இந்த காரை வாங்க பிரபலங்களே லைன்ல நிக்க போறாங்க! பிஎம்டபிள்யூ செம காரை கொண்டு வரப்போகுது!
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்5 ஃபேஸ்லிஃப்ட் காரை வரும் 14ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச அரங்கில் எக்ஸ் 5 மற்றும் எக்ஸ் 6 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் எக்ஸ் 5 காரின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்5 காரை சர்வதேச அரங்கில் கடந்த பிப்ரவரி மாதம் அப்டேட் செய்து ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகம் செய்தது. இந்த எக்ஸ் 5 ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் காரை இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வரும் 14ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசரை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரை மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் புதிய ஆரோ வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் முன்பக்கம் உள்ள பெரிய கிட்னி கிரில் அதே வடிவமைப்பில் தான் வழங்கப்பட்டுள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஃபேஸ்ஃலிப்ட் காரில் பக்கவாட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை புதிய அலாய் வீல்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. பின்பக்கம் புதிய எல்இடி டெய்ல் டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எக்ஸ் வடிவ கிராபிக்ஸூம் வழங்கப்பட்டுள்ளது. இது தான் இந்த காரின் வெளிப்புற தோற்றத்தில் உள்ள மாற்றம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 பேஸ் லிப்ட் காரில் உட்பக்கம் 12.3 இன்ச் டிஜிட்டல் கண்ட்ரோல் மற்றும் 14.9 இன்ச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய பொருத்தப்பட்டுள்ளது இந்த இரண்டும் ஐடிரைவ் ஓஎஸ் 8 தளத்தில் இயங்குகிறது.சென்டர் கவுன்சோலில் பல சொகுசு வசதிகள் இருக்கிறது முக்கியமாக பானரோமிக் சன்ரூஃப் மற்றும் எல்இடி லைட் ஆகிய உள்ளன.
சென்டர் கன்சோலில் கிளாஸ் கட் கண்ட்ரோல் பட்டன்கள் மற்றும் ஆப்ஷனல் பக்கெட் சீட்டுகள் உள்ளன. மேலும் இந்த காரில் அதிகமான லெதர் அப்ஹோல்சரி ஆப்ஷன்கள் இந்திய வெர்ஷனில் மட்டும் வரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் ஒரு சொகு பங்களா போல தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ஃபேஸ்ஃலிப்ட் காரின் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த இரண்டு இன்ஜின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவாக அனைத்து வீல்களுக்கும் பவரை கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சர்வதேச மாடலில் 4.4 லிட்டர் வி8 மற்றும் ஹைபிரிட் பவர் ஆப்ஷன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன ஆனால் இது இந்திய வெர்ஷனில் இந்திய வருஷனில் இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மட்டுமே இஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது சர்வதேச அளவிலான இஞ்ஜினை இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கொண்டு வரவில்லை.
இந்த பிஎம்டபிள்யூ x5 ஃபேஸ்லிஃப்ட் கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆடி க்யூ 5, வால்வோ எக்சி90, ஜாகுவார் எஃப்6, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது இந்த காரின் வருகைக்காக பிஎம்டபிள்யூ ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் இந்த கார் அறிமுகமாகும் போது இந்த காரின் புக்கிங் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் சர்வதேச அரங்கில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய காரை தற்போது இந்திய வெர்ஷனிற்கு மாற்றி இந்தியாவிற்காக அறிமுகப்படுத்துகிறது. இதில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. இந்த காரின் வருகை இந்திய மார்க்கெட்டில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்


Click it and Unblock the Notifications









