தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கரும்புள்ளிகள்! இந்த இடத்துல எல்லாம் பார்த்து கவனமா போங்க!
இந்தியாவிலேயே தேசிய நெடுஞ்சாலையில் அதிக எண்ணிக்கையில் விபத்து நடக்கும் பகுதிகள் தமிழகத்தில் தான் உள்ளது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதிக விபத்து நடக்கும் பகுதிகள் எல்லாம் கரும்புள்ளி பகுதிகள் என குறிக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கரும்புள்ளி பகுதிகள் என்றால் என்ன அவை ஏன் தமிழகத்தில் அதிகமாக உள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் பணி என்பது நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மிக வேகமாக சாலைகள் கட்டமைக்கப்படுவதால் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. சமீப ஆண்டுகளாக இந்தியாவில் சாலை கட்டமைப்பு என்பது மிக வேகமாக வளர்ந்து இந்தியாவில் உள்ள பல நகரங்களை இணைக்க பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலைகள் அமைக்கப்படும் அதே நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கான தேவை அதிகம் ஆகிறது. அதற்கு ஏற்றார் போல் வாகன பயன்பாடு அதிகமாகின்றது. அதற்கு ஏற்ப சாலை தேவைப்படுகிறது. இதற்கிடையில் விபத்துகளும் அதிகமாகி வருகின்றன.
இந்தியாவில் விபத்துக்கள் அதிகமாக அதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அந்த அனைத்து காரணங்களிலும் மிக முக்கியமான காரணமாக இருப்பது கரும்புள்ளி பகுதிகள் தான். தமிழகத்தில் தான் கரும்புள்ளி பகுதிகள் அதிகமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கரும்புள்ளி பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக இந்த கரும்புள்ளி பகுதிகள் உள்ளன.

கரும்புள்ளி பகுதி என்றால் என்ன? தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச ஐந்து விபத்துக்கள் நடந்திருக்க வேண்டும். மொத்தம் நடந்த விபத்துகளில் 10 பேராவது உயிரிழந்திருக்க வேண்டும். இப்படியான பகுதிகள் கரும்புள்ளி பகுதிகள் என குறிக்கப்படுகிறது. இந்த கரும்புள்ளி குறியீடு என்பது மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை ஆகிய இரு அமைச்சகங்கள் மூலம் குறிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் நடந்த கணக்கெடுப்பின் மூலம் மொத்தம் 5,800 கரும்புள்ளி பகுதிகள் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதில் 748 கரும்புள்ளி பகுதியில் தமிழகத்தில் இருப்பதாகவும், 701 கரும்புள்ளி பகுதிகள் மேற்கு வங்கத்தில் இருப்பதாகவும், 485 கரும்புள்ளி பகுதிகள் தெலுங்கானா பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் தான் அதிக அளவிலான விபத்துக்கள் நடக்கும் கரும்புள்ளி பகுதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கரும்புள்ளி பகுதிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என தெரிகிறது.
கரும்புள்ளி பகுதிகளை பொறுத்தவரை அந்த பகுதி கரும்புள்ளியாக இருக்க பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. திருப்பங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருக்கலாம், சாலை பராமரிப்பு சரியாக இல்லாத பகுதியாக இருக்கலாம், அதிகமாக இயற்கையால் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கலாம் இதன் காரணமாக அப்பகுதியில் அதிகமாக விபத்து நடக்கலாம். இந்த கணக்கை வைத்து தான் கரும்புள்ளிகள் என அந்த இடம் குறிப்பிடப்படுகிறது.
கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளை கரும்புள்ளி பட்டியலில் இருந்து நீக்க அப்பகுதிகளை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் தீவிரமாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் 2022-23ம் ஆண்டு வரை சுமார் 7.15 லட்சம் கோடி ரூபாய் கரும்புள்ளி பகுதிகளை பழுது பார்க்க செலவிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை இந்தியாவில் உள்ள கரும்புள்ளிப் பகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் நடக்கும் விபத்துக்கள் பதிவாகி கரும்புள்ளி பகுதிகள் அதிகம் இருக்கும் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கரும்புள்ளி பகுதிகள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து அங்கு விபத்து நடப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்தால் அப்பகுதி அடுத்த மூன்று ஆண்டில் கரும்புள்ளி பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








