உலக நாடுகளே ஆச்சரியமா பாக்குறாங்க! பாரத் என்கேப் குளோபல் என்கேப்பை விட இவ்வளவு பெஸ்டா?

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவிற்கு என பிரத்தேகமான கார் கிராஷ் டெஸ்டாக பாரத் என்கேப் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காரை கிராஷ் டெஸ்ட் செய்ய வெளிநாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற இருந்த நிலை தற்போது மாறி வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவிலேயே செய்ய முடியும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த பாரத் என்கேப் என்பது ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்டாண்டர்ட் AIS 197 விதியின்படி டெஸ்ட் செய்யப்படுகிறது. இதன் முடிவுகளில் பயணிகள் காரில் பயணிகள் எந்த அளவு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதன்படியே இதில் ஸ்டார் ரேட்டிங் பெர்ஃபார்மன்ஸிற்கான புள்ளிகளும் வழங்கப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு புதிய காரை வாங்க நினைப்பவர்கள் பாதுகாப்பான காரை தேர்வு செய்ய முடியும்.

bharat ncap vs global ncap

பாரத் என்கேப் என்பது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு கட்டாயம் இல்லை. கார் தயாரிப்பாளர்கள் விரும்பினால் இந்த டெஸ்ட்டை AIS197 விதியின் கீழ் டெஸ்ட் செய்து கொள்ளலாம். இந்த டெஸ்ட் முடிவுகள் இரண்டு விதமாக வழங்கப்படும் ஒன்று அடல்ட் ஆக்குபெண்ட் AOP மற்றொன்று சைல்டு அக்குபெண்ட்ட் COP என வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 8 சீட்டர் வரை கொண்ட 3.5 டன் எடை கொண்ட வாகனங்களை டெஸ்ட் செய்ய முடியும்.

குலோபல் என்கேப்பில் டெஸ்ட் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5 ஸ்டார்கள் வரை வழங்கப்படும். மேலும் பெரியவர்களுக்கான டெஸ்ட் பாயிண்டில் மொத்தம் 34 பாயிண்டுகள் வழங்கப்படும். அதில் 16 பாயிண்டுகள் முன்பக்க மோதல் மூலம் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட்டும். 16 பாயிண்ட்கள் பக்கவாட்டு பகுதியில் மோதும் போது ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட்டும். 2 பாயிண்டுகள் சீட் பெல்ட் ரிமைண்டர்களுக்காகவும் வழங்கப்படுகிறது.

bharat ncap vs global ncap

ஒரு வாகனம் கிராஷ் டெஸ்டில் பங்கேற்று 5 ஸ்டார்களைப் பெற வேண்டும் என்றால் அந்த வாகனம் பெரியவர்களுக்கான பாதுகாப்பு புள்ளியில் குறைந்தபட்சம் 27 புள்ளிகளையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு புள்ளியில் குறைந்தபட்சம் 41 புள்ளிகளையும் பெற்றிருந்தால் மட்டுமே 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

பாரத் என்கேப் சோதனையின் போது ஒரு காருக்கு மொத்தம் மூன்று விதமான கிராஷ் டெஸ்ட்கள் செய்யப்படும். அதாவது முன் பக்கம் மோதவிட்டு சோதனை, இரண்டாவது சைடு இம்பேக்ட் டெஸ்ட் அதாவது பக்கவாட்டில் மோத விட்டு சோதனை, மூன்றாவதாக போல் இம்பேக்ட் டிரஸ்ட் அதாவது கம்பத்தின் மீது மோத விட்டு சோதனை ஆகியவை செய்யப்படும் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகளை கணக்கிட்டே அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

bharat ncap vs global ncap

சோதனையில் பங்கேற்க வாகனத்தில் ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பயணிகளுக்கான மூன்று பாயின்ட் சீட் பெல்ட் மேம்படுத்தப்பட்ட எமர்ஜென்சி பேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்று இருக்க வேண்டும். இவையெல்லாம் கணக்கிடப்பட்டு தான் ஸ்டார் ரேட்டிங்கும் பாய்ண்டுகளும் வழங்கப்படும்.

இந்த பாரத் என்கேப் சோதனையின் போது கார் முன்பக்கம் மோத விட்டு சோதனை செய்யும் போது கார் அதிகபட்சமாக 64 கி.மீ வேகத்தில் வந்து மோதும் இதே நடைமுறைதான் குளோபல் என்கேப் சிஸ்டத்திலும் இருக்கிறது. பக்கவாட்டில் கார் மோதும் போது 50 கிலோமீட்டர் வேகமாக மற்றும் 29 கிலோமீட்டர் வேகமாகிய வேகங்களில் மோத விட்டு டெஸ்ட் செய்யப்படும்.

இந்த பாரத் என்கேப் சோதனையில் பெட்ரோல் டீசல் கார்கள் மட்டுமல்லாமல் சிஎன்ஜி, இவி ஆகிய கார்களின் செய்யப்படும் பாரத் என்கேப்பில் பெரியவர்கள் சிறியவர்கள் என சேர்த்து மொத்தமாக ஒரு கிராஷ் டெஸ்ட் முடிவுகளும் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை வைத்து மக்கள் பாதுகாப்பான கார்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இந்த பாரத் என்கேப் சோதனை இன்று அறிமுகம் ஆகி இருந்தாலும் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தான் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை இந்த சோதனை முறையில் சோதனை செய்ய ஆர்வமாக இருக்கின்றனர்.

பலர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது வரை இந்த பாரத் என்கேப் சோதனையில் 30 கார்களை ஈடுபடுத்திக் கொள்ள கார் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்து விட்டனர். இதன் முடிவுகள் வரிசையாக அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரை ஒரு காரை கிராஸ் செய்ய வேண்டும் என்றால் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. உலக அளவில் நான்கு இடத்தில் தான் இந்த கிராஷ் டெஸ்ட் மையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது ஐந்தாவது இடமாக இந்தியாவில் கார் கிராஷ் டெஸ்ட் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இனி கார் கிராஸ் டெஸ்ட் செய்ய இந்திய கார் தயாரிப்பாளர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய தேவையில்லை

More from DriveSpark

Article Published On: Tuesday, August 22, 2023, 19:23 [IST]
English summary
Bharat ncap vs global ncap regulations differences and similarities explained
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X