இது காரா இல்ல கப்பலா? பிஎம்டபிள்யூ காரின் இந்த விலையை கேட்டா ஆடிபோயிருவீங்க!வேற லெவல்ல இருக்குது!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்4 எம்40ஐ காரை இந்தியாவில் ரூபாய் 96.20 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் தனது எக்ஸ்4 எம்40ஐ காரின் டீசரை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த காரை தற்போது இந்தியாவில் ரூபாய் 96.20 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மூலம் தனது எக்ஸ்4 மாடல் காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் மீண்டும் என்ட்ரி செய்துள்ளது. இதற்கு முன்னர் விற்பனையான எக்ஸ்4 கார் கடந்தாண்டு நிறுத்தப்பட்டது.

bmw x4 m40i

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்4 காரை எம்40ஐ வேரியண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை தற்போது இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை ஸ்டைலிஷ் கூபே ரக ரூப் லைன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எம்40ஐ ஸ்போர்டியர் வேரியண்ட் லுக்கும் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பிஎம்டபிள்யூவின் எம் கிட்னி கிரில் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அருகே எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு முன் பக்கம் ஒரு போல்டான லுக்கை தருகிறது. பக்கவாட்டை பொருத்தவரை 20 இன்ச் ஜெட் பிளாக் எம் லைட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வீலில் எம் ரக பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

bmw x4 m40i

அதன் கேலிபரில் சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்கும்போது கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது. இந்த கார் சாலையில் வரும்போது நல்ல உயரமான கார் போல இருக்கிறது. பின்பக்கம் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது போக இரண்டு எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரின் அம்சங்களை பற்றி பார்க்கும் போது இதன் உட்புறத்தில் டூயல் ஸ்டோன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. கார்பன் பைபர் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பக்கம் மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்,

bmw x4 m40i

அதே அளவிலான டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் மூன்று ஸோன் கொண்ட ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் இருக்கிறது. இந்த காரின் பின்பக்க சீட்டுகள் சாய்வு வசதி கொண்ட சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் பேனரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5200 முதல் 6500 ஆர்பிஎம் வரை 355 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாகவும் அதே நேரம் 1900 முதல் 5000 ஆர்பிஎம் வரை 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜின் ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 8ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100கி.மீ வேகத்தை வெறும் 4.9நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த காரின் சஸ்பென்ஷனை பொருத்தவரை எம் டிஃப்ரன்சியல்லாக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கார் திருப்பங்களில் வேகமாக திருப்பினாலும் காருக்குள்ளே இருக்கும் பயணிகளுக்கு எந்த வித பாடி ரோலும் இல்லாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பிஎம்டபிள்யூ ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. பல பெரும் பணக்காரர்கள் இந்த காரை வாங்க ஆர்வமாக காத்திருந்தார்கள். தற்போது அவர்கள் கனவை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது. இந்த காரின் விற்பனை கணிசமான அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 21:05 [IST]
English summary
Bmw x4 m40i launched in india starting at rs 96 20 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X