தீபாவளிக்கு இந்த பிஎம்டபிள்யூ காரை தான் வாங்கணும்!! தொழிலதிபர்கள் வாங்கி குவிக்க போறாங்க - சென்னையில் உற்பத்தி

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் இந்தியாவில் அதன் 2-சீரிஸ் கிரான் கூபே காரில் புதியதாக எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் (M Performance Edition) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து, இந்திய சந்தையில் அதிகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையில் தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் கிரான் கூபே கார்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.

bmw 2-series m performance Edition

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரில் புதிய செயல்திறன்மிக்க வெர்சனாக எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஓர் லிமிடெட் எடிசன் கார் ஆகும். அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த லிமிடெட் எடிசன் காரை பிரத்யேகமாக பிஎம்டபிள்யூவின் இணையத்தள பக்கத்தின் வாயிலாக வாங்கலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் அதன் கூபே தோற்றத்தினாலும், லக்சரி தரத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது. இத்தகைய காரின் புதிய எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசனில் செயல்திறன் பிரிவிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், அட்வான்ஸான டிரைவிங் டைனாமிக்ஸை பெறலாம் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

bmw 2-series m performance Edition

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46 லட்சம் ஆகும். இது ஒரு பெட்ரோல் கார் ஆகும். 2.0 லிட்டர், 4-சிலிண்டர் ட்வின் பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் இந்த கார் கிடைக்கும். அதிகபட்சமாக 176 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் கிரான் கூபே கார் அளவில் சற்று சிறியதே. 5 இருக்கைகள் உடன் காம்பெட்டான கார் இது. இதனாலேயே, இந்த காரில் அதிவேகத்தில் பயணிப்பது எளியதாக உள்ளது. புதிய 2 சீரிஸ் கிரான் கூபே காரின் எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிடலாம். லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் பிரேக்கிங் ஃபங்க்‌ஷன் உடன் க்ரூஸ் கண்ட்ரோல் என சவுகரியமான டிரைவிங்கிற்கு தேவையான தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

bmw 2-series m performance Edition

அத்துடன், ஈக்கோ புரோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. மிகவும் மாடர்ன் தோற்றத்தில் வடிவமைக்கப்படும் இந்த காரின் காக்பிட்டில் 10.25-இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே மற்றும் கண்ட்ரோல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க பிஎம்டபிள்யூ பிராண்டுக்கே உண்டான ஹெட்-அப் திரையும் 2 சீரிஸ் கிரான் கூபேவில் வழங்கப்படுகிறது.

இவை மட்டுமின்றி, ஹைஃபை லவுட் ஸ்பீக்கர் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்டன்ஸ் ரியர் வியூ கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி (ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியது) உள்ளிட்டவற்றுடன், 6 ஏர்பேக்குகள், ஓட்டுனர் சாலையில் கவனத்தை தொடர்வதற்கான உதவி, பிரேக் அசிஸ்ட் உடன் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவையும் பயணிகள் மற்றும் வாகனத்தின் பாதுகாப்பிற்காக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 2 சீரிஸ் கிரான் கூபே எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் காரின் மூலமாக இந்த பண்டிகை காலத்தில் விற்பனையை மேலும் அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. ஏனெனில், பொதுவாகவே பண்டிகை காலத்தில்தான் புதிய வாகனங்களை வாங்க நம் இந்தியர்கள் விரும்புவர் என்பதை பிஎம்டபிள்யூ நன்கு அறிந்து வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 7, 2023, 18:32 [IST]
English summary
Bmw 2 series gran coupe m performance edition launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X