பாரத் பென்ஸ்-ரிலையன்ஸ் இணைந்து தயாரித்த கப்பல் (பேருந்து).. பெட்ரோல், டீசல், மின்சாரம்னு எதுவுமே தேவைப்படாது!
இரு ஜாம்பவான் நிறுவனங்களான பாரத் பென்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டும் இணைந்து சொகுசு கப்பல் மாதிரியான பேருந்தை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாதிரியான பேருந்தின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பார்த் பென்ஸ் (Bharat Benz) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆகிய இரு ஜாம்பவான் நிறுவனங்களும் இணைந்து ஓர் புத்தம் புதிய அதி-நவீன மற்றும் லக்சூரி வசதிகள் நிறைந்த பேருந்தை உருவாக்கி இருக்கின்றன. இந்த பேருந்து ஓட பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி என எதுவும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இதைச் சார்ஜ் செய்யவும் தேவையில்லை. அப்படினா இந்த பேருந்து எதுலதான் ஓடும் என்கிற கேள்வியும், சந்தேகமும் உங்களுக்கு எழும்பலாம். இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த பேருந்து ஓர் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடும் திறன் கொண்டது வாகனம் ஆகும்.
இதுவே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் முதல் இன்டர்சிட்டி சொகுசு பேருந்து ஆகும். இதை தற்போது கான்செப்ட் மாடலாகவே நிறுவனங்கள் காட்சிப்படுத்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் தலைமையில் ஜி20 கோவாவில் நேற்றைய தினம் தொடங்கியது. இது வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற 4வது ஆற்றல் மாற்றங்களுக்கான பணிக்குழு கூட்டத்திலேயே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் திறன் கொண்ட பேருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த பேருந்தின் ஃப்யூவல் செல் சிஸ்டம் பிரத்யேகமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸால் வடிவமைத்து, தயார் செய்யப்பட்டது ஆகும். நிறுவனத்தின் சர்வதேச கூட்டாளர்கள் சிலரின் உதவி உடன் இந்த சிஸ்டத்தை அது உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிஸ்டம் 300 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
ஆகையால், மிகவும் சக்தி வாய்ந்த ஃப்யூவல் செல் சிஸ்டமாக இது பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் பேருந்துகளுக்கு மிகப் பெரிய போட்டியாக மாறும். குறிப்பாக, இதில் ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.
ஆகையால், நீண்ட தூர டிராவலைகூட இந்த பேருந்தால் மேற்கொள்ள முடியும் என தெரிகின்றது. ஆனால், இந்த திறன் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதைக் காட்டிலும் நகரங்களுக்கு இடையில் பயன்படுத்தவே உகந்ததாக இருக்கும். அதேபோல், இந்த பேருந்தின் இயக்கத்தினால் எந்த விதமான சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவில் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிற பசுமை வாகனங்களை போலவே ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. இதுவிரைவில் தீவிரப்படுத்தவும் உள்ளது. ஆகையால், வெகு விரைவில் இந்தியாவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடக் கூடிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சொகுசு பேருந்து அடுத்த 12 மாதங்களில் தீவிர சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட இருக்கின்றது. எனவே இந்தியாவின் முதல் இன்டர்சிட்டி பேருந்தாக இது பன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜன் ஃப்யூல் செல், இது மின்சாரமாக கன்வெர்ட் செய்யப்பட்டே இந்த பேருந்து இயங்கும். இதை மின்சார மாற்றும்போது மாசு வெளிப்படுமே என நினைக்கலாம். ஆனால், இந்த மாற்றம் செய்யப்படும்போது நீராவியே வெளியில் வரும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.


Click it and Unblock the Notifications








