும் ஒர்த்தானவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno): இந்தியாவின் பிரீமியம் தர வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரே பலினோ ஆகும். அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய ஓர் வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 8.38 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலின் டெமோ பீஸ் விற்பனைக்குக் கிடைக்கும் எனில் துளியளவும் யோசிக்காமல் வாங்கலாம். அதேவேளையில், அந்த டெமோ பலினோ கார் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்து பின்னரே வாங்க வேண்டும்.
ஏனெனில், டெமோ கார்கள் சில நேரங்களில் ஷோரூம் ஊழியர்களாலும் பயன்படுத்தப்படுவதுண்டு. இதேபோல், வாடிக்கையாளர்கள் ஆராய்ந்து பார்க்கவும் அந்த கார் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், சிறு சிறு சிராய்ப்புகள் மற்றும் தேய்மானம் ஆகியவற்றை அவை கொண்டிருக்கும் என்பதால் இதுகுறித்து அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே எந்தவொரு டெமோ காரையும் வாங்க வேண்டும்.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். மிகப் பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி சற்று அதிகம் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களின் பிரி்யமான காராகவும் இது தென்படுகின்றது. இத்தகைய கார் மாடலின் டெமோ பீஸ் விற்பனைக்கு வரும் எனில் சிறிதும் யோசிக்காமல் இந்த காரை வாங்கிக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 10.9 லட்சம் தொடங்கி ரூ. 17.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே கிரெட்டா விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஹோண்டா சிட்டி (Honda City): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் செடான் ரக கார் மாடல் இதுவாகும். இப்போதும் இந்தியாவின் செடான் பிரிவு துடிப்புடன் இருக்கின்றது என்றால் அதற்கு இந்த சிட்டி காரும் ஓர் காரணமாக இருக்கின்றது. இப்போது, இந்த கார் இரு விதமான மாடல்களாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஐந்தாம் தலைமுறை சிட்டி மற்றும் சிட்டி இ:எச்இவி ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 11.62 லட்சம் ஆகும். இருப்பதிலேயே அதிக விலைக் கொண்டதாக சிட்டி இ:எச்இவி இருக்கின்றது. அதன் ஆரம்ப விலை ரூ. 18.89 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இந்திய அரசியல்வாதிகள் பலரின் விருப்பமான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இவர்களுக்கு மட்டுமில்லைங்க தொழிலதிபர்கள் மற்றும் பெரிய குடும்பத்தைக் கொண்டவர்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலின் டெமோ யூனிட் விற்பனைக்குக் கிடைக்கும் எனில் தாராளமாக வாங்கலாம். இந்தியாவில் 33 லட்ச ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். அதிக பாதுகாப்பு திறன் மற்றும் சிறந்த ரேஞ்ஜ் திறன் உள்ளிட்டவற்றிற்கு பெயர்போன இ-காராகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே சமீபத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.
முன்பைவிட அதிக பிரீமியம் மற்றும் கவ்ர்ச்சியான லுக்கில் அந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதன் பழைய வெர்ஷனின் டெமோ பீஸ் இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இது விற்பனைக்குக் கிடைக்கும் எனில், உடனடியாக சில ஆய்வுகளுக்கு பின்னர் அதனை வாங்கிக் கொள்ளலாம். ரூ. 14.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கார் மாடல்களைக் காட்டிலும் சற்றே குறைவான விலையில் இந்த டெமோ கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சுமார் 10 சதவீதம் தொடங்கி 20 சதவீதம் வரையில் மட்டுமே விலை குறைக்கப்பட்ட நிலையில் அவை விற்கப்படும். அதேவேளையில், டீலரிடத்தில் பேரம் பேசி இந்த விலையில் கூடுதல் குறைப்பு அல்லது சலுகையை தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








