இந்தியாவே இந்த ரிசல்டுக்காக தான் வெயிட்டிங்! இந்த வார இறுதியில் வெளியாகப்போகும் விருந்து
பாரத் என் கேப் சோதனையில் முதல் முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தன்னிச்சையான கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாக உள்ளதால் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இது சர்வதேச தரத்திற்கு எந்த அளவுக்கு ஈடு செய்யும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் தயாரிப்புகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை சோதனை செய்ய கிராஷ் டெஸ்ட் செய்யப்படும். சர்வதேச அளவில் பல்வேறு வகையான கிராஷ் டெஸ்ட்கள் இருக்கிறது. அமெரிக்கா, சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த கிராஷ் டெஸ்ட்கள் இருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் தனியார் நடத்தி வரும் குளோபல் என்கேப் சோதனை தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு என பிரத்தேகமான கிராஷ் டெஸ்ட் சோதனையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது அதன்படி பாரத் என்கேப் என்ற புதிய சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு இந்தியாவிலேயே சோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பாரத் என்கேப் என்ற கிராஷ் டெஸ்ட் சோதனை துவங்கப்பட்டாலும் முதல் கிராஷ் டெஸ்ட் கடந்த 15ஆம் தேதி தான் நடந்தது. இந்தியாவில் டாடா நிறுவனம் தான் முதல் காராக தனது ஹாரியர் என்ற காரைகிராஷ் டெஸ்ட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாருதி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் தங்கள் கார்களை பாரத் என்கேப் சோதனைக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார இறுதிக்குள் கடந்த 15ஆம் தேதி நடந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில் எந்தெந்த கார்கள் எப்படி பெர்ஃபார்ம் செய்தன என்ற முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவிற்காக பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். குளோபல் என்கேப் சோதனைக்கும் பாரத் என்கேப் சோதனைக்கும் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என்ன தகவல் எல்லாம் கிடைக்க பெறும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த கிராஷ் டெஸ்ட்டில் முன்பக்கம் வாகனத்தை மோத விட்டு சோதனை செய்வது, பக்கவாட்டில் ஒரு கம்பத்தை நிறுத்தி அதில் மோத விட்டு சோதனை செய்வது, பக்கவாட்டில் தடுப்புகளை வைத்து அதில் மோத விட்டு சோதனை செய்வது, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோலை சோதனை செய்வது, பாத சாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்வது உள்ளிட்ட ஏகப்பட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் சோதனை செய்யப்படுகிறது. கார் பின்பக்கம் மோதக்கூடிய வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்ற சோதனையும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகளின் முடிவுகளை வைத்து ஒவ்வொரு வாகனங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் ஸ்டார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் என்கேபில் இருப்பதைப் போல இதிலும் ஐந்துக்கு எத்தனை ஸ்டார்கள் இந்த கார்கள் பெற்றுள்ளன என தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் போக கியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் கார், புதிய சோனட் கார் ஆகிய கார்களும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டர், கிரெக்டா மற்றும் வெர்னா ஆகிய கார்களும் பாரத் என்கேப் சோதனையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில் இருந்து வரிசையாக முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தற்போது மக்கள் மத்தியில் இந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெளியாகும் முடிவுகளில் என்னென்ன தகவல்கள் எல்லாம் இடம்பெறும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பெரும் கார்கள் பெரும் ஸ்டார்கள் குறித்த தகவல் மட்டுமே வெளியிடப்படுமா அல்லது ஒவ்வொரு டெஸ்டிலும் அந்த கார்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளது? ஒட்டுமொத்த மதிப்பெண் எவ்வளவு? கார்களில் என்னென்ன விதமான சேதங்கள் ஏற்பட்டது? என்ற தகவல் வெளியாகுமா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்படி வெளியானாலும் இந்தியாவில் உள்ள கிராஷ் டெஸ்ட் சோதனை என்பது இந்தியர்களுக்கு பிரத்தியேகமாக உள்ள ஒரு விஷயமாகவும் இதனால் இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டு கார்கள் விற்பனைக்கு வருவது என்பது இந்தியர்களுக்கு பெருமையான விஷயம். இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கார்களும் இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









