62கிமீ மைலேஜ் தரும் பிஎம்டபிள்யூ கார்.. ஓனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்! நம்ப முடியாமல் திணறும் கார் காதலர்கள்!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் சூப்பரான சொகுசு கார் மாடல்களில் எக்ஸ்எம் (XM)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக சொகுசு கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை பிளக்-இன் ஹைபிரிட் அம்சத்துடன் பிஎம்டபிள்யூ விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்த கார் எரிபொருள் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும். இதற்காக ஐசி மோட்டார் மற்றும் மின்சார மோட்டார் என இரண்டும் தனி தனியாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், சிறிய பேட்டரி பேக்கையும் மின்சார மோட்டார் தடையின்றி இயங்க ஏதுவாக இந்த காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்களே பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் சொகுசு காரை லிட்டர் ஒன்றிற்கு 62 கிமீ வரையில் மைலேஜ் தரும் காராக மாற்றி இருக்கின்றது.
இந்த அதீத மைலேஜ் திறனை யுட்யூபரும், எக்ஸ்எம் கார் உரிமையாளருமான ஓர் நபர் தெரிவித்து இருக்கின்றார். அவருடைய நீண்ட நாள் விருப்பமாக இந்த கார் இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே சமீபத்தில் அக்காரை அவர் வாங்கி இருக்கின்றார். பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் சொகுசு காரின் விலை ரூ. 3 கோடி ஆகும்.

இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் வ்ளாக்கருக்கு எட்டாக் கனியாக இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே எப்படியோ சமாளித்து தான் இந்த காரை தற்போது வாங்கிவிட்டதாகக் கூறி இருக்கின்றார். இந்த நிலையிலேயே அந்த காரின் ரிவியூ-வையும் ஓர் ஓனராக இருந்து வெளியிட்டு இருக்கின்றார்.
தான் போராடி இந்த காரை பெற்றதற்கு உகந்த, அதாவது, தரமான சொகுசு கார் இது என்று அவர் குறிப்பிட்டு இருக்கின்றார். மிக முக்கியமாக இதன் பிளக்-இன் ஹைபிரிட் டெக்னாலஜி வாயிலாக தான் லிட்டர் ஒன்றிற்கு 62 கிமீ வரை ரிட்டர்ன் மைலேஜ் பெறுவதாகக் கூறி இந்தியர்கள் பலரை பொறாமையின் உச்சத்திற்கேக் கொண்டிருக்கின்றது.

தனியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ஐசிஇ கார்களே பிளக்-இன் ஹைபிரிட் என குறிப்பிடப்படுகின்றது. அதேவேளையில், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என்கிற வகைகளிலும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கார்களில் வழங்கப்படுகின்றது. இந்த இரண்டும் காரின் இயக்கத்தில் இருந்தே தேவையான மின்சாரத்தை உருவாக்கி பேட்டரிகள் வாயிலாக சேகரித்துக் கொள்ளும்.
இத்தகைய அம்சம் கொண்ட காரே டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகும். ஆனால், இந்த காரில் இருந்து பலபடிகள் மேம்பட்டதாகக் காட்சியளிக்கின்றது பிஎம்டபிள்யூ எக்ஸ்எம். இந்த கார் அதிகம் மைலேஜ் தரக் கூடியது மட்டுமல்ல. அதிக சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் அது தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

அதிக சொகுசான இருக்கைகள், மிகவும் அமைதியான பயணம் (உட்புறத்தில் துளியளவும் வெளிப்புற சத்தம் கேட்காது), 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இதைவிட பெரிய அளவுள்ள டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரையின் அளவு 14.9 அங்குலம் ஆகும்.
இதுதவிர, இந்த காரில் பாட்டில் தாங்கிகள், ஆம்பியன்ட் லைட், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவையும் பிஎம்டபிள்யூ எக்ஸ்எம்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமில்லைங்க இந்த கார் வெளிப்புற தோற்றத்திலும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.
எல் வடிவ லைட்டுகள் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், எம் வடிவ கிட்னி கிரில், பெரிய பம்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக் ஆகிய அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த காரில் 22அங்குல வீல் அல்லது 23அங்குல வீல் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதன் கவர்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக காரின் குறிப்பிட்ட பகுதிகளில் குரோம் இன்செர்ட்டுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மூன்று கோடி ரூபாய் விலைக் கொண்டதாக இந்த கார் காட்சியளித்தாலும் நல்ல ஒர்த்தான கார் என அந்த வ்ளாக்கர் வீடியோவில் பல முறை கூறி இருக்கின்றார். ஆனால், இந்த அளவு தொகையை அனைவராலும் செலவழிக்க முடியாது என்பதே உண்மை. அதேவேளையில், இந்த அளவு இல்லை என்றாலும் போதுமான அளவு மைலேஜை வழங்கும் பட்ஜெட் கார்கள் பல இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









