கடலுக்குள் நீந்திய பிஎம்டபிள்யூ கார்! இது ஒன்னும் கிராபிக்ஸ் கிடையாது உண்மை சம்பவம் தான்!

சமீபத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கன்வெர்டபிள் காரை கடல் அலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த விரிவான தகவலை காணலாம் வாருங்கள்.

இங்கிலாந்தை அடுத்த கார்னுவல் பகுதியில் டிரிவானுனான்ஸ் என்ற கடற்கரை இருக்கிறது. பொதுவாக இந்த கடற்கரையில் விடுமுறை தினங்களில் அப்பகுதியில் உள்ள மக்கள் பொழுதை கழிக்க குடும்பத்துடன் வருவது வழக்கம். இப்படி குடும்பத்துடன் வரும் மக்கள் தங்கள் கார்களை கடற்கரை அருகே நிறுத்திவிட்டு கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் ஜாலியாக விளையாடி கொண்டாடி மகிழ்வார்கள்.

bmw submerged in sea

இந்நிலையில் நேற்று இந்த கடற்கரைக்கு ஒரு குடும்பத்தினர் தங்களது பிஎம்டபிள்யூ எஸ் சிரிஸ் கன்வெர்டபிள் காரில் வந்துள்ளனர். அவர்கள் காரை கடற்கரை அருகே நிறுத்திவிட்டு தங்கள் குடும்பத்துடன் ஜாலியாக விளையாடி வந்துள்ளனர். அப்பொழுது கடலில் அலைகள் மிக வேகமாக அடித்து வந்தது.

அலைகள் வேகமாக அடித்ததால் இந்த அலை இவர்கள் வந்த பிஎம்டபிள்யூ எஸ் சீரிஸ் காரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. கடலுக்குள் சென்ற காரை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக அவர்கள் உதவிக்கு மீட்பு பணி குழுவை அழைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

bmw submerged in sea

முன்னதாக காரில் யாராவது இருக்கிறார்களா என்று உறுதி செய்தனர் காரில் வந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்பு தொடர்ந்து காரை மீட்கும் பணி நடந்தது. கடலுக்குள் சிக்கிய பிஎம்டபிள்யூ எஸ் சீரியஸ் கன்வெர்ட்டபிள் காரை மீட்க மீட்பு படையினர் மிகவும் போராடினர்.

ஒரு வழியாக பிஎம்டபிள்யூ கன்வெர்டபிள் காரை கடலுக்குள் இருந்து மீட்டனர். இந்த சம்பவத்தை மீட்பு படையினர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தனர் அதில் அவர்கள் கார்களை தண்ணீர் அருகே கொண்டு செல்வது ஆபத்தானது. குறிப்பாக கடலில் உள்ள உப்பு நீர் காருக்கு மிகவும் கெடுதலானது. இதனால் கடலுக்கு அருகே காரை கொண்டு செல்ல வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக இப்படி கடல் அருகே கார்களுடன் செல்லும் நபர்கள் ஆபத்தை உணராமல் காரை கடல் நீருக்கு அருகே கொண்டு செல்கின்றனர் அலைகள் வேகமாக அடித்தால் அந்த அலை காரையே கடலுக்குள் இழுத்துச் செல்லும் பலம் கொண்டதாக இருக்கும்.

நல்ல வேலையாக மேலே உள்ள சம்பவத்தில் காருக்குள் யாரும் இல்லை ஆனால் காருக்குள் அவர்கள் இருந்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் காரை கடல் நீருக்கு அருகே கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். நம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல வேண்டடிய நிகழ்வு துக்க நிகழ்வாக மாறிவிடக்கூடாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களை பயன்படுத்தும் பலர் அதை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை உணர்வதில்லை. கார்களை நீர் நிலைகளின் அருகே கொண்டு செல்வதே ஆபத்தானது. கடற்கரை அருகே கொண்டு செல்வது அதைவிட மிகவும் ஆபத்தானது. கடற்கரையில் மணல்கள் மிக லூசான மணலாக இருக்கும். காரை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவது என்பது மிகவும் கடினமானது. இதை உணர்ந்து கடற்கரை அருகே காரை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 17:00 [IST]
English summary
Bmw 4 series converterable car submerged in sea photo gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+