சாவியே வேண்டாம் செல்போன் பாக்கெட்ல இருந்தாலே கார் தானா ஸ்டார் ஆகிடும்! எப்படித் தெரியுமா?
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது கார்களுக்கு சாவியே இல்லாமல் ஸ்மார்ட் போனையே சாவியாகப் பயன்படுத்தும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
ஒரு காருக்கு சாவி என்றால் வழக்கமான பூட்டு சாவியைத் தான் நீண்ட ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை பயன்படுத்தி வந்தது. ஆனால் இன்று தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டது. வழக்கமான லாக்கிங் முறைகளுக்கு பதிலாக வித விதமான லாக்கிங் முறைகள் வந்துவிட்டது. ரிமோட் லாக்கிங் கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட அம்சங்கள் வந்துவிட்டது.

தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒருபடி மேலே போய் செல்போனையே சாவியாகப் பயன்படுத்தும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போனை பாக்கெட்டில் வைத்திருந்தாலோ போதும் அதைவைத்தே காரை அன்லாக் மற்றும் ஸ்டார்ட் செய்ய முடியும்.
இந்த தொழிற்நுட்பம் குறித்து பிஎம்டபிள்யூ நிறுவனம் கூறும் போது இது வழக்கமான சாவியை மாற்றி அல்ட்ரா வைடுபேண்ட் தொழிற்நுட்பத்தை விரிவுபடுத்தும் ஒரு முயற்சி எனத் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்நுட்பம் டிஜிட்டல் ரேடியோ தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகே உள்ள உள்ள ரேஞ்ச் மற்றும் அதிக பேண்ட்வித் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் காரின் இருப்பிடம் உள்ளிட்டவைகள் மூலம் அதிக பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ரிமோட்களில் உள்ள ரேடியோ சிக்னல் திருட்டு மற்றும் ஜாம் போன்ற பிரச்சனை இதில் இருக்காது. செல்போன் என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதற்காகப் பிரத்தியேகமாக ஆப்பை செல்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ஆப்பை உருவாக்க பிஎம்டபிள்யூ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இதைத் தயாரித்துள்ளது.
இந்த ஆப் ஐபோன், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த தொழிற்நுட்பம் கேலக்ஸி எஸ்23+/ அல்ட்ரா மற்றும் கூகுள் பிக்ஸல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் உள்ள பிரத்தியேக ஹார்டுவேர் மூலம் இயங்கப்படுகிறது.
நவம்பர் 2022ம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களில் இந்த ஆப்பை இப்பொழுதே பயன்படுத்த முடியும். இதற்கு முந்தைய கார்களில் பயன்படுத்த வசதியாக ஓடிஏ அப்டேட்டை வழங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த அப்டேட் செய்யப்பட்டவுடன் 2022 நவம்பருக்கு முந்தைய தயாரிப்புகளிலும் பயன்படுத்த முடியும். ஆனால் எந்த ஆண்டிற்குப் பிறகு தயாரித்த கார்களில் பயன்படுத்த முடியும் என்ற தகவல் ஓடிஏ அப்டேட் வந்த பிறகே தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் தொழிற்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறது என்பதற்கு இது முக்கியமான சான்றாக இருக்கிறது. பிஎம்டபிள்யூவின் இந்த அப்டேட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை விரைவில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








