மிக்ஸி கிரைண்டர் மட்டும் தான் மிஸ்ஸிங், ஏகப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமான பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம்40ஐ

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்3 எஸ்யூவி காரின் ஸ்போர்ட்டி வெர்ஷன் காரை இந்திய மார்கெட்டில் இறக்குமதி செய்துள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் 40ஐ என இந்த காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 கார்கள் மிகவும் பிரபலமானவை. இந்த கார்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த காரின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷனாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் 40ஐ என்ற காரை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

bmw x3 m40i launch

இந்த கார் இந்தியாவிற்கு முழுவதும் கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கார் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் புக் செய்யலாம்.

இந்த எக்ஸ்3 எம்40ஐ கார் மொத்தம் 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. ப்ரூக்ளீன் க்ரே மற்றும் பிளாக் சஃபையர் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் உட்புற கட்டமைப்பு கருப்பு நிற சென்ஸாடெக் பெர்ஃபார்ரேட்டட் அப்ஹோல்ஸரியால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

bmw x3 m40i launch

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 360 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சமாக 250 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம்40ஐ காரை பொருத்தவரை முன்பக்கம் ஹைகிளாஸ் பிளாக் கிட்னி கிரில் வழங்கப்பட்டுள்ளது. அதில் எம் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மேட்ரிக்ஸ் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது போக ஹைகிளாஸ் பிளாக் ஓவர்விஎம், பிளாக் க்ரோம் டெயில் பைப்ஸ், 20 இன்ச் எம் லைட் அலாய் வீல்கள், ரெட் கேலிபர் உடன் கூடிய எம் ஸ்போர்ட் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எக்ஸ்3 எம்40ஐ காரின் உட்புறத்தில் எம் லெதர் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது மல்டி ஃபங்சனல் ஸ்டிரிங் வீல், இதில் எம் தையல்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் டிரைவர் சீட் பெல்டில் மேமரி ஃபங்சன் இருக்கிறது. இது போக இந்த காரின் எம் சீட் பெல்ட், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ஸ் லைட்டிங், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பெடல் ஸிவிஃப்டர், பிரேக்கிங் அம்சங்களுடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியன இருக்கிறது.

இந்த காரில் ஆட்டோமெட்டிக் டிஃப்ரென்ஸியல் பிரேக்கிங் சிஸ்டம் எலெக்ட்ரானிக் டிஃப்ரென்ஸியல் லாக் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிஎம்டபிள்யூ 7.0 ஓஎஸ், டயர் லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், பார்க்கிங் அசிஸ்ட் பிளஸ், 16 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மேன் கார்டான் மியூசிக் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் சஸ்பென்சனை பொருத்தவரை எம் ஸ்போ்ட் டிஃப்ரென்ஸியல் அடாப்டிவ் எம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வேரியபிள் ஸ்போர்ட் ஸ்டியரிங், எம் ஸ்போர்ட் பிரேக்குகள், கெஸ்டர் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் புரோஃபசனல், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட்/ஸ்டாப் ஃபங்சன், கிட்னி கிரில் பகுதியில் ஆக்டிவ் ஏர் ஸ்டீம், கம்ஃபோர்ட், எக்கோ, ப்ரோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் + ஆகிய டிரைவ் மோட்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த காரின் விலையைப் பொருத்தவரை இந்தியாவில் ரூ86.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்த காரை முன்னரே சொன்னது போல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புக் செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் இந்தியாவில் அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் கொண்ட கார்களின் ஒன்றாக இருக்கிறது. இதன் விலை காரணமாக விற்பனை குறைவாக இருக்கலாம். ஆனால் காருக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொன்னால் நிச்சியம் அது மிகையில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 12, 2023, 12:40 [IST]
English summary
Bmw x3 m40i launched in india top speed 250 kmph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+