பிஎம்டபிள்யூ ஆலையில் மெயின்டனன்ஸ் வேலைக்கு சேர்க்கப்பட்ட புதிய ஆள்.. காசை மிச்சப்படுத்ததான் இதெல்லாமா!
உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), உலக நாடுகள் பலவற்றில் உற்பத்தி ஆலையை அமைத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே கார் உற்பத்தியின் குறிப்பிட்ட வேலைகளில் நவீன எந்திரங்களைப் பயன்படுத்தி காசை மிச்சப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் இப்போது மெயின்டெனன்ஸ் (Maintenance) பணியிலும் காசை மிச்சப்படுத்தும் செயலில் பிஎம்டபிள்யூ களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணிகளுக்கு அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)க் கொண்ட தொழில்நுட்பத்தையே பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் மனித தலையீடு குறைக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதாவது, மனித பணியாளர்கள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அந்த இடத்தில் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட கருவிகள் அதே பணியை மேற்கொள்ளும் விதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலியே இந்த கருவியை பிஎம்டபிள்யூ நிறுவனம் பயன்படுத்த தொடங்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நிறுவனம் ஸ்மார்ட் மெயின்டெனன்ஸ் (Smart Maintenance) என குறிப்பிடுகின்றது. ஏஐ தொழில்நுட்பம் இந்த உலகத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்யும், அதேவேளையில், அது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் உலக விஞ்ஞாசனிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக, தொழில்துறையில் மனிதர்களுக்கு போட்டியாக இதன் வருகை அமையும் என பலர் அச்சம் தெரிவித்தனர். இந்த அச்சத்தை நிறைவேற்றும் வகையிலேயே சில முன்னணி நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பம் செயலாற்றி வருகின்றது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை முன்னணி நிறுவனங்கள் தங்களின் முக்கிய பணிகளில் ஈடுபடுத்தத் தொடங்கி இருக்கின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த ஏஐ கருவியை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது முதல் வாகன உற்பத்தி எந்த தடையும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. துள்ளியமாக கண்கானிப்பு செய்து வழிநடத்த பெரும் உதவியாக இந்த கருவி இருக்கின்றது. மிக முக்கியமான தவறுகளை அது முன் கூட்டியே கண்டறிந்து உடனடியாக சரி செய்துவிடுவதால் அது நடைபெறாமல் தவிர்க்கப்படுகின்றது.
இந்த அம்சத்தை தனது ரீஜென்ஸ்பர்க் ஆலையிலேயே பிஎம்டபிள்யூ பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது. விரைவில் அடுத்தடுத்த ஆலைகளிலும் இந்த ஏஐ டெக்னாலஜியை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பயன்பாட்டிற்கு வந்ததனால் ஆண்டுக்கு சரசாரியாக 500 நிமிடம் வரை இடையூறுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
குறிப்பாக, மனிதர்களை திறம்பட அது செயல்படுவதாகவும் கூறப்படுகின்றது. வாகனங்கள் அசெம்பிள் செய்வதற்காக பொதுவாக மொபைல் லோடு கேரியர்கள் அல்லது ஸ்கிட் சிஸ்டம்களில் பொருத்தப்படும். இது முழுவதுமாக தயாரிப்பு சங்கிலியுடன் பயணிக்கும். இந்த முக்கிய பணியில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் எனில் மிகப் பெரிய பராமரிப்பு செலவையும், பல மணி நேரம் உற்பத்தி திறனையும் பாதிக்கும்.
இதனால்தான், இந்த பணியைக் கண்கானிக்கும் வகையில் ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது தொடர்ந்து கண்கானித்து சிறு தவறு ஏற்பட்டாலும் அதை உடனடியாக சரி செய்துவிடும். இது செலவு குறைந்த செயல்பாடாக உள்ளது. இதனாலேயே பிஎம்டபிள்யூ ஏஐ தொழில்நுட்பத்தை வாகன உற்பத்தியில் ஆதரிக்கத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனிதர்களுக்கு பல விஷயங்களில் ஆப்பு வைக்கும் விதமாக ஏஐ தொழில்நுட்பம் அமைந்திருக்கின்றது. கட்டுரைகளை உருவாக்குதல், பயிற்றுவித்தல் என அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் புரட்சியைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆட்டோ துறையிலும் ஏஐ தொழில்நுட்பம் அதன் பங்களிப்பை வழங்க ஆரம்பித்திருக்கின்றது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பலர் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்கத் தொடங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








