இந்த வருச தீபாவளிக்கு வெடி வாங்குறீங்களோ இல்லயோ! இதுல ஒரு காரை கண்டிப்பா வாங்கிடுங்க!

தீபாவளி வரும் நிலையில் பலர் தீபாவளியை ஒட்டி புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இன்று தற்போது மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதால் பலர் எஸ்யூவி கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதன்படி மார்க்கெட்டில் விற்பனையாகும் சிறந்த எஸ்யூவி கார்கள் குறித்து விவரங்களை காணலாம்.

கடந்த 5 ஆண்டுகளாக மெது மெதுவாக எஸ்யூவி கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் எஸ்யூவி கார்களை தான் தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். இப்படியாக இந்த தீபாவளிக்கு நீங்கள் எஸ்யூவிக்காக வாங்க நினைத்தால் இந்த பட்டியலில் உள்ள ஒரு காரை வாங்கலாம்.

best suv cars for october 2023

ஹூண்டாய் க்ரெட்டா: இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஹுண்டாய் க்ரெட்டா சிறந்த தேர்வாக இருக்கிறது. இதன் அசத்தலான டிசைன் மற்றும் இதில் உள்ள வசதிகள் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் தற்போது மார்க்கெட்டில் 10.87 லட்சம் முதல் 19.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

கியா செல்டோஸ்: கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகமாகி வெகு சீக்கிரமாக நல்ல வளர்ச்சியை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் சென்டோஸ் கார் மக்கள் அதிகம் விரும்பும் காராக இருக்கிறது. சாலையில் இந்த காரை அதிகம் காண முடிகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 10.90 லட்சம் முதல் ரூபாய் 20.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

best suv cars for october 2023

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா: மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள். காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 8.29 லட்சம் முதல் 14.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என்: மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த ஸ்கார்பியோ ரக கார் விற்பனையில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக ஸ்கார்பியோ கார் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 13.26 லட்சம் முதல் ரூபாய் 24.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

best suv cars for october 2023

டொயோட்டா ஃபார்ச்சூனர்: டொயோட்டா நிறுவனத்தின் இந்த பார்ச்சூனர் கார் ஒரு முழு-சைஸ் எஸ்யூவி ரக காராக இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இந்த காரை வைத்திருந்தாலே சமூகத்தில் அவர்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 33.43 லட்சம் முதல் ரூபாய் 51.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன்: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் கார் 5 சீட் கொண்ட எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 21 வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

best suv cars for october 2023

இதில் 10 வேரியண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டாக இருக்கிறது. இவை எல்லாம் பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய வேரியன்டாக உள்ளன. இந்த கார் அதிக பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 11.62 லட்சம் முதல் ரூபாய் 19.76 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா: மாருதி நிறுவனத்தின் அடுத்த 5 சீட்டர் எஸ்யூவி கார். இந்த கார் மொத்தம் 17 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1462சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை சுஸூகி நிறுவனம் குளோபல் சி பிளாட்பார்மில் தயாரிக்கிறது. காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 10.70 லட்சம் முதல் 19.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

best suv cars for october 2023

மஹிந்திரா எக்ஸ்யூவி 700: அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இந்த கார் மொத்த 30 விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 14.03 லட்சம் முதல் ரூபாய் 26.57 லட்சம் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்யூவி செக்மெண்டில் இந்த கார் மூலம் தான் நுழைந்துள்ளது. இதுவும் ஒரு 5 சீட்டர் எஸ்யூவி கார் தான். இந்த கார் மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இந்த காரின் விலையைப் பொறுத்தவரை 10.99 லட்சம் முதல் 15.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டொயோட்டோ அர்பன் க்ரூஸர் ஹைரைடர்: டொயோட்டா நிறுவனத்தின் இந்த கார் மாருதி நிறுவனத்துடன் பகிரப்பட்ட காராக இருக்கிறது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா காரின் டொயோட்டா வெர்ஷனாக உள்ளது. இந்த ஹைரைடர் காரை பொறுத்தவரை 5சீட்டர் எஸ்யூவி காராக இருக்கிறது. இதில் ஹைபிரிட் வேரியண்டும் அடங்கும். இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 15.14 லட்சம் முதல் 18.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகமான கார்கள் விற்பனையாகி வரும் . வழக்கமாக இது பண்டிகை காலங்களில் நடக்கும் விற்பனை ஏற்றம் தான். இதை குறி வைத்து பல நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகிறது. இந்த நேரத்தில் கார் வாங்குவது என்பது ஒரு நல்ல யோசனை தான். மேலே உள்ள பட்டியலில் ஒரு காரை நீங்கள் துணிந்து தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 21:23 [IST]
English summary
Best suvs for october 2023 ideal for diwali purchases
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X