பாரத் கிராஷ் டெஸ்ட்டுக்கு டாடா அனுப்பும் முதல் கார்!! இந்தியாவின் பெயரை காப்பாற்றுமா? ரிசல்ட் விரைவில்!

டாடா மோட்டார்ஸின் புதிய கார்களாக அறிமுகமாகும் 2023 ஹெரியர் மற்றும் சஃபாரி இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளன. புதிய டாடா ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் வருகிற அக்டோபர் 17ஆம் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஹெரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்களை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. நாளை (அக்டோபர் 17) இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த புதிய டாடா கார்கள் ஓட்டுவதற்கு எவ்வாறு உள்ளன என்பதை அறிய நிஜ உலகில் நாங்கள் ஓட்டி பார்த்துள்ளோம்.

Bharat NCAP Crash Tests

அதன் மூலம் நாங்கள் வழங்கியுள்ள ரிவியூவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் காணலாம். இவ்வாறு, பல தரப்பு மக்களிடையே கவனத்தை பெற்றுள்ள புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாரத் என்சிஏபி ஆனது இந்திய அரசாங்கம் தனது நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களை பகுப்பாய்வு செய்வதற்காக சமீபத்தில் அறிமுகப்படுத்திய திட்டமாகும். க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி உள்ளிட்டவை ஏற்கனவே இருக்கும் நிலையில், நம் இந்தியாவிற்கென ஒரு என்சிஏபி துவங்கப்பட்டு உள்ளது. என்சிஏபி (NCAP) என்பது புதிய கார்களை பகுப்பாய்வு செய்யும் புரோகிராம் ஆகும்.

Bharat NCAP Crash Tests

மற்ற என்சிஏபி-களை போலவே, பாரத் என்சிஏபி-இலும் கார்கள் முன்பக்க, பக்கவாட்டு மற்றும் சைடு போல் மோதல்கள் என வெவ்வேறு விதமான மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த கார்கள் பாரத் என்சிஏபி-க்கு அனுப்பப்படுவதற்கு காரணம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை உருவாக்கிய விதம் ஆகும்.

பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்படும் முதல் டாடா கார்கள் என்பது ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும், இந்த கிராஷ் டெஸ்ட்டிற்கு ஏற்ப ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது. இந்த இரு எஸ்யூவி கார்களிலும் 6 ஏர்பேக்குகள் நிலையானதாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட உள்ளன.

அதேபோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கிகள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவையும் 2023 ஹெரியர் & சஃபாரி கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும். அதேநேரம், இந்த கார்களின் விலைமிக்க உயர்நிலை வேரியண்ட்களில் கூடுதலாக சில ஏர் பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்கள் (ADAS) உள்ளிட்டவையும் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, டாடா கார்கள் நன்கு வலிமையானவை என்கிற கருத்து நம்ம இந்திய வாடிக்கையாளர்களிடையே உள்ளது. இருப்பினும், பாரத் என்சிஏபி-இல் உட்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2023 ஹெரியர் & சஃபாரி கார்களை டாடா நிறுவனம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியுள்ளதுபோல் தெரிகிறது. ஹெரியர் & சஃபாரி கார்கள் இதுவரையில் எந்தவொரு கிராஷ் டெஸ்ட்டிற்கும் உட்படுத்தப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 16, 2023, 16:56 [IST]
English summary
Bharat ncap crash tests for 2023 tata harrier and safari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+