நூறு யூனிட் எந்த மூலைக்கு? ஜலவாயுவில் ஓடும் காரை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய பிரபல கார் உற்பத்தி நிறுவனம்!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), ஐஎக்ஸ்5 (iX5) எனும் கார் மாடலை தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் ஜலவாயுவில் இயங்கும் சொகுசு வாகனம் ஆகும். அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கக் கூடிய சொகுசு கார் இது ஆகும்.
இந்த வாகனத்தின் உற்பத்தி பணியிலேயே பிஎம்டபிள்யூ தற்போது களமிறங்கி இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 100 யூனிட்டுகளை முதல் கட்டமாக தயாரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டு உள்ளது. இதற்கு கிடைக்க இருக்கும் வரவேற்பை அடுத்தே அடுத்தடுத்து இந்த காரின் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் எக்ஸ்5 (X5)-ம் ஒன்று. இந்த மாடலை தழுவியே ஐஎக்ஸ்5 ஹைட்ரஜன் ஃப்யூவல் பவர்டு வாகனத்தை நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த வெர்ஷனை முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவி (Frankfurt Motor Show)-லேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அப்போதில் இருந்தே இந்த காரை பிஎம்டபிள்யூ சொகுசு கார் பிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையிலேயே காரின் உற்பத்தி பணிகளை பிஎம்டபிள்யூ கையில் எடுத்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான முனிச்-இல் உள்ள இன்னோவேசன் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வைத்தே ஐஎக்ஸ் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் கார் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை இந்த காரில் நிரப்பினால் முழுமையாக 504 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஹைட்ரஜனை நிரப்பிக் கொள்ள கார்பன் ஃபைபராலான பிளாஸ்டிக் டேங்க் (carbon-fibre reinforced plastic) பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதில், அதிகபட்சமாக ஆறு கிலோகிராம் வரை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பிக் கொள்ள முடியும்.
இந்த அளவை ஒரு முறை நிரப்பினாலேயே போதும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் சுமார் 504 கிமீ தூரம் வரை பயணிக்கும். மேலும், இதனை முழுமையாக நிரப்ப மூன்று முதல் நான்கு நிமிடங்களே ஆகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக சிஎன்ஜி, எல்பிஜி வாகனங்களைப் போலவே அதிக வேகத்தில் இதில் ஃப்யூவலை நிரப்பிக் கொள்ள முடியும்.

இது ஓர் விதமான எரிபொருளாக இருந்தாலும் இதனால் வெளிவருவது வெறும் நீராவி மட்டுமே ஆகும். ஆகையால் மின்சார வாகனத்தைப் போலவே சுற்றுச் சூழலுக்கு உகந்த நண்பனாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளையில், எலெக்ட்ரிக் வாகனங்களைக் காட்டிலும் இவை மிக மிக அதிக திறன் கொண்டதாக இருக்கும்.
குறிப்பாக, எலெக்ட்ரிக் காரில் 100 பயணிக்க வேண்டும் எனில் அதனை மணிக்கணக்கில் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் காரில் 500 கிமீ பயணிப்பதற்கே வெறும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களை செலவு செய்தால் போதுமானது. பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார் வெறும் 6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

இப்போது உற்பத்தி செய்யப்பட இருக்கும் 100 யூனிட்டுகள் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார்கள் 2024 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்திவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது மிகக் குறைவான எண்ணிக்கையில் இந்த காரை வாங்க தொழிலதிபர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரிக்கும் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் பவர்டு கார் மாடல் ஐஎக்ஸ்5 என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









