பிஎம்டபிள்யூ சென்னையிலேயே தயாரிக்கும் மேட் இன் தமிழ்நாடு கார் இது தான்! விலை கேட்டா அசந்து போயிடுவீங்க!

உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 6 சீரிஸ் ஜிடி எம் ஸ்போர்ட் சிக்னேச்சர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முற்றிலும் சென்னையில் தயாரிக்கப்படும் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் தயாரிப்புகளாக இருக்கிறது. இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் நீண்ட நாட்களாக அதன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட 6 சீரிஸ் ஜிடி எம் ஸ்போர்ட் சிக்னேச்சர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

bmw 6 series gran turismo m sport signature launched

இந்த காரின் டிசைனை பொருத்தவரை பிஎம்டபிள்யூ 630ஐ எம் ஸ்போர்ட் சிக்னேச்சர் காரின் பெரும்பாலான டிசைன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கண்களை கவரும் எல்இடி ஹெட்லைட் செட்டப், ஷார்ப்பான எட்ஜ்கள், கிட்னி வடிவ கிரில்கள், பாடி நிறத்திலேயே உள்ள டோர் ஹேண்டில்கள், மிகப்பெரிய பானட் அதன் நடுவே உள்ள பிஎம்டபிள்யூ லோகோ என பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இதன் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த காரில் ஸ்லோப்பான ரூப் லைன்கள், கூப்பே வடிவ ஸ்டைலிங், பின்பக்க எல்இடி லைட் டிசைன், மஸ்குலரான லயன், பின்பக்கம் உள்ள இரண்டு எக்ஸாட் பைப்புகளில் உள்ள ஸ்டைல்கள் என இந்த கார் பலரின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

bmw 6 series gran turismo m sport signature launched

இந்த காரின் உட்புறத்தை பொறுத்தவரை 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது . இது டிரைவருக்கான முழு தகவல்களை தருகிறது. முக்கியமாக வாகனத்தின் வேகம், ஆர்பிஎம், கியர் பொசிஷன், எரிபொருள் அளவு உள்ளிட்ட முக்கியமான தகவல் எல்லாம் இதில் கிடைக்கிறது.

இந்த காரில் பல மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக வாய்ஸ் கமாண்ட் டெக்னாலஜி இந்த காரில் உட்பகுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரில் பயணிக்கும் பயணிகள் கூட பிஎம்டபிள்யூ விர்சுவல் அசிஸ்டன்ட் மூலம் இந்த காரில் உள்ள சில அம்சங்களை வாய்ஸ் கமெண்ட் மூலமே பயன்படுத்த முடியும்.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 254 பிஎச்பி பவரை 400 என்எம் டார்க் திறனுடன் வெளிப்படுத்தும் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதன் 1150 முதல் 4400 வரைவிலான ஆர்பிஎம்-ல் இதன் அதிகபட்ச திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த காரின் வேகத்தை பொறுத்தவரை 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடியில் பிக்கப் செய்து விடும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் முழுமையாக சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. அதனால் இந்த காரை மேடு இன் தமிழ்நாடு கார் என்றே சொல்லலாம்.

இந்த காரின் விலையை பொருத்தவரை பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூபாய் 75.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த காரை இப்பொழுதே ப்ரீ புக் செய்து கொள்ள முடியும். நேரடியாக பிஎம்டபிள்யூ ஷோரூம் அல்லது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வை இணையதளத்திலும் புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த காரின் டெலிவரி குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பெரும்பாலான அதிக விலை கொண்ட கார்களை வெளிநாடுகளில் தயாரித்து அதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்துதான் விற்பனை செய்யும். இதனால் இந்த கார்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த காரை இந்நிறுவனம் முற்றிலுமாக சென்னையிலேயே தயாரித்து விற்பனை செய்கிறது. இது இந்தியா எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 11, 2023, 22:39 [IST]
English summary
Bmw 6 series gt m sport signature launched explore price and features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+