வாங்கினா இந்த கார் மாடல்களை மட்டும் வாங்குங்க... நாளைக்கு விற்க போன நல்ல விலைக்கு போகும்...

புதிய கார்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே யூஸ்டு வாகனங்களுக்கும் இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி பலேனோ, ரெனால்ட் க்விட் ஆகியவற்றிற்கு மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஸ்பின்னியும் ஒன்று. இந்த சமீபத்தில் ஓர் தகவலை வெளியிட்டிருந்தது. அது வெளியிட்ட தகவலின்படி, ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி பலேனோ, ரெனால்ட் க்விட், ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்ட கார் மாடல்களையே செகண்ட் ஹேண்டில் அதிகம் விரும்பி வாங்குவதாக தெரிவித்திருக்கின்றது.

Maruti suzuki ciaz

இதேபோல், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் அதிக நம்பகமான பிராண்டுகளாக ஹூண்டாய், ஹோண்டா மற்றும் மாருதி சுஸுகி ஆகியவையே இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. பெங்களூரு, டெல்லி-என்சிஆர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைத்த விற்பனை புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே இந்த தகவலை ஸ்பின்னி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, முதன் முதலில் காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிகமானோர் செகண்ட்-ஹேண்ட் வாகனத்தையே தேர்வு செய்வதும் ஸ்பின்னி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு விற்பனை ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

Hyundai i20

அதில் 65 சதவீதக்கும் அதிகமானோர் முதல் முறையாக கார் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 5 சதவீதம் கூடுதல் ஆகும். இதேபோல், சில்வர் நிறம் கொண்ட கார்களுக்கு மிக அதிகளவில் செகண்ட் ஹேண்ட் சந்தையில் வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக கிரே மற்றும் சிவப்பு நிறங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து உள்ளது. அதேவேளையில், தலைநகர் டெல்லியில் உள்ள அதிகம் வெள்ளை நிறத்திற்கு முன்னுரிமை அளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, சில்வர் மற்றும் கிரை நிறங்களுக்கும் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

Renault kwid

சென்னை வாசிகள் சற்று வித்தியாசமானவர்கள். இங்கு சிவப்பு நிறத்திற்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான இடத்திலேயே வெள்ளை மற்றும் கிரே நிறங்களுக்கு சென்னை வாசிகளுக்கு பிடித்தமான நிறங்களாக இருக்கின்றன. இந்திய சந்தையில் இப்போது டாப் செல்லிங் கார்களாக எஸ்யூவி ரக கார்கள் இருக்கின்றன.

ஆனால், ஸ்பின்னியைப் பொருத்தவரை அதன் இடத்தில் ஹேட்ச்பேக் கார்களே அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக செகண்ட் ஹேண்ட் சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்கு அடுத்த இடத்திலேயே எஸ்யூவி மற்றும் செடான் ரக கார்கள் இருக்கின்றன.

Hyundai creta

தொடர்ந்து, பெண் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக ஸ்பின்னி தெரிவித்துள்ளது. அதனிடத்தில் 2023 ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரையில் வாங்கியவர்களில் 36 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான் என்பது தெரிய வந்திருக்கின்றது. பொதுவாக இந்தியாவில் பண்டிகைத் தினங்களில் அதிகளவில் புதிய கார்கள் விற்பனையாகும்.

ஸ்பின்னியிடம் கார்களை வாங்கியவர்களும் பண்டிகைத் தினங்களைத் தேர்வு செய்தே அதிகமானோர் வாங்கி இருக்கின்றனர். இதன்படி, ஹோலி, நவராத்திரி மற்றும் அக்ஷய திரிதியை ஆகிய பண்டிகை நாட்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதேபோல் மற்ற பண்டிகைத் தினங்களிலும் நல்ல எண்ணிக்கையிலேயே ஸ்பின்னி கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

Maruti suzuki baleno

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மார்க்கெட் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இந்த காரணத்தினாலேயே மஹிந்திரா, மாருதி தொடங்கி முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள்கூட யூஸ்டு கார் விற்பனையைத் தொடங்கி இருக்கின்றன. இந்த சந்தையில் எந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கொண்டிருக்கின்றது என்கிற விபரமே இப்போது வெளியாகியுள்ளது. இதன்படி நீங்களும் உங்களுக்கான காரை தேர்வு செய்தால் எதிர்காலத்தில் அதை விற்கும்போது உடனடியாக விற்பனைச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 18:45 [IST]
English summary
Best selling used car models in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X