பணக்காரங்களே இந்த காரை எல்லாம் வாங்க தயங்குவாங்க! பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்தியுள்ள காஸ்ட்லியான கார்கள் இதான்!
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐ7 எம்70 எக்ஸ் டிரைவ் எலக்ட்ரிக் காரையும், 740டி எம ஸ்போர்ட் காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த முழுமையான விபரங்களையும் இதன் விலை குறித்த விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்று இந்தியாவில் தனது பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் மற்றும் பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் ஆகிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பெட்ரோல் டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வேரியன்ட்களில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 740டிஎம் ஸ்போர்ட் கார் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னையில் உள்ள தனது ஆலையிலேயே முழுமையாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதே நேரம் பிஎம்டபிள்யூ ஐ7 எம் 70 எக்ஸ் டிரைவ் காரை இந்நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது.
இந்தக் கார்களின் விலையை பொருத்தவரை பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட்ஸ் கார் ரூபாய் 1.81 கோடி என்ற விலையிலும், பிஎம்டபிள்யூ ஐ 7 எம்70 எக்ஸ்டிரைவ் எலெக்ட்ரிக் கார் ரூபாய் 2.5 கோடி என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு கார்களையும் தற்போது இந்தியா முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ டீலர் ஷிப்களில் இன்று முதல் புக்கிங் செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் காரை பொறுத்தவரை ஆக்சைடு கிரே, மினரல் ஒயிட், பிளாக் சஃபையர் மற்றும் பிஎம்டபிள்யூ வின் ஆஸ்தான கலரான டான்சனைட் ப்ளூ ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் காரை பொருத்தவரை இரண்டு டோன்களாக பெயிண்டிங் வழங்கப்பட்டுள்ளது.
பிளாக் சஃபையர் கலர் ரூப் பகுதியிலும் அல்லது ஆக்சைடு கிரே கலர் ரூப் பகுதியில் இருக்கும் படியும் காரின் நிறம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யும்படியும் இந்த காரை வடிவமைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர் ஆன்லைன் மூலமே அவர் காருக்கான பெயிண்ட் வேலைகளை தேர்வு செய்து அதை காரில் அடித்தால் எப்படி இருக்கும் என்ற விஷூவலையும் பார்த்துக் கொள்ள முடியும். இந்த இரண்டு கார்களிலும் உட்புறத்தில் மெரினோ லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அமர்ஒன், ட்ராட்டூஃபோ, மோட்சா, கருப்பு மற்றும் ஸ்மோக் ஒயிட் ஆகிய நிறங்களில் இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் காரில் மட்டும் உட்புறத்தில் மெரினோ லெதரில் காஷ்மேர் உல் காம்பினேஷன் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் காரை பொறுத்தவரை எலெக்ட்ரிக் கார் ஆக இருக்கிறது. இதன் முன் பக்கம் பிஎம்டபிள்யூவின் கிட்னி கிரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் எம் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறங்களில் கருப்பு ஹை கிளாஸ் பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த முக்கிய ஹைலைட்டாக இந்த காரின் ஸ்கிட் பகுதி எம் வடிவில் வழங்கப்பட்டுள்ளது.
இது போக முன்பக்க ஃபெண்டர்கள் ஷேடோலைன் டிரிம் வெளிப்பக்க கண்ணாடிகள் ஆகியவற்றில் எம் லோகோ இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் பின்பக்க ஸ்பாய்லர்கள் கருப்பு நிற ஸ்ட்ரிப் கொண்டு பின்பக்க லைட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 21இன்ச் ஏரோடைனமிக் டிசைன் கொண்ட எம் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்புறத்தில் 31.3இன்ச் பிஎம்டபிள்யூ தியேட்டர்ஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது பின்பகுதியில் உள்ள டச் ஸ்கிரீனாக வழங்கப்பட்டுள்ளது. இது 8k ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீனாக இருக்கிறது. இது சீலிங்கிலிருந்து கீழே இறங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடியோ சிஸ்டத்தை பொறுத்தவரை பவ்வர்ஸ் அண்ட் வில்கின்ஸ் டைமண்ட் சரவுண்ட் சிஸ்டம் 36ஸ்பீக்கர்கள் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ஸ்பீக்கர்கள் ஹெட்லைனருடன் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆம்ப்ளிஃபையர் 1965வாட்ஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
காரின் உட்புறத்தில் கார்பன் பைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தையல்கள் பியானோ ஃபினிஷில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் உட்புறத்திலும் எம் லோகோ ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக டோர் செல்கள், ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட பல பகுதிகளில் எம் வடிவத்தை நீங்கள் காண முடியும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரின் அம்சத்தை பற்றி குறிப்பிடும்போது இது எலெக்ட்ரிக் ஆல் வீல் டிரைவ் காராகவும் இதன் ஸ்டீரிங், டம்பர் மற்றும் டிரைவிங் ஸ்டெபிலிட்டி சிஸ்டம் ஆகியவற்றில் எம் ஸ்பெசிபிக் அப்ளிகேஷன் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆக வழங்கப்பட்டுள்ளது. இது 286 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதலாக 18 பிஎச்பி பவரும் 200 என்எம் டார்க் திறனும் காருக்கு கிடைக்கிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்து விடும் என்றும் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 காரை பொருத்தவரை 101.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் எலக்ட்ரி சிவி மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது இது 660 எச்பி பவரையும் 1100 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடியில் பிக்கப் செய்து விடும்.
அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 560 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு சார்ஜ் ஏற்ற பிஎம்டபிள்யூ வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 22 கிலோ வாட் சார்ஜராக இருக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக், அட்டெண்டிவினஸ் அசிஸ்டன்ட், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சைடு இம்பேக்ட் ப்ரொடக்ஷன், கிராஷ் சென்சார், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆகியன இந்த காரின் பாதுகாப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக பிஎம்டபிள்யூ டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் உடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் போன் மூலம் பார்க்கிங் அஸிஸ்ட் வசதி, ரிவர்சிங் அசிஸ்டன்ட் வசதி ஆகியன உள்ளது. பிஎம்டபிள்யூ ஐ 7 எலக்ட்ரிக் காரில் ஆக்டிவ் ஸ்டேரிங் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் ட்ரைவ் ப்ரோ சஸ்பென்ஷன் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஆக்டிங் ரோல் ஸ்டெபிலைசேஷன், மற்றும் ஆக்டிவ் ரோல் கம்ஃபோர்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் இரண்டு வருட வாரண்டியுடன் வருகிறது. கிலோமீட்டர் எவ்வளவு வேண்டுமானாலும் ஓடினாலும் சரி இரண்டு ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படும். இந்த காரில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி பேக் 8 வருட வாரண்டி அல்லது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான வாரண்டியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications









