பிரதமர் மோடி வாங்கப்போற அடுத்த கார் இதுவா கூட இருக்கலாம்! துப்பாக்கி வச்சு சுட்டாலும் ஒரு கீறல் கூட விழாது!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது i7 புரோடெக்க்ஷன் காரை தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. புதிய தலைமுறை 7 சீரியஸ் வகையில் இந்த ஐ 7 செடான் கார் உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது 7 சீரியஸ் தலைமுறையில் தனது அறிமுகங்களை செய்து வருகிறது. அதன்படி தற்போது புதிதாக i7 என்ற செடான் காரை தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் உலகிலேயே முதல் புரோடெக்ஷன் செடான் எலெக்ட்ரிக் காராக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bmw i7 protection unveiled

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜெர்மனியில் உள்ள தனது ஆலையில் இந்த காரை தயாரிக்கிறது. இந்த காரை துப்பாக்கி குண்டுகள் வந்து தாக்கினாலும் உள்ளே இருக்கும் பயணிக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியான பாதுகாப்பான கார்கள் அவ்வப்போது தான் தயாரிக்கப்படும் தற்போது 7 சிரீஸ் கார்களில் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த பிஎம்டபிள்யூ i7 செடான் கார் விஆர் 9 டிரீட்மெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த விஆர்9 டிரீட்மெண்ட் என்பது மக்கள் பயணிக்கும் வாகனத்திற்கான உயிர் பாதுகாப்பு சான்று ஆகும். குண்டு துளைக்காமல் இருப்பதற்காக இந்த சான்றை வாகன தயாரிப்பாளர்கள் பெறுவார்கள். இது தான் உயர் ரக பாதுகாப்பு அம்சத்திற்கான சான்று.

bmw i7 protection unveiled

இதற்கு சான்றாக பிஎம்டபிள்யூ நிறுவனம் காரில் குண்டு தாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி காரில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான குண்டுகள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் காருக்குள்ளே ஒரு சின்ன சேதாரம் கூட கிடையாது. காரின் கண்ணாடி நொறுங்கிப் போய் இருந்தாலும் அதனை அடிப்படை கட்டமைப்பு குறையாமல் இருந்தது.

அதேநேரம் காருக்கு உள்ளேயும் வெளியேயும் கண்ணாடி உடைந்த துண்டுகள் எதுவும் கீழே விழவில்லை. இது காரின் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த காரை பெரும்பாலும் நாட்டின் உயர் பதவியில் உள்ள ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

bmw i7 protection unveiled

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த ஐ 7 புரொடக்ஷன் காரை பொருத்தவரை கவசம் போன்ற ஸ்டில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 76.2X54ஆர் ரக குண்டுகள் வரை பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் காரில் உட்புறத்தில் அமர்ந்து செல்லும் பயணிகளை பாதுகாக்க வெளிப்புறத்தில் ஹார்ட் ஃபார்ம் ஸ்டீல் அலாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரின் மேற்கூரையிலும் அடிப்பகுதியிலும் குண்டு துளைக்காத மெட்டீரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் மேல் வழியாக அட்டாக் செய்தாலும் அல்லது காருக்கு கீழே குண்டு வைத்து வெடிக்க வைத்தாலும் காருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த i7 செடான் கார் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதே கம்பேஷன் இன்ஜின் 7 சீரிஸ் காரிலும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் பெட்ரோல் டேங்க்கை துப்பாக்கி குண்டு தாக்குதலின் போது பாதுகாக்க தனியாக ஒரு பாதுகாப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த i7 புரொடெக்ஷன் காரில் உள்ள டயர்கள் எல்லாம் சிறப்பான குண்டு தொலைக்காத டயர்களாக உருவாக்கப்பட்டுள்ளது. 20 இன்ச் அலாய் வீலில் மெக்ளின் பேக்ஸ் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டயர் முற்றிலுமாக அதன் பிரஷரை இழந்து விட்டாலும் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்தக் காரின் டிசைனை பொருத்தவரை வெளிப்புறம் முன்பக்கம் வழக்கம் போல கிட்னி கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எல்இடி ஹெட்லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க காருக்கு அட்டகாசமான லுக்கை தருகிறது. இந்த காரின் கதவுகள் எல்லாம் ஆட்டோமெட்டிக்காக மூடி திறக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியாக ஹேண்டில் பாரை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை மிக முக்கியமான அம்சம் இதில் உள்ள தியேட்டர் மோடு தான். இந்த காருக்குள்ளே 31 இன்ச் கொண்ட 8k ஓஎல்இடி என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது. இது 32: 9 என்ற ரேசியோவில் இயங்குகிறது. இது 5ஜி கனெக்டிவிட்டியுடன் அமேசான் ஃபையர் ஸ்டிக் ஆப்ஷனை கொண்டுள்ளது.

அடுத்ததாக உட்புறத்தில் ஸ்கை லாஞ்ச் பானரோமிக் சன் ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எல்இடி லைட் திரெட்கள் உள்ளன. இந்தக் காரின் பின்பக்க கதவுகளில் 5.5 இன்ச் டச் ஸ்கிரீன் கண்ட்ரோல் டிஸ்ப்ளே உள்ளது. இதன் மூலம் காரின் கதவுகளை திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து கொள்ளலாம்.

இந்தக் காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தவரை இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 536 எச்பி பவரையும் 549 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் மூலம் இந்த கார் 0- 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடியில் பிக்கப் செய்து விடும்.

இந்த கார் அதிகபட்சமாக 239 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வரையில் லிமிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் செல்லும் திறன் இந்த காருக்கு இருந்தாலும் இதன் சாப்ட்வேர் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி அதற்கு மேல் செல்ல விடாது. இந்த கார் முழு சார்ஜில் 482 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு டிசி பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சப்போர்ட் செய்யும் வகையில் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 195 கிலோ வாட் என்ற சார்ஜிங் ரேட்டில் சார்ஜ் ஏறும். இந்த கார் பத்து நிமிடம் சார்ஜ் போட்டாலே போதும் 130 கிலோ மீட்டர் ரேஞ்சு தரும் வகையில் சார்ஜ் ஏறிவிடும். இந்த கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் இக்யூஎஸ் என்ற காருக்கு போட்டியாக களத்தில் இறங்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை பெரும்பாலும் ஒரு நாட்டின் உயர் பதவியில் இருக்கும் நபர்கள் தான் வாங்குவார்கள். யார் யாருக்கெல்லாம் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த கார் பயன்படுத்தப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக இந்த கார் வாங்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 10:20 [IST]
English summary
Bmw i7 protection the first all electric armored sedan with bulletproof capabilities
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X