பெட்ரோல் என்ஜின் உடன் இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார்... விற்பனைக்கு அறிமுகம்!! விலை எவ்வளவு தெரியுமா?

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் (BMW X1 sDrive 18i M Sport) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ எஸ்யூவி காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட் கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. அத்தகைய எம் ஸ்போர்ட் கார்களுள் ஒன்றுதான் தற்போது இந்தியாவில் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரபலமான பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட் ஆகும். புதிய எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் காரில் பிஎம்டபிள்யூவின் பிரத்யேக எம் பிரிவு பாகங்களான முன் & பின்பக்க பம்பர், எம் லோகோக்கள், எம் லெதர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஸ்போர்டியான கேபின் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

bmw x1 sdrive18i m sport launched

இவை தவிர்த்து, பிஎம்டபிள்யூ கனெக்டட் டிரைவ் மென்பொருள் உடன் வளைவான திரை, ஹை பீம் அசிஸ்ட் உடன் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், ஆக்டீவ் இருக்கைகள், டிஜிட்டல் கீ பிளஸ் உடன் கம்ஃபர்ட் ஆக்ஸஸ், ஹர்மன் கார்டன் ஹை-ஃபை சிஸ்டம், ரிவர்ஸில் செல்வதற்கு உதவி போன்ற மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளும் இந்த புதிய எக்ஸ்1 காரில் இடம்பெற்றுள்ளன. புத்தம் புதிய எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எக்ஸ்1 கார் வேரியண்ட்டும் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் காரை அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் மூலமாகவோ அல்லது ஷாப்.பிஎம்டபியூ.இன் என்ற அதிகாரப்பூர்வ பிஎம்டபிள்யூ இணையத்தளம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bmw x1 sdrive18i m sport launched

புதிய எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் காரை அல்பைன் வெள்ளை, ஸ்பேஸ் சில்வர், பிளாக் சாப்பியர், ஸ்ட்ரோம் பே மற்றும் எம் போர்டிமோ நீலம் என்ற பெயிண்ட் தேர்வுகளில் பெறலாம். இதில் அல்பைன் வெள்ளை பெயிண்ட் தேர்வு மெட்டாலிக்-அல்லாத ஷேடில் கிடைக்கும், மற்றவை அனைத்தும் மெட்டாலிக் ஷேடில் கிடைக்கும். அதேபோன்று, உட்பக்க கேபினையும் மோசா அல்லது ஒய்ஸ்டர் அலங்கரிப்பில் பெறலாம்.

இந்த எக்ஸ்1 எம் ஸ்போர்ட் காரில் பல்வேறு அம்சங்கள் பிரிவிலேயே முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் காரில் பிஎம்டபிள்யூ ட்வின் பவர் டர்போ தொழிற்நுட்பத்துடன் 1,499சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 134 எச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 9.2 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

bmw x1 sdrive18i m sport launched

7-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மென்மையான கியர் ஷிஃப்டிங்கை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது அனைத்து கார்களிலும் சர்வீஸ் மற்றும் சர்வீஸ் பிளஸ் என 2 விதமான ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் தொகுப்புகளை தேர்வுகளாக பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. இந்த சர்வீஸ் பேக்கேஜ்கள் காரின் நிலைமையை பொறுத்து சேவையை வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளினால் பெட்ரோல் கார்களின் ராஜ்ஜியம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பயன்பாட்டிற்கு வந்து இருக்கும் மற்றொரு பிஎம்டபிள்யூ பெட்ரோல் கார் தான் எக்ஸ்1 எஸ் டிரைவ் 18ஐ எம் ஸ்போர்ட் ஆகும். இந்த புதிய வேரியண்ட் இந்தியாவில் எக்ஸ்1 எஸ்யூவி காரின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி உள்ளது என்பது மட்டும் உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, May 4, 2023, 20:28 [IST]
English summary
Bmw x1 sdrive 18i m sport launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X