மத்திய அரசின் பச்சை கொடிக்காக காத்திருக்கும் கார் நிறுவனங்கள்!! கண் அசைச்சா எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணிடலாம்!

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்படும் கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதில் எல்லா நிறுவனங்களது கார்களும் இருப்பதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. அவற்றுள், எந்தெந்த கார்கள் விரைவில் இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியா பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட்டில் பாரத் நியூ கார் அசெஸ்மெண்ட் புரோகிராம் (Bharat New Car Assessment Programme - BNCAP)-ஐ அறிமுகப்படுத்தியது. உலகளவில் க்ளோபல் என்சிஏபி மற்றும் ஆசியன் என்சிஏபி ஆகியவை உள்ளன. அவற்றில் இருந்து தருவிக்கப்பட்டதாக இந்தியாவிற்கான பாரத் என்சிஏபி வரையறை செய்யப்பட்டுள்ளது.

bharat ncap testings will starts

அதாவது, இந்திய தர நிலைக்கு ஏற்ப சில திருத்தங்கள் செய்துக் கொள்ளப்பட்டன. இது இந்தியாவின் பாதுகாப்பு தரநிலைகளை உயர்த்தும் என நம்பப்படுகிறது. மக்கள் பலர் பாரத் என்சிஏபி மதிப்பீடுகளை பார்த்து இனி கார்களை வாங்க ஆரம்பிப்பர். இதனால், கார் விற்பனையில் பாரத் என்சிஏபி-இன் மதிப்பீடு முக்கிய அம்சமாக விளங்கும் என்பதால், இப்போதே பல கார் நிறுவனங்கள் இந்த கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்த வரிசைக்கட்டி நிற்கின்றன.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் கார்களை உட்படுத்துவதற்காக பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இதனால், டஸன் கணக்கில் கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. ஆகஸ்ட்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் என்சிஏபி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது.

bharat ncap testings will starts

ஆனால், பாரத் என்சிஏபி-இன் கீழ் மோதல் சோதனைகள் தீபாவளிக்கு பிறகே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களினால் தான் பாரத் என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட் துவங்குவதற்கு தாமதமாகுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே தற்சமயம், கார்களின் உடலமைப்பின் பாதுகாப்பு தரத்துக்கு சில கட்டாய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் உள்ளன.

பாரத் என்சிஏபி-இல் பெரிய பயணிகளின் பாதுகாப்பு, குழந்தை பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி தொழிற்நுட்பங்கள் என 3 விதமான சோதனைகள் அடிப்படையில் கார்கள் சோதனை செய்யப்பட உள்ளன. இதற்காக இனி கார் உற்பத்தி நிறுவனங்கள் அல்லது கார் இறக்குமதியாளர்கள் விண்ணப்பம் 70ஏ -ஐ இனி பூர்த்தி செய்ய வேண்டும்.

bharat ncap testings will starts

சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கார்களுக்கு 0-இல் இருந்து 5 ஸ்டார்கள் வரையில் வழங்கப்படும். இந்தியாவின் ஆட்டோமொபைல் ஸ்டாண்டர்ட் (AIS)-இன் அடிப்படையில் கார்களுக்கு அவற்றின் பகுப்பாய்வின்படி பாரத் என்சிஏபி மதிப்பெண்கள் வழங்கப்படும். பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் கட்டாயமில்லை, இருப்பினும் கார் நிறுவனங்களிடம் இருந்து அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசாங்கம் கட்டாயம் படுத்துவதற்கு முன்பே கார் நிறுவனங்கள் தானாக தங்களது கார்களை பாரத் என்சிஏபி-க்கு அனுப்பி வைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. எப்படி இருந்தாலும், இன்னும் சில வருடங்களில் பாரத் என்சிஏபி-ஐ கார்கள் விற்பனையில் மத்திய அரசு கட்டாயமாக்கிவிடும். அதற்கு முன்பே நாமாக உஷார் ஆகிவிடுவோம் என்கிற ரீதியிலேயே டஸன் கணக்கிலான கார்கள் பாரத் என்சிஏபி வாசலில் காத்துக் கிடக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 16:43 [IST]
English summary
Bharat ncap car manufacturers vying for 5 star rating here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X