BMW X1 டீசல் காரை ஆல்ரெடி புக் செய்தவர்களுக்கு செம்ம லக்... காரின் விலை லட்சம் ரூபாய்களில் அதிகரிப்பு!!
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) காரின் டீசல் என்ஜின் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
நடைபெறும் 2023ஆம் ஆண்டிற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எக்ஸ்1 எஸ்யூவி காரை மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. எஸ் டிரைவ்18ஐ எக்ஸ் லைன் (பெட்ரோல்) மற்றும் எஸ் டிரைவ்18டி எம் ஸ்போர்ட் (டீசல்) என 2 விதமான வேரியண்ட்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெட்ரோல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

டீசல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையை சற்று அதிகமாக ரூ.47.90 லட்சமாக நிர்ணயித்தனர். இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் எக்ஸ் டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.3 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எக்ஸ்1 டீசல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50 லட்சத்தை கடந்து, ரூ.50.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்1 காரை எஸ்யூவி என இல்லாமல், எஸ்ஏவி என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது.
அதாவது, ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வைகல் என்பது இதன் அர்த்தம் ஆகும். அந்த அளவிற்கு முந்தைய தலைமுறையை காட்டிலும் அளவில் பெரியதாக 2023 எக்ஸ்1 காரை வடிவமைத்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்1 காரை காட்டிலும், 2023 எக்ஸ்1 எஸ்யூவி காரின் நீளத்தில் 53மிமீ, அகலத்தில் 24மிமீ, உயரத்தில் 44மிமீ மற்றும் வீல்பேஸ் 22மிமீ உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காரின் மொத்த தோற்றமும் முன்பை காட்டிலும் நன்கு பெரியதாக மாறியுள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், கிட்னி வடிவில் பெரிய அளவில் கிரில் பகுதி, டிஆர்எல்-களுடன் நேர்த்தியான வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள் இந்த காரின் முகப்பு பகுதியில் வழங்கப்படுகின்றன. 2023 எக்ஸ்1 காரில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்களும், காரின் பக்கவாட்டில் கூர்மையான லைன்களும் இடம்பெற்றுள்ளன. பின்பக்கத்தில், எல்இடி டெயில்லேம்ப்கள் நம்மை வசீகரிக்கின்றன. பின் பம்பரும் சில்வர் நிற ஹைலைட்களுடன் காட்சியளிக்கிறது.
உட்புறத்தில் வளைவான டேஸ்போர்டு புதிய தலைமுறை எக்ஸ்1 காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த டேஸ்போர்டில் உள்ள 10.25-இன்ச் திரை உடன் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியானது, கியர் செலக்டரையும், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பொத்தான்களையும் கொண்டுள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 10.70-இன்ச் திரையை கொண்டதாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் 12-ஸ்பீக்கர் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும் எக்ஸ்1 காரின் கேபினில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரில் 2 என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் ஒன்றான, 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 136 எச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 150 எச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன. இதில் டீசல் என்ஜினை பெறும் எக்ஸ்1 காரின் விலையை மட்டுமே ரூ.3 லட்சம் வரையில் பிஎம்டபிள்யூ உயர்த்தியுள்ளது. இந்த இரு என்ஜின்களுடனும் 7-ஸ்பீடு ட்யூவல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் என்ன தான் பெட்ரோல் கார்களை தயாரிப்பு நிறுவனங்கள் கூவி, கூவி விற்றாலும், மக்கள் பலரது விருப்பம் டீசல் கார்களாகவே உள்ளன. ஆனால் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளினால் சந்தையில் டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், டீசல் கார்களுக்கான தேவை பெரிய அளவில் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில்தான், பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்1 காரின் டீசல் வேரியண்ட்டிற்கான விலையை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









