இன்னும் கொஞ்ச நாள் தான் மக்களே... இதை பார்க்காம இனி காரை வாங்காதீங்க!!
பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஸ் டெஸ்ட் சோதனைகள் வருகிற டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கிராஷ் டெஸ்ட்டில் முதலாவதாக மாருதி சுஸுகி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் சோதனையில் உட்படுத்தப்பட உள்ளன.
கார்களின் பாதுகாப்பை நிர்ணயிப்பதிலும், அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதிலும் என்சிஏபி முக்கிய பங்கு வகிக்கின்றன. என்சிஏபி-கள் உலகளவில் க்ளோபல் என்சிஏபி என்ற பெயரிலும், ஆசிய அளவில் ஆசியன் என்சிஏபி என்ற பெயரிலும் செயல்படுகின்றன. இந்தியாவின் பாரத் என்சிஏபி ஆனது க்ளோபல் என்சிஏபி-ஐ பெரிதும் சார்ந்திருக்கிறது.

பாரத் என்சிஏபி இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கும். பாரத் என்சிஏபி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த என்சிஏபி அமைப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கும் பண்டிகை நாட்களினால் பாரத் என்சிஏபி-இன் கீழ் எந்தவொரு மோதல் சோதனையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
அதாவது, பண்டிகை நாட்களினால் சிலர் தொடர் விடுமுறை எடுத்திருப்பார்கள் என்பதால், ஆட் பற்றாக்குறை இருக்கலாம் என பாரத் என்சிஏபி துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். நமக்கு முன்பு கிடைத்த தகவலில், பண்டிகை காலத்தினால் தான் கிராஷ் டெஸ்ட்கள் தொடங்காமல் இருப்பதாக கூறப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகு பாரத் என்சிஏபி-இல் சோதனைகள் துவங்கிவிடும் எனவும் சம்மந்தப்பட்ட மத்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பாரத் என்சிஏபி-இன் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனைகள் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் இதற்கு 1 மாதத்திற்கும் மேல் நாட்கள் இருக்கும் நிலையில், டஸன் கணக்கிலான கார்கள் இப்போதே பாரத் என்சிஏபி அமைப்பின் வாசல் கதவருகே காத்திருப்பதாக ஏற்கனவே முன்னொரு செய்தி ஒன்றில் கூறி இருந்தோம்.
3 டஸன் எண்ணிக்கையிலான, அதாவது 35க்கும் அதிகமான கார்கள் பாரத் என்சிஏபி துவங்குவதற்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக, ஜப்பானிய மற்றும் தென்கொரிய கார் நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய், கியா போன்ற நிறுவனங்கள் பாரத் என்சிஏபி விஷயத்தில் வழக்கத்தை காட்டிலும் தீவிரமாக உள்ளன. அதேபோல், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய கார் நிறுவனங்களும் தங்களது கார்களை முதலாவதாக பாரத் என்சிஏபி-இல் அனுப்ப முனைப்புடன் உள்ளன.

பாரத் என்சிஏபி இனி தான் துவங்கப்பட உள்ளது. க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி உள்ளிட்டவை செயல்பாட்டில் இருந்தாலும், இவற்றில் முறையான மதிப்பீடுகளை பெற்றால் மட்டுமே இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய முடியும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. இருப்பினும், இப்போதே பல்வேறு கார் நிறுவனங்கள் விருப்பப்பட்டு தங்களது கார்களை பாரத் என்சிஏபி-க்கு அனுப்பி வைத்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அக்டோபரில் அமலுக்கு வந்த பாரத் என்சிஏபி கிட்டத்தட்ட 2.5 மாதங்களுக்கு பிறகு செயல்பட துவங்குகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது தான். ஏனெனில், பண்டிகை காலத்தில் பொதுவாகவே வழக்கத்தை காட்டிலும் அதிக கார்கள் விற்பனையாகும். பண்டிகை காலத்திற்கு முன்பே பாரத் என்சிஏபி முடிவுகள் வெளிவந்திருந்தால், கார்களின் விற்பனையை மேலும் அவை அதிகரித்திருக்கக் கூடும்.


Click it and Unblock the Notifications









