இந்த காருக்கு இவ்வளவு விலையா? அப்படி என்னதான் இருக்குது? ஏசி கூட போட முடியாது போலயே!
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இசட்4 ரோடுஸ்டர் காரை இந்தியாவில் ரூ89.30 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் ஜூன் மாதம் முதல் பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்களில் கடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இசட் 4 என்ற ரோடுஸ்டர் காரை சர்வதேச மார்கெட்டில் விற்பனையில் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த காரை இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது எம் 40ஐ பெர்ஃபாமென்ஸில் உருவாக்கியுள்ளது.

இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 19 இன்ச் எம் லைட் அலாய் வீல்கள், எம் ஸ்போர்ட் பிரேக்குகள், பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் பகுதியில் க்ரே ஃபினிஷ், எக்ஸ்டீரியர் மிரர் கேப்ஸ், டிரேப்சோடியல் எக்ஸாஸ்ட் டெயில் பைப்புகள், ஆகிய அம்சங்கள் காரின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை லெதர் மற்றும் அல்கான்ட்ரா ஃபினிஷ் உடன் கான்ட்ராஸ்ட் தையல் மற்றும் நீல நிற பைப்பிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அலுமினியம் மெஷ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் எம் ஸ்போர்ட் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் கூடுதலான அட்ஜெஸ்மென்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. எம் லெதர் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஷனலாக இந்த காரை வாங்குபவர் நினைத்தால் கண்ணாடியைக் கருப்பு நிறத்தில் வாங்கிக்கொள்ளலாம். இது போக அடாப்டிவ் ஹெட்லைட், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பேக்கேஜ், எம் சீட் பெல்ட், ஹார்மன் கார்டன் சரவுண்ட் சிஸ்டம், கம்ஃபோர்ட் ஆக்ஸஸ், டிரைவிங் அசிஸ்டென்ட்,ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பார்க்கிங் அசிஸ்டன்ட், மற்றும் இன்டிவிஜூவல் பெயிண்ட் ஃப்ரோஸன் க்ரே ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இசட் 4 காரை பொருத்தவரை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.5 நொடியில் பிக்கப் செய்துவிடும்.

இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ89.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாக்கு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த கார் இந்தியாவிற்குள் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இப்படியாக இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோடுஸ்டர் கார்களுக்கு என்றே பிரத்தியேக ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் ரோடுஸ்டர் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் அதனால் தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்த கார் ரோடுஸ்டர் கார் ரசிகர்களுக்கு வரப்பிரசாதம் தான்.


Click it and Unblock the Notifications









