டீசல் என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 லக்சரி எஸ்யூவி கார் - ரூ.67.50 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எக்ஸ்3 (X3) லக்சரி எஸ்யூவி காரின் புதிய டீசல் வேரியண்ட்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார்களை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சாலை போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதில் நமது மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதன்படி கடந்த 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட்ட பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் பெரும்பான்மையான டீசல் கார்களை சந்தையை விட்டு ஓரங்கட்டிய நிலையில், இந்த விதிமுறைகளின் 2ஆம் கட்டம் வருகிற 2023 ஏப்ரல் 1இல் 3 வருடங்களுக்கு பிறகு அமலுக்கு வருகிறது.

டீசல் என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 லக்சரி எஸ்யூவி கார்!!

ரியர்-டிரைவ்-எமிஷன் (RDE) என்பதுதான் பிஎஸ்6 2ஆம் கட்டத்தின் முக்கிய கட்டுப்பாடாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இ20 என்ற எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியதாக என்ஜின் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஏப்ரல் 1இல் இருந்து அமலுக்கு வருகிறது. மேலும், முதல் கட்டுப்பாடுகள் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தியதை போன்று, பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட விதிமுறைகளும் சில டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் உலகளவில் பிரபலமான லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் எக்ஸ்3 எஸ்யூவி காரில் புதிய டீசல் வேரியண்ட்களை எக்ஸ்.லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என்ற பெயர்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் எக்ஸ்.லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.50 லட்சமாகவும், எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.69.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ டீசல் கார்கள் பிஎம்டபிள்யூவின் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். எக்ஸ்3-இன் இந்த புதிய டீசல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,200 ஆர்பிஎம்-இல் 188 பிஎச்பி & 1,750 - 2,500 ஆர்பிஎம்-இல் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்.டிரைவ் அனைத்து-சக்கர-டிரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இதனால் இந்த காரில் என்ஜினின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எக்ஸ்3 டீசல் காரின் டாப்-ஸ்பீடு 213kmph ஆகும்.

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான எக்ஸ்3 வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை. காரின் முன்பக்கத்தில் செங்குத்தான ஏர் இண்டேக் துளைகளை கொண்ட கிட்னி வடிவ க்ரில், அடாப்டிவ் ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்படுகின்றன. உட்புறத்தில் மல்டி-ஃபங்சன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இந்தியாவில் பிரபலமான பிஎம்டபிள்யூ கார்களுள் ஒன்று எக்ஸ்3 ஆகும். அத்தகைய சொகுசு எஸ்யூவி காரில் புதிய டீசல் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி இருப்பது சந்தையில் எக்ஸ்3 கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. ஏனெனில், பெரும்பாலானோருக்கு பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்களை பயன்படுத்துவதற்கே பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, பிஎஸ்6-வினால் சந்தையில் டீசல் கார்களுக்கு பெரிய தேவை உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 29, 2023, 16:55 [IST]
English summary
Bmw introduces new diesel variants of x3 luxury suv in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+