பாரத் என்கேப் ஃபுல்லா ரெடியாகிடுச்சு! அறிமுக தேதியும் செல்லிட்டாங்க!

இந்தியாவின் பிரத்தியேக கார் கிராஷ் டெஸ்ட்டான பாரத் என்கேப் திட்டம் வரும் 22ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனால் இனி இந்தியாவிலேயே கார்களை கிராஷ் டெஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கார்கள் பாதுகாப்பானது தான் என்பதை கண்டறிய கிராஷ் டெஸ்ட் செய்யப்படும். இப்படியாக கிராஷ் டெஸ்ட் செய்யப்படும் கார்களில் கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்து அதற்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் எல்லாம் அதிகமான ஸ்டார் ரேட்டிங்கை பெறும்.

bharat ncap

இப்படியாக கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் செய்ய சர்வதேச அளவில் இரண்டு மையங்கள் மட்டும்தான் முக்கியமாக செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது தான் என்கேப். இந்த என்கேப் என்பதற்கு விரிவாக்கம் நியூ புரோகிராம் என்பதாகும். தற்போது இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பாளர்கள் கூட தங்கள் கார்களை கிராஸ் டெஸ்ட் செய்ய வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தான் டெஸ்ட் செய்து வருகிறார்கள்.

இந்தியாவிற்கு என பிரத்தேகமாக கார் செய்யும் வசதிகள் இதுவரை இல்லை. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவிற்கான பிரத்தியேகமான கார் கிராஷ் டெஸ்ட் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாரத் என்கேப் என பெயரும் வைத்தது. இந்த பாரத் என்கேப் கார் டெஸ்ட்டை முழுமையாக இந்தியாவில் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இது எல்லாம் தயாராகி விட்டது. தற்போது இது அறிமுகத்திற்காக காத்திருக்கிறது.

bharat ncap

இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாரத் என்கேப் வரும் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் உள்ள பயணிகள் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பை இந்த பாரத் என்கேப் மையத்திற்கு கொண்டுவந்து டெஸ்ட் செய்து அதற்கான ரேட்டிங்கை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரத் என்கேப் திட்டம் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. மத்திய அரசு தற்போது அமைக்க போகும் இந்தத் திட்டத்தில் சுமார் 3.5 டன் வரை எடை கொண்ட வாகனங்கள் எல்லாம் டெஸ்ட் செய்ய முடியும். இந்த டெஸ்ட் மூலம் சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அல்லது விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைக்க முடியும் என மத்திய அரசு கணிக்கிறது.

bharat ncap

அதே நேரம் புதிதாக கார் வாங்குபவர்கள் தாங்கள் எந்த காரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை இந்த டெஸ்டின் முடிவுகள் மூலம் முடிவு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பாதுகாப்பான கார் எது என்பதை கண்டறிந்து அந்த காரை வாங்க முடியும், மேலும் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஒரு நம்பகத் தன்மையும் மக்கள் மத்தியில் ஏற்படும்.

இந்த பாரத் என்கேப் திட்டத்தின் படி வாகன தயாரிப்பாளர்களுக்கு தங்கள் வாகனத்தை கண்டிப்பாக டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவர்களாக முன்வந்து செய்ய விரும்பினால் டெஸ்ட் செய்து கொள்ளலாம் அதற்கான முடிவுகள் வெளியிடப்படும். ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் 197 படி இந்த டெஸ்ட் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் வழங்கப்படும் ஸ்டார் ரேட்டிங் பெரியவர்களுக்கு மற்றும் சிறியவர்களுக்கு என தனித்தனியாக பிரித்து வழங்கப்பட உள்ளது. இப்படியாக வழங்கப்படும் முடிவுகளை வைத்து கார் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான கார் எது என்பதை கண்டறிந்து அந்த காரை தேர்வு செய்ய முடியும் எந்த காரை வாங்கலாமா என்ற முடிவை எடுக்க இந்த ரேட்டிங் உதவியாக இருக்கும்.

இந்த பாரத் என்கேப் முடிவுகள் வெளியாவதன் மூலம் மக்கள் மத்தியில் பாதுகாப்பான கார்களுக்கு நல்ல மவுசு ஏற்படும் அதே நேரம் கார் தயாரிப்பாளர்களும் பாரத் என் கேப்பில் நல்ல ரேட்டிங் வாங்க வேண்டும் என்பதற்காகவே சிறந்த கால்களை தயாரிக்க துவங்கி விடுவார்கள். இப்படியாக தரமான கார்களை தயாரிப்பதன் மூலம் இந்திய சாலைகளில் விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும் அதே நேரம் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான கார்களை தயாரிப்பதன் மூலம் சர்வதேச மார்க்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தரமான கார்களாக இருக்கும் என்ற பெயர் கிடைக்கும். அதே நேரம் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கும் நல்ல மவுசு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக இந்தியாவுக்கு என பிரத்தியேகமாக கார் கிராஷ் டெஸ்ட் ஒன்றை அறிமுகப்படுத்துவது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. வெகு சில நாடுகளிலேயே உள்ள இந்த கிராஸ்டஸ்ட் வசதி தற்போது இந்தியாவிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இனி இந்தியாவில் இந்த பாரத் என்கேப் சோதனையில் எந்தெந்த கார்கள் திசை செய்யப்பட்டு எவ்வளவு ரேட்டிங் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 20, 2023, 22:13 [IST]
English summary
Bharat ncap set to launch on 22 aug says gadkari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X