யோவ் பிஎம்டபிள்யூ நீ பலே ஆளுதான்யா.. ஒரே நேரத்துல ரெண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்காங்க

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் இரண்டு புதுமுக சொகுசு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த காரின் சிறப்பு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்பிள்யூ, அதன் இரு புதிய லக்சூரி கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் (இது ஓர் சொகுசு செடான் ரக மின்சார கார் மாடல் ஆகும்) மற்றும் டீசல் எஞ்ஜின் கொண்ட 7 சீரிஸ் 740டி எம் ஸ்போர்ட் ஆகிய இரு கார் மாடல்களையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Bmw i7

இந்த இரண்டும் உலக அளவில் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்கள் ஆகும். ஆடம்பர வசதிகளுக்கு மட்டுமில்லைங்க அதிக பவரை எஞ்ஜின் திறனுக்கும் இந்த கார்கள் பெயர்போனதாக இருக்கின்றன. இந்த இரண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓர் கார் மாடலை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

7 சீரிஸ் 740டி எம் ஸ்போர்ட் சொகுசு கார் மாடலின் உற்பத்தியையே அது உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது. நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையிலேயே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் தேர்வானது வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Bmw i7 m70 xdrive side design

சிபியூ (completely built-up) யூனிட்டாக இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, இந்த மாடலின் விலை மட்டும் சற்று அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து இறக்கு செய்யப்பட்டு விற்கப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதி வரி வசூல் செய்யப்படுவதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸை ஓர் சாதாரணமான தேர்வாக எண்ணிக் கொள்ள வேண்டாம். இந்தியாவில் இந்த கார் மாடல் பன்முக அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, டீசல், பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய அவதாரங்களிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்தியாவில் பிஎம்டபிள்யூவிற்கு வலுசேர்க்கும் கார் மாடலாக இந்த கார் மாடல் இருக்கின்றது.

Bmw i7 m70 xdrive front design

பிஎம்டபிள்யூ நிறுவனம் 740டி எம் ஸ்போர்ட் கார் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டீசல் எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் 286 குதிரை திறனையும், 650 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, வெறும் 6.0 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இதேபோல், அதீத திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடலாகவே மற்றுமொரு அறிமுகமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் இருக்கின்றது. இந்த காரில் 660 எச்பி மற்றும் 1100 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Bmw 740d m sport front design

இந்த மோட்டாரால் வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். ஆகையால், பிஎம்டபிள்யூவின் அதிக திறனை வெளிப்படுத்தும் கார் மாடல்களில் ஒன்றாக புதிய ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் மாடல் சேர்ந்துள்ளது. இதுதவிர, ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக்கையும் இந்த காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது.

இதைக் கொண்டு 560 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் வாயிலாக மிக சிறந்த டிரைவிங் அனுபவம் இந்த காரில் நிச்சயம் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதை கூடுதலாக்கும் விதமாக பிஎம்டபிள்யூ ஐடிரைவ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆபரேட்டிங் சிஸ்டம் 8.5 அங்குல அளவில் இரு கார் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Bmw 740d m sport side design

740டி எம் ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பிஎம்டபிள்யூ கன்னெக்டட் டிரைவ் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, பிஎம்டபிள்யூ ஐடி, மை பிஎம்டபிள்யூ செயலி, டிஜிட்டல் கீ பிளஸ், அவசர கால அழைப்பு, ரியல் டைம் டிராஃபிக் பற்றிய தகவல் என பல்வேறு முக்கிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர இந்த காரில் மிக சிறந்த ரைடிங் அனுபவம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் அதன் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். டிரைவர் அசிஸ்டன்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களையும் வழங்கி இருக்கின்றனர். இத்துடன், பிஎம்டபிள்யூவின் ஆக்டீவ் ஸ்டியரிங் மற்றும் எக்சிகியூட்டீவ் டிரைவ் ப்ரோ சஸ்பென்ஷன் பேக்கேஜ் அதி நவீன மற்றும் சொகுசான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் கொடுத்திருக்கின்றனர்.

இதேபோல், பிஎம்டபிள்யூ ஐ7 எம்70 எக்ஸ்டிரைவ் காரிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஈகோ ப்ரோ மோட், பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன் மற்றும் பல அம்சங்களை இந்த காரில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே நிறுவனம் அதன் தயாரிப்புகளையும், அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் வாகன மாடல்களின் லிஸ்டையும் அவ்வப்போது ரெஃப்ரெஷ் செய்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது இரண்டு புதிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2023, 17:56 [IST]
English summary
Bmw launched i7 m70 xdrive and 740d m sport now in india here is price and more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X