மரணமாஸான அறிவிப்பை வெளியிட்ட சிட்ரோன் நிறுவனம்! நாம எல்லாம் இந்த நாளுக்காக தான் காத்திட்டு இருந்தோம்!
சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் காரின் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இந்த காரின் டெலிவரி வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 25000 முன்பணம் கொடுத்து இந்த காரை தற்போது புக்கிங் செய்யலாம் என சிற்றூர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான புக்கிங் குறித்த விவரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தற்போது தான் தன் கால் தடத்தை பதித்து வரிசையாக தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாக இருப்பதாக விமர்சகர்கள் மத்தியில் பேச்சு எழுந்து வருகிறது. இதனால் சிட்ரோன் நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகிறது.

இந்த சிற்று நிறுவனம் தனது சி3, இசி3 என்ற ஹேட்ச்பேக் கார்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த சி3 காரை மேம்படுத்தி காம்பேக்ட் எஸ்யூவி காராக உருவாக்கியுள்ளது. இந்த காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த காருக்கான விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் தற்போது தனது சி3 ஏர் கிளாஸ் காருக்கான புக்கிங் துவங்கி உள்ளது. அதன்படி சிட்ரோன் ஷோரூம்களிலும் அந்நிறுவனத்தின் வெப்சைடுகளிலும் இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரை புக்கிங் செய்ய முடியும். வெறும் ரூபாய் 25000 முன்பணம் செலுத்துவதன் மூலம் இந்த காரை நீங்கள் புக் செய்ய முடியும் என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிட்ரோன் நிறுவனம் இந்த சி3 ஏர்கிராஸ் காரை 90% இந்தியாவிலேயே உள்ள உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கியுள்ளது. இதனால் இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் இப்படியான யுக்தியை கையாண்டுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கியா செல்டோஸ்,ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா எலவேட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.
இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொறுத்தவரை ஒரே ஒரு வேரியன்ட் தான் இருக்கிறது. ஒரு வேரியன்டிலும் இரண்டு சீட்டிங் ஆப்ஷன்கள் உள்ளன. ஐந்து சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இரண்டு சீட்டிங் ஆப்ஷன்களிலும் ஒரே இன்ஜின் தான் இருக்கிறது.1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 108 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தற்போது இல்லை விரைவில் இது அப்டேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் உட்புறத்தை பொருத்தவரை 10இன்ச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இருக்கிறது. இதுபோக டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இரண்டு மற்றும் மூன்றாவது வரிசை சீட்டிற்காக ரூப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ஏசி வென்ட்கள் மற்றும் ரியல் டிஃபாகர் இருக்கிறது.
இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் கார் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மோனோ டோன் மற்றும் டூயல்டோன் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட்டாக இருக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 9.9 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.
இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் கார் குறித்த நிறுவனத்தின் சிஇஓ ரொனால்ட் பவுசரா கூறும்போது:" சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த கார் ரூபாய் 9.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதன் விலை குறைவாக நாங்கள் விற்பனைக்கு கொண்டு வர முடிகிறது.வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு கருத்துக்களை கேட்ட பின்பு தான் இந்த கார்களை வடிவமைத்துள்ளோம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களின் இதயத்தில் இந்த கார் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாக இருப்பதாக மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பேச்சு எழுந்து வருகிறது. விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியிலும் நிரந்தர இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications









