இவங்க திமுக ஆளுகளா!.. கருப்பு-சிவப்பு நிற பலூன்களுடன் மகளுக்கு சொகுசு காரை பரிசளித்த பிரபல நடிகை!

"இவங்க திமுக ஆளுங்க" என கூறும் அளவிற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று அமைந்து இருக்கின்றது. அப்படி என்ன வீடியோ அது?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் பிபாஷா பாஷு-ம் ஒருவர் ஆவார். இவரே ஆடி க்யூ 7 (Audi Q7) சொகுசு எஸ்யூவி ரக காரை தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சொகுசு காரை தன்னுடைய மகளுக்காக அவரும், அவருடைய கணவரும் இணைந்து வாங்கி இருக்கின்றனர்.

Bipasha basu

இவர்களின் குழந்தை பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருக்காகவே புதிய கார் வாங்கப்பட்டு இருக்கின்றது. பிபாஷா பாஷு போலவே அவரது கணவர் கரன் சிங் குரோவரும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் மிகப் பெரிய வாகன காதலர்களாக இருக்கின்றனர். இதன் காரணத்தினாலேயே அவர்களிடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே அவர்கள் புதிய லக்சூரி காரை டெலிவரி பெற்றிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த நடிகை இடத்தில் ஆடி க்யூ7 பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிதாக மற்றுமொரு க்யூ7 சொகுசு காரை பிபாஷா பாஷு வாங்கி இருக்கின்றார்.

Bipasha basu and new car

இவரிடத்தில் தற்போது பயன்பாட்டில் இருப்பது பழைய மாடல் க்யூ7 ஆகும். இதனை அப்கிரேட் செய்யும் விதமாகவே புதிய க்யூ7 தற்போது களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார்கள் மட்டுமின்றி இன்னும் சில விலை உயர்ந்த சொகுசு கார்கள் பிபாஷா பாஷு மற்றும் அவரது கணவர் வசம் பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், டொயட்டா ஃபார்ச்சூனர், ஃபோக்ஸ்வேகன் பீட்டில் உள்ளிட்ட கார் மாடல்கள் இந்த பிரபலங்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவையே பிபாஷா பாஷு மற்றும் அவருடைய கணவர் கரன் சிங் குரோவர் இவர்கள் இருவரும் மிகப் பெரிய கார் பிரியர்கள் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.

பிபாஷா பாஷு வாங்கி இருக்கும் ஆடி க்யூ7 சொகுசு காரின் ஆரம்ப விலை ரூ. 84.70 லட்சம் ஆகும். இதன் உயர்நிலை தேர்வுக்கு ரூ. 92.30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே நடிகை வாங்கி இருக்கின்றார்.

இந்த காருக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்திய பிரபலங்கள் பலர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் வரிசையிலேயே இரண்டாவது முறையாக பிபாஷா பாஷு குடும்பம் தற்போது மீண்டும் இணைந்து உள்ளது.

இவர்கள் காரை டெலிவரி எடுக்கும்போது சிவப்பு மற்றும் கருப்பு நிற பலூன்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. அலங்காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதேபோல், சிவப்பு நிற துணியைக் கொண்டே கார் போர்த்தப்பட்டு இருந்தது. இதுவும் ஏதேச்சையாக நடந்த செயல் மட்டுமே ஆகும். ஆடி க்யூ7 இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடக்கின்றது.

பிரீமியம் பிளஸ், டெக்னாலஜி மற்றும் டெக்னாலஜி டபிள்யூ/ஓ மேட்ரிக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, இரு விதமான மோட்டார் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. 3.0 லிட்டர் சிக்ஸ் சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான தேர்வுகளே இதில் வழங்கப்படுகின்றது. இந்த இரண்டு மோட்டாரிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கருப்பு சிவப்பு நிறம் பொதுவாக பயன்படுத்தப்படும் நிறங்களில் ஒன்றாகும். இந்த நிற பலூன்களே பிபாஷா பாஷு காரை டெலிவரி பெற்றப்போது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கார் முகப்பு பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதி என சுற்றிலும் இந்த நிற பலூன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 15:09 [IST]
English summary
Bollywood actress bipasha basu gifts audi q7 to daughter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+