Bolero on Railway Track உண்மையான ஆஃப் ரோடு இதான்! காஷ்மீரில் கெத்தாக நின்ற மஹிந்திராவின் பெயர்!

மஹிந்திராவின் பொலிரோ கார் ஒரு ரக்கட் ரக எஸ்யூவி கார், இந்த காரைக் காடு, மலைகளில் கூட ஓட்டி செல்ல முடியும் எனச் சொல்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்த பொலிரோ காரை ரயில்வே டிராக்கில் ஓட்டிச் சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

காஷ்மீர் பகுதியில் உள்ள சின்னப் என்ற ஆற்றங்கரையில் உலகின் உயரமான ரயில்வே ஆர்ச் பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக அதிகாரிகள் ஆய்விற்குச் செல்வதற்காக மஹிந்திரா பொலிரோ காரை ரயில்வே டிராக்கில் ஓடும்படி மாற்றியமைத்துப் பயன்படுத்தி வருகிறது.

mahindra-bolero-converted-into-rail-vehicle-1

கிட்டத்தட்ட இந்த பாலம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது நிலையில் டிராக் மற்றும் பாலத்தின் மற்ற பகுதியைக் கண்காணிப்பதற்காக அதிகாரிகள் இந்த காரில் ஏறி டிராக்கில் பயணம் செய்கின்றனர். இந்த பாலம் உலகிலேயே உயரமான ரயில் பாலமாகும் ஆற்றிலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயரம் ஈஃபிள் டவரை விட அதிக உயரமாகும்.

இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா அதில் : "சுதந்திர இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் ஆஃப்ரோடு வாகனங்களை உற்பத்தி செய்ததற்கான நோக்கம் நிறைவேறியுள்ளது. இதை நாங்கள் இந்தியாவில் பாதைகளே இல்லை பகுதிகளிலும் பாதைகளை அமைத்துத் தொடர்ந்து வரும் வாகனங்களுக்கு வழியைக் காட்டும் என நினைத்தோம் அது நடந்துள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

mahindra-bolero-converted-into-rail-vehicle-2

மஹிந்திரா நிறுவனம் ஆஃப் ரோடு வாகனங்களுக்குப் பெயர் பெற்றது. பொலிரோ தவிர இந்நிறுவனத்திடம் தார், எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் ஆகிய கார்களில் ஆஃப்ரோடு அம்சங்கள் இருக்கிறது. பொலிரோவை பொருத்தவரை 3 வரிசை சீட்டர் கொண்ட பிரபலமான கார், ஒரு காலத்தில் மஹிந்திரா நிறுவனத்திலேயே அதிகமாக விற்பனையாகும் கார் இது தான்.

பொலிரோ காரில் பல தொழிற்நுட்ப அம்சம் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த காரின் அம்சம் அதிக பிராக்டிக்கல் மற்றும் அதிக இட வசதி மூலம் அதிகமான நபர்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்ல ஏற்ற கார் இது. இந்த காரை இங்கு ரயில்வே பாலத்தில் பயன்படுத்தியதுபோல பல ஆஃப்ரோடு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை பொருத்தவரை 1.5 லிட்டர் எம் ஹாக் 75 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 75 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இன்னும் சில தனங்களில் இந்த பொலிரோ எஸ்யூவி காரை மேம்படுத்தவுள்ளது.

புதிய பொலிரோ காரை ஸ்கார்பியோ என் காரை அந்நிறுவனம் தயாரிக்கும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த காரில் லேடர் ஆஜ் ஃபிரேம் சேஸிஸ் மற்றும் அப்டேட்ட செய்யப்பட்ட டிசைன் உடன் இந்த காரை விரைவில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ் ஸ்பார்க் நினைப்பது என்ன?: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவை அடிப்படையாக கொண்டு இயங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் பெயர் பெற்ற நிறுவனமாக மாறியுள்ளது.இந்நிறுவனம் தொடர்ந்து தரமான தயாரிப்புகளை வழங்குவது மூலம் தனக்கென ஒரு பெயரை எடுத்துள்ளது. இதை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து வழங்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 29, 2023, 9:20 [IST]
English summary
Bolero on railway track in kashmir is the real off road
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+