பிஎம்டபிள்யூ-க்கு என்ன அர்த்தம் தெரியுமா? 99% பேருக்கு இதை உச்சரிக்கக் கூட முடியாது!
பிஎம்டபிள்யூ, இந்த பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பிஎம்டபிள்யூ எனப் பெயர் வர என்ன காரணம் தெரியுமா? முழு விபரங்களைக் காணலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பெயர்க் காரணத்தைத் தெரிந்துகொள்ளும் முன்பு அந்நிறுவனத்தின் ஒரு தனித்துவமான சிறப்பு குறித்துக் காணலாம். பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு காரை தயாரித்தால், அந்த காருக்கு ஒரு பெயரை வைத்து அந்த பெயரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவார்கள். உதாரணமான டாடா நிறுவனம் தற்போது நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய கார்களை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது நிறுவனத்தின் கார்களின் பெயர்களை மிகச் சுருக்கமாக வைப்பார்கள். மேலும் அதை பிரபலப்படுத்தவும் முயற்சி செய்யமாட்டார்கள். பிஎம்டபிள்யூவில் 3 சிரீஸ், 5 சிரீஸ், எக்ஸ்1, எக்ஸ்5, 7 சிரீஸ் போன்ற பெயரில் தான் கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் விற்பனைக்கு கார் பெயரை விட பிஎம்டபிள்யூ என்ற நிறுவனத்தின் பெயரே போதுமானது.
இந்த அளவிற்குப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 1916ம் ஆண்டு ஜெர்மனியில் துவங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் முதலில் விமான இன்ஜின் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகத் தான் உருவாக்கப்பட்டது. 1917-1918 முதல் உலகப் போரின் போதும், 1933-1945 இரண்டாம் உலகப்போரின் போதும் விமான இன்ஜின்களை தயாரித்தனர். இது மட்டுமல்ல கப்பல்களுக்கான இன்ஜினையும் இந்நிறுவனம் தயாரித்தது.

தற்போது கார் தயாரிப்பை மட்டுமே செய்து வருகின்றனர். தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் கிளை நிறுவனமாக பிஎம்டபிள்யூ, மினி மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஆகிய பிராண்ட்களில் கார்களை தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனம் ஜெர்மனி மட்டுமல்ல பிரேசில், சீனா, இந்தியா, மெக்ஸிக்கோ, நெதர்லாந்து , தெற்கு ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பிஎம்டபிள்யூ என்ற பெயருக்கான அர்த்தம் Bayerische Motoren Werke GmbH இது ஒரு ஜெர்மன் பெயர். இந்த பெயருக்கான அர்த்தம் Bavarian Engine Works Company என்பது தான். இந்நிறுவனம் ஜெர்மனியில் Bavaria என்ற பகுதியில் தான் முதன் முதலில் துவங்கப்பட்டது. அதனால் அந்த பெயரை முதல் சொல்லாக Bayerische என்றும், இது ஒரு இன்ஜின் தயாரிக்கும் கம்பெனி என்பதால் Motoren என்ற சொல்லை இரண்டாவதும் வைத்து Works என்ற சொல்லுடன் சேர்த்து தன் நிறுவனத்தின் பெயரை வைத்தது.

இந்த Bayerische Motoren Werke GmbH என்பதன் சுருக்கமே BMW, இந்தியர்களில் 99 சதவீதம் பேருக்கு இந்த Bayerische Motoren Werke GmbH என்ற பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதே தெரியாது. ஜெர்மன் வார்த்தைகளுக்கான உச்சரிப்பு வித்தியாசமாக இருப்பதால் பலர் இதை உச்சரிக்க முடியாமல் திணறிய நிலையில் இதை BMW என எளிதாக உச்சரித்து விடுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல தங்கள் நிறுவனத்தின் பெயரை அவர்களது தாய் மொழியில் வைத்து வருகின்றனர். இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வானகங்களுக்கு இந்தியப் பெயரை வைத்தால் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் ஏராளமான மொழிகள் இருக்கிறது. இதன் வார்த்தைகளை ஆய்வு செய்து அதன் பெயரை வைக்க மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் முயற்சி செய்யுமா?


Click it and Unblock the Notifications









