இந்திய செல்வந்தரின் கார்களை பார்த்து வாயை பிளந்த கத்தார் அரசு!! இவர்கிட்ட இருக்கும் பணத்துக்கு...!
2023 ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் "கார் கலெக்டர் ஆஃப் தி இயர் 2023" விருது யோகன் பூனாவல்லாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய செல்வந்தரான யோகன் பூனாவல்லா தனது கார் கலெக்ஷன்களுள் முக்கியமான 7 ஐகானிக் கார்களை கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்படும் ஜெனிவா மோட்டார் கண்காட்சி இந்த 2023ஆம் வருடத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த கண்காட்சியின் துவக்கத்திலேயே "கார் கலெக்டர் ஆஃப் தி இயர் 2023" விருதை பெறுபவராக இந்தியன் பில்லியனர் யோகன் பூனாவல்லா அறிவிக்கப்பட்டார்.

அதன்பின், யோகன் அவரது கார் கலெக்ஷன்களுள் கண்காட்சிக்கு கொண்டுவந்த பிரத்யேகமான 7 கார்களை கத்தார் நாட்டின் பிரதமர் வெளியீடு செய்தார். அதன்பின் அந்த 7 கார்களும் கண்காட்சியில் பார்வையாளர்களின் முன் காட்சிக்காக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், அந்த 7 கார்களின் படங்கள் மற்றும் கண்காட்சியில் கலந்துக் கொண்ட யோகன் பூனாவல்லாவின் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன.
கத்தார் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட யோகன் பூனாவல்லாவின் கார்களில் பழமையான ரோல்ஸ் ராய்ஸ், பெண்ட்லீ மற்றும் லின்கோல்ன் நிறுவனங்களின் கார்கள் அடங்குகின்றன. இந்த 7 கார்களில், பழமையான ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் வி லிமௌசைன் ஒன்றாகும். 5எல்.சி.ஜி25 என்ற சேசிஸ் எண்ணை கொண்ட இந்த பழைய ரோல்ஸ்-ராய்ஸ் காரில் 7 பேர் தாராளமாக பயணிக்கலாம்.

இந்த லக்சரி ரோல்ஸ்-ராய்ஸ் காரை முதன்முதலில் கத்தார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் அகமது பின் அலி அல் தானி வாங்கினார். பின்னர் அவரிடம் இருந்து வாங்கிய யோஜன் பூனாவல்லா இந்த கண்காட்சியில் நிறுத்துவதற்காக காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு ரீ-ஸ்டோர் செய்துள்ளார்.
இந்த கிளாசிக் ரோல்ஸ்-ராய்ஸ் கார் உடன், 1949 ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் வ்ராய்த் ட்ராப் ஹெட் கூபே மற்றும் 1949 பெண்ட்லீ மார்க் 6 4-லைட் டூரிங் சலூன் கார்களும் யோகன் பூனாவல்லா சார்பில் கத்தார் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. விலையுயர்ந்த கார்களான இவற்றை மைசூர் மகாராஜா பயன்படுத்தினார். அத்துடன், 1927 ரோல்ஸ் ராய்ஸ் 20 எச்பி டூரர் காரையும் யோகன் பூனாவல்லா காட்சிப்படுத்தினார்.

இந்த 1927 ரோல்ஸ் ராய்ஸ் காரை குஜராத்தில் உள்ள சச்சின் பகுதியின் நவாப் வாங்கி பயன்படுத்தி வந்தார். கத்தார் கண்காட்சியில் யோகன் பூனாவல்லா சார்பில் 2ஆம் உலகப் போர் துவங்குவதற்கு முன்பாகவே 1933இல் உருவாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் 2 சர் மால்கோல் கேம்பெல் ஸ்போர்ட்ஸ் சலூன் காரும் நிறுத்தப்பட்டது. அத்துடன், 1979 ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் 6 லிமௌசைனும் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த 1979 ரோல்ஸ் ராய்ஸ் காரை இரண்டாம் குயின் எலிசபெத் பயன்படுத்தினார். இந்த 7-கார் கலெக்ஷனில் கடைசியாக இருப்பது, 1964 லின்கோல்ன் காண்டினெண்டல் 4-கதவு கன்வெர்டபிள் ஆகும். இந்த குறிப்பிட்ட லின்கோல்ன் கார் ஆறாம் போப் பால் அவர்களால் அன்னை தெரசாவுக்கு பரிசாக வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு உலகின் முக்கிய பதவிகள் வகித்த விவிஐபி-களின் கார்களை சேகரித்து வைப்பதை யோகன் பூனாவல்லா கடந்த பல வருடங்களாக ஓர் விருப்பமான பழக்கமாக செய்து வருகிறார். இவ்வாறான கிளாசிக் கார்கள் பழமையானதாக இருப்பினும், இவற்றின் தற்போதைய மதிப்பு பல கோடிகள் ஆகும். அதாவது, இன்றைய கால ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றின் விலையை காட்டிலும் மகாராஜா ஒருவர் பயன்படுத்திய பழமையான ரோல்ஸ்-ராய்ஸ் காரின் மதிப்பு பல கோடிகள் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









